ஞாயிறு, 15 ஜூன், 2014

சிந்தையிலே சிறை வைத்தவர்!!

பத்துமாதம் வயிற்றுக்குள்
   பத்தியமாய்ச் சுமக்கவில்லை! – ஆனால்
சித்தத்தில் உன்நினைவைச்
   சிறிதேனும் இறக்கவில்லை!

தாலாட்டிப் பாலூட்டிப்
   பார்த்திருந்தே இரசிப்பதில்லை! - ஆனால்  
ஆளாகி நீஉயர
   அறிவுருத்த மறப்பதில்லை!

உயிரிருந்தால் போதுமென்ற
   உணர்வுடனே இருப்பதில்லை! – ஆனால்
உயிருக்குள் உனைவைத்த
   உள்ளுணர்வைச் சொல்வதில்லை!
     
தந்தையிவர் எனக்காட்டும்
   தாய்மட்டும் உயர்வில்லை! – உனைச்
சிந்தையிலே சிறைவைத்த
   தந்தைக்கோ நிகரில்லை!

அருணா செல்வம்
15.06.2014

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
  

  


26 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

தந்தையைப் போற்றும் இனிய நற் கவிதை கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் தோழி இந்தப் பாடலையும் கொஞ்சம் பாருங்கள் .http://rupika-rupika.blogspot.com/2014/06/blog-post_15.html

Iniya சொன்னது…

தந்தையிவர் எனக்காட்டும்
தாய்மட்டும் உயர்வில்லை! – உனைச்
சிந்தையிலே சிறைவைத்த
தந்தைக்கோ நிகரில்லை!

எவ்வளவு அருமையாக அழகாக சொல்லிவிட்டீர்கள் தந்தையின் பெருமையை வாழ்த்துக்கள் தோழி!

Avargal Unmaigal சொன்னது…

என்னடா கவிக்குயில் தந்தையை பற்றி இன்னும் கவிதையை வெளியிடவில்லை என்று நினைத்த நேரத்தில் அழகான படைப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள்.. பாவம் என் தந்தை வாழ்த்தி பாட அவருக்கு ஒரு பெண் குழந்தை இல்லை.. பெண் குழந்தை உள்ள தந்தைகள் பாக்கியவான்கள்

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

தந்தையின் சீருரைத்த செந்தமிழை என்னுடைய
சிந்தையில் வைத்தேன் சிறை!

ஸ்ரீராம். சொன்னது…

அருமை. அம்மா என்றால் அன்பு. அப்பா என்றால் அறிவு! பொருத்தமாய்ச் சொல்லி இருக்கிறீர்கள்.

பால கணேஷ் சொன்னது…

சிநதையிலே சிறை வைத்த தந்தை... சூப்பர். அப்பாவின் நினைவை விதைத்திட்ட அற்புதக் கவிதை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான வரிகள்...

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...

Mahesh Prabhu சொன்னது…

நல்ல சிந்தனை... அற்புதம் அக்கா.........

Kamala Hariharan சொன்னது…

வணக்கம் சகோதரி!
தந்தையரின் சிறப்பை எடுத்துக் காட்டும் சிறப்பான வரிகளை உடைய சிறந்த கவிதையை வடித்திருக்கிறீர்கள்! மிகவும் நன்றாகவுள்ளது.
என் தளம் வந்து பகிர்ந்து பாராட்டியதில்,எனக்கொரு தோழியை பரிசாக தந்த தந்தையர் தினத்திற்கும், பாராட்டி,மகிழ்வுறச் செயத தங்களுக்கும்,மனமார்ந்த நன்றிகள்.
நட்புடன்,
கமலா ஹரிஹரன்.

Unknown சொன்னது…

அருமை! தந்தையருக்கு தந்த பெருமை!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இனிய தோழி.

அருணா செல்வம் சொன்னது…

என்னடா கவிக்குயில் தந்தையை பற்றி இன்னும் கவிதையை வெளியிடவில்லை என்று நினைத்த நேரத்தில் அழகான படைப்பை வெளியிட்டு இருக்கிறீர்கள்..-

-என் எட்டாவது வயதிலேயே என் தந்தை காலமாகிவிட்டார்.
அதனால் நான் தந்தையின் அன்பில் திளைத்ததில்லை....((

-பாவம் என் தந்தை வாழ்த்தி பாட அவருக்கு ஒரு பெண் குழந்தை இல்லை.. பெண் குழந்தை உள்ள தந்தைகள் பாக்கியவான்கள்-

பெண் குழந்தைகள் தான் தன் தந்தையை வாழ்த்திப் பாட வேண்டுமென்று இல்லை. நீங்களும் பாடலாம்.... அவரிடம் வாங்கிய அடி உதைகளை வைத்து....))

நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கணேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் (?)
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மகேஷ் பிரபு தம்பி.

அருணா செல்வம் சொன்னது…

நட்புடன் தொடர்வோம் தோழி.

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

Kasthuri Rengan சொன்னது…

சிந்தையில் சிறை வைத்தவர் ... நல்ல பதம்
வாழ்த்துக்கள்
த. ம எட்டு
http://www.malartharu.org/2014/06/time-management-part-one.html

saamaaniyan சொன்னது…

தந்தையரின் சிறப்பை போற்றும் உயர்ந்த பாடல் !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

அருணா செல்வம் சொன்னது…

மது அவர்களுக்கு
தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சாமானியன்.

அருணா செல்வம் சொன்னது…

குறையொன்றும் இன்றிக் குளிர்ந்திருப்பாள் உம்முள்
சிறையிருக்கும் செந்தமிழாள் சேர்ந்து!!

நன்றி கவிஞர்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

தந்தையர் தின சிறப்புக் கவிதை மிக அருமை. பாராட்டுகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமையான கவிதை சகோதரி! தந்தையைப் பற்றி.....பாராட்டுக்கள்!

தாமதமாக வந்து வாசிப்பதற்கு முதலில் மன்னிக்கவும்! கணினி மெமரி பிரச்சினை. நெட் பிரச்சினை ...இப்படி ..... சிறிது நேரம்தான் இணையதளத்தில் உலா வர முடிகின்றது....... என்றாலும் வரும் சமயம் பழைய இடுகைகளையும் வாசிக்க முயற்சிக்கின்றோம்!