ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

நீ.. வேண்டுமடி!! (கவிதை)
அழகாக ஒளிர்கின்ற
   அருஞ்சொற்கள் அமுதமடி!
குழலாக இசைக்கின்ற
    கொஞ்சுமொழி இனிமையடி!
பழமாக இனிக்கின்ற
    பாடல்கள் புதுமையடி!
நிழலாகத் தொடர்கின்ற
    நினைவலையால் தனிமையடி!

 கற்பனையாம் குதிரைகளின்
    காலெல்லாம் உடைந்துவிட
பற்பலவும் எண்ணுகின்ற
    பறவைமனம் சோர்ந்திடுதே!
விற்கின்ற பொருளென்றால்
    விலைகொடுத்து வாங்கிடலாம்!
பொற்றமிழ்க் கவிபிறக்கப்
    பொன்மகள்..நீ வேண்டுமடி!


அருணா செல்வம்

18 கருத்துகள்:

 1. கவிஞா் அருணா அவா்களுக்கு வணக்கம்

  மின்வலை கண்டேன்
  இன்நிலை கொண்டேன்!
  நன்கலை வளா்க!
  உன்நிலை உயா்க!

  நிழலாகத. தொடா்கின்ற
  நினைவலையால் தனிமையடி!
  பழமாக இவ்வடியும்
  படா்சுவையைப் படைத்ததுவே!
  விழலாக கிடப்பவுனும்
  விழிவலையில் சிக்குண்டால்
  அழகாக கவிதைகளை
  ஆரமுதாய் அளிப்பானே!

  அன்புடன்
  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா். கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கவிஞர் அவர்களே.

   உங்களை என் வலைத்தளத்தில்
   கண்டதும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

   வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க.

   நீக்கு
 2. விற்கின்ற பொருளென்றால்
  விலைகொடுத்து வாங்கிடலாம்!
  பொற்றமிழ்க் கவிபிறக்கப்
  பொன்மகள்..நீ வேண்டுமடி!//

  அருமையான கவிதை
  அருள்பவளாய் அவளிருக்க
  சிதறாது பெற்று கொடுக்க நீங்கள் இருக்க
  ரசித்து மகிழ தயாராக நாங்களிருக்க
  தொடரட்டும் பல்லாண்டு இந்த மகா கூட்டணி

  பதிலளிநீக்கு
 3. /// விற்கின்ற பொருளென்றால்
  விலைகொடுத்து வாங்கிடலாம்!
  பொற்றமிழ்க் கவிபிறக்கப்
  பொன்மகள்..நீ வேண்டுமடி! ///

  சிலிர்க்க வைக்கும் வரிகள்...

  தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 4. அழகான வரிகளில் அழகான கவி ......தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 5. அழகாக ஒளிர்கின்ற அருஞ்சொற்கள் அமுதம்! அழகிய கவிதை! பாராட்டுக்கள்!

  இன்று என் தளத்தில்
  அஞ்சு ரூபாய் சைக்கிள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.

   நீக்கு
 6. அழகான வரிகள். கடைசி வரிகள் அருமையாகவுள்ளது.

  பதிலளிநீக்கு
 7. இனிக்கின்ற சந்தக் கவிதை. பறவை மணம் அற்புத வார்த்தை பிரயோகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “பறவை மனம்“ வார்த்தையை ரசித்திருக்கிறீர்கள்.
   நன்றிங்க முரளிதரன் ஐயா.

   நீக்கு
 8. பொற்றமிழ்க் கவிபிறக்கப்
  பொன்மகள்..நீ வேண்டுமடி!

  அருமை சகோ. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. இந்த பதிவை-
  வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!

  வலைச்சரத்திற்கு -
  வருகை தாருங்கள்!
  தலைப்பு;
  கவிதை......

  http://blogintamil.blogspot.sg/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தேன்.. பார்த்தேன்...!

   உங்களின் கவிதையும் அழகாக உள்ளதுஃ
   நன்றிங்க நண்பரே.

   நீக்கு
 10. தாங்கள் உடன் வந்து அன்புடன்
  தகவல்கள் சொன்னதற்கும்
  வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க தனபாவன் ஐயா.

  பதிலளிநீக்கு