வியாழன், 2 ஜனவரி, 2014

காதலில்லா உன்நினைவு!


கண்ணிருந்தும் குருடாக்கி!
    காதிருந்தும் செவிடாக்கி!
மண்ணிருந்தும் தரிசாக்கி!
    மலரிருந்தும் வீணாக்கி!
பண்ணிருந்தும் வாய்மூடி!
    பா..இருந்தும் கைமூட
என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?

நிலவில்லா வானமாக!
    நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
    மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக!
ங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!

அருணா செல்வம்

17 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

\\ விலங்கில்லாக் காடாக!
விளைச்சலில்லா நிலமாக!
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
காதலில்லா உன்நினைவால்!//

காதலில்லா ஏக்கத்தை கவிதையில் அருமையாக வடித்திருக்கிறீர்கள்.

தங்களக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

unmaiyanavan சொன்னது…

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
கவிதை சிறப்பாக உள்ளது.. வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி சொன்னது…

காதலில்லா வாழ்வேது கண்டதால் பாடுகிறாய்
ஆதலால் ஆழ்துய ராற்று!

வணக்கம் தோழி! நலமா...
அழகிய காதல் கவிதை! அருமை!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

த ம.3

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிரமம் தான்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

Avargal Unmaigal சொன்னது…

//மதுவில்லா விருந்தாக!////
ஓ.....அங்கேயும் அப்படிதானோ

Avargal Unmaigal சொன்னது…

காதல் உணர்வுகள் என்றும் நிலைத்திருக்கும் அதனால் ஏக்கங்களும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

நம்பள்கி சொன்னது…

[[ நிலவில்லா வானமாக!
நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
விளைச்சலில்லா நிலமாக!
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
காதலில்லா உன்நினைவால்!]]

அருணா! அருமை +1
ஒரு கேள்வி!
தலைப்புக்கும் கவிதைக்கும் பொருத்தம் என்றாலும் இந்த கடைசி வரி இப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

"காதலில்லா" உன்நினைவால்! என்பதற்கு பதிலாக..
"காதலுடன்" உன்நினைவால்!

உங்கள் பதிலை அறிய ஆசைப்படுகிறேன்!

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவிதை அருமை.......

பாராட்டுகள்.

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


தமிழ்மணம் 6

ஒருதலைக் காதலை ஓதும் கவிதை
அருஞ்சுவை தேங்கும் அணை!

சீராளன் சொன்னது…

தெள்ளுதமிழ் சேர்த்து தெவிட்டாத தேன்சுவையில்
வள்ளுவனின் வாய்மொழிந்த பாபோலே - உள்ளத்தில்
உள்ளுறைந்த காதல் உயிர்க்கும் கவிகண்டேன்
கள்ளுண்ட வண்டாய் களித்து!

அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Yarlpavanan சொன்னது…

சிறந்த கற்பனை
அழகான கவிதை

Iniya சொன்னது…

அழகிய கவிதை இசைத்தது
இயல்பினை இனிது.....!
தொடர வாழ்த்துக்கள்.....!
வலைச்சரம் வாயிலாக வந்தேன். என் முதல் வருகை இனி தொடரும்.

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

அழகான கவிதை...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!

ஜெயசரஸ்வதி.தி சொன்னது…

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!