வெள்ளி, 15 மார்ச், 2013

நட்புறவுகளுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி..!!நட்புறவுகளுக்கு வணக்கம்!!
      உங்களுக்கெல்லாம் இது அதிர்ச்சியான செய்தியா என்று எனக்குத் தெரியவில்லை.
    ஆனால் எனக்கு இது ஓர் அதிர்ச்சியான செய்தி தான்..!!


    என்னவென்றால்... நம் அன்பின் சீனா ஐயா... என்னை வரும் திங்கள் முதல் ஒரு வார காலம் வலைச்சரத்தின் பொறுப்பாசிரியர் பதவியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்.
     “இது எனக்குத் தேவையா...?“ என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். “நாமே ஓர் அறிமுகம். நம்மை யாராவது அறிமுகப்படுத்த மாட்டார்களா...“ என்று நினைத்து ஏங்கும் என்னைப் போய்...
    அவர் தெரியாமல் பொறுப்பைக் கொடுத்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.
    “அவர் கெட்டதும் “சரி“ என்று ஏற்றுக்கொண்டோமே... நமக்கு என்ன தெரியும்..?“ என்றும் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

    தவிர நான் ஒரு “செக்கு மாடு“
    நான் ஏதாவது எழுதினால்.... அதை யாராவது படித்துப் பாராட்டி கருத்திட்டால்... அவர்களின் வலைக்குள் சென்று படித்து நன்றாக இருந்தால் கருத்துடன் ஓட்டும் போட்டுவிட்டு வந்துவிடுவேன். மற்றபடி யாரையும் நான் தேடிக்கொண்டு போய் படித்ததில்லை.
    இருந்தாலும் ஒப்புக்கொண்டோமே... என்று நானாக பல வலைகளைத் தேடிச் சென்று பார்த்தால்.... ஒவ்வொரு வலைப் பதிவாளரும் நூறு பேருக்குச் சம்மானவர்கள் போல் எழுதி இருக்கிறார்கள்.
    எல்லோருமே பல உயர்வான பதிவுகளை இட்டு உயர்வான இடத்தில் இருக்கிறார்கள். அவர்களைப் போய் நாம் அறிமுகம் செய்து வைப்பதா... என்று குழம்பிப் போய் புதியதாகத் தொடங்கியவர்களைத் தேடினால் எனக்கு முன் வலைச்சர பொறுப்பேற்ற நண்பர் அரசன்  அவர்கள்  அனைவரையும் அறிமுகப் படுத்தி விட்டிருக்கிறார்.
    இப்பொழுது அதிர்ச்சியுடன் குழப்பமும் வந்து விட்டது.
    இருந்தாலும் யோசித்தேன்!!

“நம்மிடம் இல்லாதது எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்!
நம்மிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தால் அவநம்பிக்கை!
நம்மிடமும் ஏதோ இருக்கிறது என்று நினைப்பதே தன்னம்பிக்கை!“ என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.

     எப்படியோ.. நம் அன்பின் சீனா ஐயா அவர்களின் அனுபவ மூளையில் என்னிடமும் ஏதோ ஒரு தகுதி இருக்கிறதைக் கண்டு பிடித்துத் தான் நம்மிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் என்று மனத்தைத் தேற்றித் தன்னம்பிக்கையை வரவழித்துக் கொண்டு இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்று வலம் வரப்போகிறேன்.
    நட்புறவுகளே.... இந்த அதிர்ச்சியான செய்தியால் மனமுடையாமல் தினமும் வலைச்சரம் வந்து பார்த்துவிட்டு செல்லுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.
    

66 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நண்பரே, இதைவிட அதிர்ச்சியான பல விஷயங்களைப் பார்த்திருக்கிறோம். எங்கள் மனம் கல்லால் ஆனது. நிச்சயம் உடைந்துபோகாது.கவலைப்படாமல் உங்கள் பணியைச் செய்ய ஆரம்பியுங்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நம்மிடம் இல்லாதது எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்!
நம்மிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தால் அவநம்பிக்கை!
நம்மிடமும் ஏதோ இருக்கிறது என்று நினைப்பதே தன்னம்பிக்கை!“ என்று எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.//

வலைச்சரம் தொடுக்கும்
வளைக்கரங்களுக்கு வாழ்த்துகள்..

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துக்கள்!

Prem S சொன்னது…

கலக்குங்க அதிர்ச்சியல்ல ஆனந்தமே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வலைச்சரத்தின் ஒரு வார ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கும் தங்களுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

அன்பின் திரு சீனா ஐயா அவர்கள் மிகச்சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

அவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

உங்கள் பணி மிகச்சிறப்பாக அமையட்டும். ;)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள் அருணா. வலைச்சர வாரத்தில் சிறப்பான பகிர்வுகள் தர வாழ்த்துகள்.

இளமதி சொன்னது…

தோழி!....
சபாஷ்! சரியாகக் கணித்துத்தான் இப்பொறுப்பினை உங்களிடம் தந்துள்ளார்கள்!
மிக்க மகிழ்ச்சி! ஆரம்பிக்கட்டும் உங்கள் ஆசிரியப்பணி!
சிறப்புற யாவும் அமையும். வாழ்த்துக்கள்!

உஷா அன்பரசு சொன்னது…

வாழ்த்துக்கள்! பல புதியவர்களை அறிமுகப்படுத்துங்கள்!

கார்த்திக் சரவணன் சொன்னது…

//நான் ஏதாவது எழுதினால்.... அதை யாராவது படித்துப் பாராட்டி கருத்திட்டால்... அவர்களின் வலைக்குள் சென்று படித்து நன்றாக இருந்தால் கருத்துடன் ஓட்டும் போட்டுவிட்டு வந்துவிடுவேன்.//

உண்மை

கார்த்திக் சரவணன் சொன்னது…

வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் சகோதரி...

RPSINGH சொன்னது…

வாழ்த்துகள்....இப்பணிக்குப் பொருத்தமானவர் நீங்கள்

வே.நடனசபாபதி சொன்னது…

வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க இருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்!

மாதேவி சொன்னது…

வாழ்த்துகள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

வாழ்த்துக்கள்! வலைச்சரம் உங்களால் சிறக்கட்டும்! பல புதியவர்கள் அறிமுகம் ஆகட்டும்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

வலைச்சரத்தின் பொறுப்பேற்று வண்ணம் மின்னும்
கலைச்சரத்தின் காட்சிகளை நன்றே காட்டு!
மலைச்சரத்தின் ஈடாக அருணா செல்வம்
மணிச்சரத்தை மலா்ச்சரத்தை மாண்பாய்த் தீட்டு!
சிலைச்சரத்தின் நுட்பமெனச் செதுக்கும் ஆற்றல்
சிந்தனையில் பெருகட்டும்! உன்றன் நெஞ்ச
அலைச்சரத்தில் கழகின்ற கவிகள் ஓங்க
அருள்சரத்தை அரங்கனவன் வழங்க வேண்டும்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

Avargal Unmaigal சொன்னது…

வலைச்சரத்தில் நாம் அறிமுகப்படுத்தியவர்களேயே மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்தி கொண்டிருக்கிறோம் அதாவது குண்டுச் சட்டியில் குதிரை ஒட்டுவது போல ஆனால் அதில் ஒரு வித்தியாசம் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வித்தியாசமாக அறிமுகப் படுத்துவதுதான் அதின் சிறப்பு அம்சம். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் எல்லோருக்கும் தெரிந்த சாம்பாரை பல பெண்களிடம் கொடுத்து சமைக்க சொல்லுங்கள் அதன் பின் பாருங்கள் ஒவ்வொரு வரும் தயாரித்த சாம்பார் மாறுபட்டு இருக்கும். ஆனால் அதில் சாம்பரின் தனித்துவம் மாறாமல் ஆனால் சுவைமட்டும் மாறி இருக்கும். அது போலதான் இந்த வலைச்சர அறிமுகங்களும்.

உங்களின் பதிவுகள் மிக அருமையாக இருப்பது போல உங்களின் அறிமுகங்களும் மிக அருமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை . கலக்குங்கள் நேரம் கிடைத்தால் நானும் வந்து பார்த்து கருத்து சொல்லுகிறேன். வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

/// எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது /// என்று சொல்லி... பணிவு எப்போதும் உச்சமடைய வைக்கும்... பாராட்டுக்கள்...

மிக்க மகிழ்ச்சி... அசத்துங்க... வாழ்த்துக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்

வலைச்சரத்தின் பொறுப்பேற்று வண்ணம் மின்னும்
கலைச்சரத்தின் காட்சிகளை நன்றே காட்டு!
மலைச்சரத்தின் ஈடாக அருணா செல்வம்
மணிச்சரத்தை மலா்ச்சரத்தை மாண்பாய்த் தீட்டு!
சிலைச்சரத்தின் நுட்பமெனச் செதுக்கும் ஆற்றல்
சிந்தனையில் பெருகட்டும்! உன்றன் நெஞ்ச
அலைச்சரத்தில் கமழ்கின்ற கவிகள் ஓங்க
அருள்சரத்தை அரங்கனவன் வழங்க வேண்டும்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

ezhil சொன்னது…

வாங்க வாங்க அருணா... இது நாள் வரை எனக்குத் தெரியாதவர்கள் வலைச்சர ஆசிரியர்களாக இருந்தார்கள்... என்னதான் அவர்களின் பதிவில் பின்னூட்டமிட்டாலும் ஒரு உரிமை இருக்காது... இப்போது சென்ற வாரம் அரசன்... இந்த வாரம் நீங்கள் .....உரிமையுடன் பாராட்டுகிறேன்...வாழ்த்துக்கள்... உங்களின் ரசனைக்குரியவர்களையும் நான் தெரிந்து கொள்கிறேனே...

ஆதிரா சொன்னது…

சரியான ஆளிடம், சரியான பொருப்பைத் தானே கொடுத்திருகிறார்கள்..கலக்குங்கள்...வாழ்த்துக்கள்..

பூ விழி சொன்னது…

வாவ்!! வாழ்த்துகள்

அம்பாளடியாள் சொன்னது…

வருக வருக ஆசிரியர் அருணா அவர்களே
வளமும் நலனும் பெருக இது தான் தருணம்
அடியும் முடியும் தேடி விடியும் வரைக்கும்
ஓயாமல் மனம் சோராமல் இனிய தளத்தை
புதிய தளத்தை அறிமுக ஊர்வலத்தில் இணைக்குக¨
அம்பாளடியாள் உங்களை மனமுவந்து வாழ்துகின்றாள்
தொடரட்டும் பணி சிறப்பாகக் கருத்துரைகளும் நிறையட்டும்!...

தனிமரம் சொன்னது…

அருணாவா கொக்கா ஆடிவருவா ஐந்து கண்டமும் அவர் எழுத்தில் என்று அறிந்தவர் சீனா ஐயா வாங்க சிறப்பாக பணி ஆற்ற என் வாழ்த்துக்கள்§

Unknown சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே!

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் பழனி. கந்தசாமி ஐயா.

உங்களின் மனம் கல் போன்றதா...?
கவலைப்படாதீர்கள் அதை நான் உடைக்க முயற்சிக்க மாட்டேன்.
மாறாக, நான் ஒரு சிறு உளி தான்.
என் பணியால் லேசாக தட்டி அந்தக் கல்லைச்
சிற்பமாக்க முயற்சிக்கிறேன்.
அதற்கு உங்களின் வாழ்த்துக்களும் ஆசிகளும்
இருந்தால் மட்டும் எனக்குப் போதும்.

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

பாஸ்... நீங்களெல்லாம் என் கூட
இருக்கிறீங்க என்ற தைரியத்தில் தான்
இந்தப் பொறுப்பை ஏற்றேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி பிரேம்.

அருணா செல்வம் சொன்னது…

உங்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற
முயற்சிக்கிறேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

முயற்சிக்கிறேன்.
தவறுகள் இருந்தால் கண்டுகொள்ளாதீர்கள்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

Ranjani Narayanan சொன்னது…

இன்ப அதிர்ச்சி!
வாழ்த்துகள்!

துளசி கோபால் சொன்னது…

//“அவர் கெட்டதும் “சரி“ என்று ஏற்றுக்கொண்டோமே... நமக்கு என்ன தெரியும்..?“...//

ஆஹா ஆஹா..... இது இ(த்)து..... போதும்! தன்னடக்கம்!

நமக்கு ஒன்னும் தெரியாது..... ஆனால் தெரிஞ்சுக்க விருப்பம் தெரிஞ்சுக்குவேன் என்ற ஆர்வம் ...இதுதான் அடிப்படை!

அதெல்லாம் நல்லா ஜமாய்ச்சுருவீங்க. நோ ஒர்ரீஸ்.

இனிய வாழ்த்து(க்)கள்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் ஊக்குவிப்பு தரும்
வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஆனேகமாக என் அறிமுகங்கள்
உங்கள் அனைவருக்கும் பழையவர்களாகத்
தான் இருப்பார்கள்
என்றே நினைக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம் ஸ்கூல் பையன்.
உண்மை தான்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

அருணா செல்வம் சொன்னது…

அப்படியா.... இப்படியெல்லாம்
நீங்களெல்லாம் சொல்வதால் மேலும் மேலும்
பயமாகத் தான் இருக்கிறது.

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நடனசபாபதி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

வானத்து நட்சத்திரங்கள் அன்றாடமும் தான்
மின்னுகின்றன. நான் சும்மா சுட்டி மட்டும் தான் காட்டப் போகிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் சொன்னது எல்லாம் சரிதாங்க “உண்மைகள்“

ஆனால் எனக்கு சாம்பார் வைக்கும் அடிப்படையாவது
தெரியனுமில்லையா...?
நாலு பேரிடம் கேட்டு குழம்பு வைக்கிறேன்.
நீங்கள் எனக்காக சாம்பார் என்று எண்ணிக்கொண்டு
சாப்பிட்டு விட்டு பாராட்டுங்கள். ஹா ஹா ஹா

தங்களின் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

பெயரில்லா சொன்னது…

வாழ்த்துகள் அருணா...I KNOW YOU WILL BE FINE...

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் ஊக்குவிப்பிற்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி மலர் பாலன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி நண்பரே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி அம்மா.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நீங்கள் வலைச்சரத்திற்காக எழுதிய பகிர்வுகள் எனது dashboard-ல் நேற்றும் இன்றும் படித்தேன்... ஆனால் வலைச்சரத்தில் இல்லை...

ஏன்... என்னவாயிற்று...? அதிர்ச்சி தரும் செய்து இது தானோ...?

dindiguldhanabalan@yahoo.com - உதவி தேவைப்படுமெனில் தொடர்பு கொள்ளவும்... மின்வெட்டு இல்லாமல் இருந்தால் கண்டிப்பாக பதில் அனுப்புகிறேன்... நன்றி...

அருணா செல்வம் சொன்னது…

வாங்க .. வாங்க... தோழி.

வந்து உரிமையுடன் திட்டுங்கள்.
அப்பொழுது தான் என்னை நான் திருத்திக்கொள்ள முடியும்.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

ஆதிரா.... இப்படியே என்னை எல்லோரும்
நம்புகிறார்கள்.... அவர்களின் நம்பிக்கையை
நான் வீணாக்கிவிடக் கூடாது என்பதே என்
இப்பொழுதிய கவலை.

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தோழி... உங்களின் வாழ்த்துரையால் என் மனம் நிறைந்தது.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

கொக்கு தலையில் ஐஸ் வைக்கலாமா...?

தனிமரம்... ஏற்கனவே இங்கே ரொம்ப பனிப்பெய்வால்
குளிருது என்று அறிந்தும் இப்படி பேசலாமா...?

நடுக்கலுடன் ந ந ந ன்றிறி!

அருணா செல்வம் சொன்னது…

துளசி கோபால் ஐயா...

ஏற்கனவே ஒற்றுப்பிழை அதிகம் செய்வதால்
“த்“ போன பதிவுகள் எழுதுறீங்க... என்றார் ஒருத்தர்.

நீங்க வேற இப்படியெல்லாம் எழுதிக் காட்டி பயமுறுத்துகிறீர்கள்.

இருந்தாலும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

அவ்வ்வ்வளவு நம்பிக்கையா...?

உங்களின் நம்பிக்கைக்காகவே
முயற்சிக்கிறேன் ரெவெரி சார்.

மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் தனபாலன் ஐயா.

வெறும் வோல்ட் பிரசில் எழுதும் போது “லிங்க்“ வேலை செய்யவில்லை.
அதனால் பதிவை எழுதிவிட்டு தொடக்கத்தை மட்டும் இணைத்து “லிங்க்“ சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தேன்.
வேலை செய்தது. அது ஒரு டெஸ்ட் தான்.
ஆனால் உண்மையில் திரு சீனா ஐயா, மின் தடை காரணமாகவும், இணையதள பிரச்சனைக் காரணமாகவும் எனக்கு வலைச்சரத்தின் இணைப்பை அனுப்ப முடியவில்லை என்று இப்பொழுது தான் எழுதி அனுப்பினார். அதனால் தான் இந்த தடை.

மற்றபடி ஏதும் பிரட்சனை இல்லை தனபாலன் ஐயா.
உங்களின் உயர்ந்த பண்பு என்னை பிரமிக்க வைக்கிறது.
ஏதேனும் உதவி என்றால் நிச்சயம் உங்களிடம் கெட்கிறேன்.
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருணா செல்வம்

“நம்மிடம் இல்லாதது எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்!
நம்மிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தால் அவநம்பிக்கை!
நம்மிடமும் ஏதோ இருக்கிறது என்று நினைப்பதே தன்னம்பிக்கை!“ - அருமையான சொற்றொடர்கள் - தன்னம்பிக்கை வளர நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அருணா செலவ்ம் -

“நம்மிடம் இல்லாதது எதுவுமில்லை என்று நினைப்பது ஆணவம்!
நம்மிடம் எதுவுமே இல்லை என்று நினைத்தால் அவநம்பிக்கை!
நம்மிடமும் ஏதோ இருக்கிறது என்று நினைப்பதே தன்னம்பிக்கை!“

தன்னம்பிக்கையுடன் செய்யும் எவ்விதச் செயலும் வெற்றி பெறும் -

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

வாழ்த்துக்கள் அருணா!

சீராளன்.வீ சொன்னது…

அறிந்தவன் அறிவான் ஆளுமையை
அதனால் தந்தான் பொறுப்புகளை
முடியும் என்று நினைத்தாலே
முழுவதும் உன்னில் அடைக்கலமே
புகழை தேடும் பூமியிலே
புகழே தேடுதல் புண்ணியம்தான்
மகிழ்வாய் ஏற்று செதுக்குங்கள்
மனதில் நிறைந்த பதிவுகளை...!

வாழ்த்துக்கள் சகோ

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் ஊக்கமூட்டும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி சீனா ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி சீராளன்.

ஸ்ரீராம். சொன்னது…

இப்போதான் பார்க்கிறேன். வாழ்த்துகள்.

இளமதி சொன்னது…

வலைச்சரத்தில் இன்று என்னையும் அறிமுகப்படுத்தி திகைக்கவைத்துவிட்டீர்கள். இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

எத்தனையோ ஜாம்பவான்களுக்கு மத்தியில் நேற்று முளைத்த அற்பமாகிய நானுமா... உங்கள் பெருந்தன்மையைச் சொல்ல வார்த்தைகளைத் தேடுகிறேன்...

மிக்க நன்றி தோழி!

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள் !