செவ்வாய், 3 ஜூன், 2014

உன்னையே நினைத்திருந்தேன்!!
உன்னையே நினைத்தி ருந்தேன் – அதனால்
உலகத்தை நானோ மறந்தி ருந்தேன்!           (உன்னையே)

கண்ணிலே உறக்க மில்லை – விழி
காண்பது உனையன்றி வேறேது மில்லை!   (உன்னையே)

காலையில் கதிரவன் காட்சியில் தெரிந்தாய்
கடலின் ஓசையில் காதினுள் நுழைந்தாய்
சோலையில் மணம்தரும் மலர்களில் சிரித்தாய்
சொக்கிட பார்த்ததில் சுயத்தினைக் கெடுத்தாய்... (உன்னையே)

கடமையைச் செய்திடும் அந்த நேரத்திலும்
கடவுளை வணங்கிடும் நல்ல நேரத்திலும்
நடந்திடும் இயற்கை தரும் சூழலிலும்
நாலுபேர் அமர்ந்து பேசும் கூட்டத்திலும்....  (உன்னையே)

அறுசுவை உணவும் சுவைக்க வில்லை
அழகிய ஆடையும் ரசிக்க வில்லை
ஒருசுவை பார்வையில் ஆயிரம் தொல்லை
உணர்ந்தேன் இவைதாம் இன்பத்தின் எல்லை... (உன்னையே)

அருணா செல்வம்

03.06.2014

27 கருத்துகள்:

 1. அருமை அருமை
  அன்பின் பிடியில் அகப்பட்டவனி(ளி)ன்
  மன நிலையைச் சொல்லிப்போனவிதம்
  மிக மிக அருமை
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   நீக்கு
 2. பாலும் கசந்ததடி நிலையை வேறு வரிகளில் அழகாக, அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் அல்லவா...?
   அதனால் தான் மாற்றி சொன்னேன்....)

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

   நீக்கு
 3. இன்பத்தின் எல்லை, மனதின் நிறைவு...சூப்பர்ப் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி மனோ சார்.

   நீக்கு
 4. எனக்கும் அந்த குழப்பம் இருந்தது. that means இது அவனா அவளா என்று ரமணி சார் கருத்தை பார்த்துவிட்டு படிக்கையில் கவிதையில் மேலும் அழகு. அருமை தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருபாலருக்கும் பொருந்தும் படிதான் கவிதையை எழுதினேன்.

   கண்டுபிடித்து விட்டீர்கள்.
   நன்றி தோழி.

   நீக்கு
 5. நன்று ,ஓங்கு புகழுடன் வாழ்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 6. அன்பின் நிலைப்பாடு இதானோ!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களின் கேள்வியே பதிலாக உள்ளது தோழி.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
 7. அப்பாடா... உணர்ந்து திருப்தி அடைந்து விட்டால் சரி தான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணர்ந்து பாட்டெல்லாம் எழுதலாம் தான். ஆனால்...
   திருப்தியெல்லாம் அடைய முடியாது அண்ணா.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு

 8. வணக்கம்!

  உன்னை நினைத்திருந்தேன்! இவ்வுலகை நான்மறந்தேன்!
  பொன்னை நிகா்த்த பொலிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
   மிக்க நன்றி கவிஞர்.

   நீக்கு
 9. காதல் என்பது போதையன்றோ! எல்லாமே மறந்துதான் போகும். அழகான கவிதை.-இராய செல்லப்பா (சான் டியாகோ விலிருந்து.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகான பதில்!!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
 10. காதலின், அன்பின் சுவை மெய்மறக்கச் செய்யும் என்பதை மிக அழகான வார்த்தைகளில் வடித்துவிட்டீர்கள் சகோதரி! ஆஹா!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ.... இதெல்லாம் உண்மையாகவே வருமா....?

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

   நீக்கு
 11. ’’பார்வையில் ஆயிரம் தொல்லை.....இவைதாம் இன்பத்தின் எல்லை//

  அடிமனதைத் தொட்டுவிட்ட வரிகள்.

  இப்படிக் கவிகள் புனைவதில் இன்பம். புரிந்து ரசிப்பதிலும் இன்பம்!!

  உங்களின் கவியுள்ளம் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி காமக்கிழத்தன் ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. அப்படியா....? சரி. அனுபவித்துச் சொல்கிறீர்கள். ஏற்றுக்கொள்கிறேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி நாகராஜ் ஜி.

   நீக்கு
  2. காதலின் வேதனை...அது ஒரு சுகமான சுமையும் கூட...அனுபவித்து எழுதுவதில் ஒரு அழகு...நன்றி!

   நீக்கு