செவ்வாய், 6 ஜனவரி, 2015

தேவை!பள்ளியிலே படிக்கும் போது
பாஸ்மார்க்கு வாங்கும் வரை

கல்லூரியில் சேர்ந்து நடக்க
காதலுடன் கிடைக்கும் வரை

படிப்பிற்கே ஏற்ற வேலை
பகட்டாகக் கிடைக்கும் வரை

குடும்பத்தை நடத்து வதற்கு
குணவதியாய்க் கிடைக்கும் வரை

தேடியேநாம் முயன்று வந்தோம்
தேடலினை அடையும் வரை!

தேவைகள் இல்லை என்றால்
தேடுதலும் தேவை இல்லை!

தேடாமல் கிடைத்தி ருந்தால்
திடமான மதிப்போ இல்லை!

அதனால்...

தேவையென்ற ஒன்றை நாமே
தேடியதைத் தொடர வேண்டும்!

அருணா செல்வம்

06.01.2015

14 கருத்துகள்:


 1. வணக்கம்!

  கலைமகளை வேண்டித் தலைசுமக்கும் பாட்டி
  நிலையுயர வேண்டும் நிலைத்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப தேவை தான் இந்த தேவை:)))))) தோழி சூப்பர்!

  பதிலளிநீக்கு
 3. அருமை,

  உண்மை. சில சமயங்களில் தேடியது கிட்டியவுடன் அதன்மீதான கவர்ச்சியும் குறைந்து விடுகிறது!

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை சகோதரி! தேவைகள் என்ற ஒன்று இருந்தால்தான் தேடுதலும் வளர்ச்சியும் இருக்கும். அவை தேவையான தேடுதல்களாக இருந்தால் மட்டுமெ!!!

  பதிலளிநீக்கு
 5. ரசித்தேன் !வாழ்த்துக்கள் தோழி .

  பதிலளிநீக்கு
 6. கல்லூரியில் சேர்ந்து நடக்க
  காதலன்/காதலி கிடைக்கும் வரை என்று வந்திருக்க வேண்டுமோ?

  பதிலளிநீக்கு
 7. /// தேடாமல் கிடைத்தி ருந்தால்
  திடமான மதிப்போ இல்லை!//

  அதனால்தான் என்னவோ பெண்கள் ஆண்களை தேட வைக்கிறார்களோ?

  பதிலளிநீக்கு
 8. // குடும்பத்தை நடத்து வதற்கு
  குணவதியாய்க் கிடைக்கும் வரை//

  குடும்பத்தை நடத்த நல்ல வேளையுடன் சம்பளம் கிடைத்தால்போதுமே

  பதிலளிநீக்கு
 9. சிறப்பான கருத்தை சொல்லும் கவிதை! தேடல் இல்லையேல் வாழ்க்கையும் இல்லைதான்!

  பதிலளிநீக்கு
 10. சிறப்பான கருத்தை சொல்லும் கவிதை! தேடல் இல்லையேல் வாழ்க்கையும் இல்லைதான்!

  பதிலளிநீக்கு
 11. முதல் முறை தேடிப் படித்ததோடு சரி. அப்புறம் அது தேடாமலே கிடைக்கிறது; சுவைக்கிறது.

  உங்கள் கவிதையைத்தான் சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. தேவையைத் தேடித் தந்த அருமையான சிந்தனை!

  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு