புதன், 10 டிசம்பர், 2014

நினைவுகள்!!இன்று வாழும் வாழ்க்கையிலே
    இனிக்கும் இன்பம் இருந்தாலும்
அன்று வாழ்ந்த வாழ்வதனின்
    அழிக்க முடியா நினைவுகளே!
நன்றே அல்ல என்றாலும்
    நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
    இயங்கிச் சுற்றும் நினைவுகளே!

பிள்ளை நெஞ்சம் புதுவகையைப்
    பிரித்துத் தெளிந்த பொழுதினையும்
உள்ளம் உவகை கொண்டவுடன்
    கொள்ளைச் சிரிப்பாய்ச் சிரித்ததையும்
கள்ளம் இல்லா அவ்வயதில்
    காதல் வந்த பொழுதினையும்
தள்ளி விடவே முடியாமல்
    தானே சுற்றும் நினைவுகளே!

சொல்லிக் கொடுத்த ஆசானும்
    சொக்க வைத்த செந்தமிழும்
வல்ல புகழின் முதலடியாய்
    வாய்க்கப் படைத்த நற்கதையும்
மெல்ல நினைக்க முகஞ்சிவக்
    மேனி தொட்ட அந்நாளும்
நல்ல சுவையாய் முன்வந்து
    நடன மாடும் நினைவுகளே!

நல்லோர் என்று நினைத்தவரோ
    நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
    கருணை அற்று நடந்ததையும்
பொல்லாப் பழியைப் பிறர்சுமக்கப்
    பொய்மேல் பொய்யாய்ச் சொன்னதையும்
நில்லாக் காலச் சுவடுகளாய்
    நெஞ்சில் பதிந்த நினைவுகளே!

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
    மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
    எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
    உலகிற் கதனைக் காட்டாமல்
மண்ணில் மறையும் நாள்வரையில்
   கண்ணுள் மின்னும் நினைவுகளே!

அருணா செல்வம்

09.12.2014

41 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

நினைவுகள் காலம் முழுவதும் சொந்தமே,,, அருமை
த.ம.2

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. நல்லதை நினைவில் வைத்து அல்லாததை நினைவிலிருந்து தள்ளுவோம். மறதி இருந்தால் அது வரம்தான்.

கவியாழி சொன்னது…

நினைவுகள் உயிருள்ளவை .

'பரிவை' சே.குமார் சொன்னது…

மண்ணில் பிறந்த மாந்தர்க்கு
மறத்தல் என்ற ஒன்றிருந்தும்
எண்ணிப் பார்க்க எழுந்துவரும்
எண்ணில் அடங்கா நினைவுகளே!
உண்மை மட்டும் அதில்காட்டி
உலகிற் கதனைக் காட்டாமல்
மண்ணில் மறையும் நாள்வரையில்
கண்ணுள் மின்னும் நினைவுகளே!

அற்புதம்... நினைவுகள் என்றும் நமது சொத்து... மறக்க வேண்டியவைகளை மட்டுமே மறக்கடித்து நினைவுகளை எப்போதும் மீட்டிப் பார்க்க வைக்கும் வாழ்க்கை.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

சுற்றும் நினைவுகளைக் கற்கும் மனத்துக்குள்
முற்றும் இனியபலா! முத்தமிழ்மேல் - பற்றுடை
நல்லருணா செல்வம் நவின்ற விருத்தத்தைச்
சொல்..உன்..நா ஊறும் சுவை!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

நம்பள்கி சொன்னது…

கவிதை அழகு!
அந்த பெண்னும் அழகு!
உலகத்திலேயே தாவணி மற்றும் புடவை தான் அழகான டிரஸ்! ஏன் செக்ஸ்சியான டிரஸ் என்று எல்லோரும் சொல்வார்கள்.
இந்த படம் பல கவிதைகள் சொல்லும்!

இளமதி சொன்னது…

மறக்கவொண்ணா அருமையான நினைவுகள்!

சொல்லிய விதம் மிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள் தோழி!

கோமதி அரசு சொன்னது…

நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
இயங்கிச் சுற்றும் நினைவுகளே!//

உண்மைதான்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நல்லவை கேட்டவை இரண்டும் நினைவில் இருந்து நமக்கு இன்பமும் துன்பமும் தருகின்றன. நினைவுகளை வருடி சென்ற கவிதை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///நல்லோர் என்று நினைத்தவரோ
நயமாய்த் துரோகம் செய்ததையும்
கல்லாய் இதயம் கொண்டவர்கள்
கருணை அற்று நடந்ததையும்///
இன்றைய உலகம் இதுதான் சகோதரியாரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 9

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லவைகளையே மட்டும் நினைவில் வைப்போம் சகோதரி...

Unknown சொன்னது…

சுற்றும் உலகம் தன்னோடு
சுற்றும் நினைவுகள் நம்மோடு
கற்றத் தமிழில் கவிபாடி
களிப்பாய் மகளே புகழ்நாடி!

நம்பள்கி சொன்னது…

Tamilmanam + 1

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அந்த நாள் நினைவுகளே இனிமைதான்! அதை கவிதையாக்கியவிதம் அருமை! வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நாமே விலக்க நினைத்தாலும்
என்றும் இதயம் உள்புகுந்தே
இயங்கிச் சுற்றும் நினைவுகளே!// ஆமாம்! குளத்தில் கல் எறிந்தால் பரவும் வட்ட வட்ட அலைகள் போல நினைவலைகள் சுழன்று ..மறக்க முடியாத நினைவுகளாய் மனதில் செட்டில் ஆகிவிடுகின்றன....

அருமையான கவிதை சகோதரி!

'பசி'பரமசிவம் சொன்னது…

இதயத்தின் உட்புகுந்து இயங்கிச் சுழன்று
நடனம் புரிந்துநற் றமிழ்போல் இனித்துக்
கண்ணில் மின்னிய நினைவுகளை நல்ல
கவிதை ஆக்கிய அருணா வாழ்க!

அருணா செல்வம் சொன்னது…

உண்மை தான் கில்லர் ஜி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக் கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

கோவி சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பிறகு வருகிறேன்.. படித்துக்கொண்டிருக்கிறேன் கவிதைகளை..

Unknown சொன்னது…

நினைவுகள் தொடர்கதை ....எல்லா கதையிலேயும் வில்லன்கள் உண்டுதானே :)
த ம 14

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை சகோ..... பாராட்டுகள்.

த.ம. +1

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொன்னது உண்மை தான் நம்பள்கி.
புடவை செக்ஸியான டிரஸ் தான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நல்லவை அல்லாததை மறக்கவும் முடியாதே அண்ணா.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கவிதை வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அட.
நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பரமசிவம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வாங்க கோவி சார். நலமா?

பொறுமையாகப் படித்துப் பாருங்கள்.
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வில்லன் இல்லையென்றால் வாழ்க்கை போர் அடித்துவிடுதோ பகவான் ஜி?

கருத்திற்கும் மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

இளமதி சொன்னது…

வணக்கம் தோழி!

நலமாக இருக்கின்றீர்களா?...

இன்று எங்கள் ஐயா வலைச்சரத்தில் உங்களை
அறிமுகப்படுத்தியுள்ளார். காண வாருங்கள் தோழி!