வெள்ளி, 27 ஜூன், 2014

ஏன் இந்த ஆண்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள்?    மதுரைத் தமிழன் அவர்கள் தொடர் பதிவு எழுதச் சொல்லி தொடங்கியதில் இருந்து நிறைய பதிவர்கள் தங்களின் மனதில் பட்டதைப் பதிவாக போட்டு அசத்தி இருப்பது நீங்கள் அனைவரும் அறிந்தது தான்.

   ஆனால்.....
   மூன்றாவது கேள்விக்கும் ஒன்பதாவது கேள்விக்கும் ஒரு சில ஆண்கள் கொடுத்திருக்கும் பதில் இருக்கிறதே..... மதுரைத் தமிழன், பகவான் ஜி, பால கணேஷ் ஐயா, ரஹிம் கஸாலி..... இன்னும் ஒரு சிலர் பெயர்களை மறந்து விட்டேன்.
   இவர்கள் எல்லாம் கல்யாணம் பண்ணியதால் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்று நினைக்கத் தோன்றுகிறது. எங்களுக்காவது பரவாயில்லை.
   பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத இளஞர்கள்... சீனு, ஹாரி, அரசன், அ. பாண்டியன் போன்றோர்கள் உங்களின் பதில்களில் பயந்து விட மாட்டார்களா....?))) ஏங்க சின்ன பிள்ளைகளை இப்படி பயமுறுத்துகிறீர்கள்...?

   பாவேர்தர் பாரதிதாசனின் “குடும்பவிளக்கில்“ ஒரு முதுமைக் காதல் பாடல்

புதுமலர் அல்ல! காய்ந்த
   புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லாள்
   தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
   வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக்(கு) இன்பம் நல்கும்?
   “இருக்கின்றாள்“ என்ப தொன்றே!

இப்படி அல்லவோ ஒவ்வோர் கணவனும் தன் மனைவியை நினைக்க வேண்டும்.

சரி இதை விடுங்கள்.

   ஆண்களுக்குச் சிரிக்கவே தெரியாதா....? அல்லது வராதா....? கல்யாணத்திலிருந்தே ஏதோ பறிகொடுத்த மாதிரியே முகத்தை சீரியஸாகவே வைத்துக்கொண்டு இருந்தால் எந்த பொண்ணுக்குத் தான் கோபம் வராது? இதைக் கொஞ்சமாவது மாற்றிக்கொள்ளுங்கள் ஆண்களே.
   சிரிக்க பழகுங்கள். ஆழ்ந்த சிரிப்பில் கூட ஏதோ ஒரு சிறு வலி இருந்துகொண்டே தான் இருக்கும். இருந்தாலும் மற்றவர்களுக்காவது சிரிக்க பழகுங்கள்.
   என்னடா இது அருணா அட்வைஸ் எல்லாம் பண்ணுதே என்று எண்ணிவிட வேண்டாம்.
   அருணா சொன்னால் மட்டும் சிரிப்பு வந்து விடுமா என்றும் நினைக்க தோன்றுகிறதா...?
   பேசாமல் இந்த ஜோக்கைப் படித்துப் பாருங்கள். ஜோக் புரிந்தால் உங்களுக்குத் தானாக சிரிப்பு வரும்.
   ஒரு தபால் ஆபிஸில் ஒருவர் எதையோ எழுத நினைத்துத் தன் பேனாவை எடுத்து எழுதிய போது அது சரியாக எழுதவில்லை. முள் உடைந்து விட்டதா... அல்லது பேனாவில் மை இல்லையா என்பது தெரியாமல் அதை உதறி உதறி எழுத முயற்சித்துக் கொண்டு இருந்தார்.
   அந்த நேரத்தில் ஒருவர் ஏதோ ஒரு பாரத்தில் கையெழுத்திட பேனா இல்லாததால் இவரிடம் வந்து, “ஐயா... கொஞ்சம் பேனா தர்றீங்களா...?“ என்று கேட்டார்.
   ஏற்கனவே எரிச்சலுடன் இருந்தவர் திரும்பி அவரைப் பார்த்து, “ம்ம்ம்.... இப்போ ஸ்டாக் இல்லை. காலையில வா. கொஞ்சமென்ன... எல்லாத்தையும் நீயே எடுத்துக் கொண்டு போ“ என்றார்.
   வந்தவர் எதுவும் விளங்காமல் “ஙே“ என்று விழித்தபடி சென்றார்.

   என்ன நண்பர்களே சிரித்தீர்களா....? சிரிப்பு வரவில்லை என்றால் என் தவறு இல்லை.

சிரியுங்கள். சிரியுங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
அருணா செல்வம்.


இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த நினைத்து எழுதியது இல்லை.

62 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள பதில்களையும் இங்கு எடுத்து இணைத்திருந்தால் 'என்ன சொன்னார்கள்' என்று மறுபடி அங்கு போய்ப் பார்க்கும் வேலை மிச்சமாகியிருக்குமே...! :))))))

பால கணேஷ் சொன்னது…

மனைவியிடம் பூரிக்கட்டையால மதுரைத்தமிழன் தினம் அடி வாங்கறதா எழுதறதை சீரியஸா நம்பிடுவீங்களாம்மா நீங்க? அதுமாதிரித்தான் நானும் மனைவியால கஷ்டப்படுறதுன்னு எழுதறதெல்லாம் கதைகள்லயும் இந்த மாதிரி பேட்டிகள்லயும்தான் - சும்மா காமெடிக்காக. இருந்தாலும் உங்களை மாதிரி சிலர் தப்பா புரிஞ்சிக்க வாய்ப்பிருக்குன்றதால இனி தவிர்த்துடறேன். ஓகேவா? மத்தப்டி நாமளும் பெண்களை மதிக்கிறவங்க தாங்கோ...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
சில ஆண்களைப்போலதான் சில பெண்களும்... உள்ளார்கள் நகைச்சுவை நன்று பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Avargal Unmaigal சொன்னது…

பாலகணேஷ் நீங்க காமெடிக்காகவா இப்படி எழுதுறீங்க?? அப்ப நீங்க ரொம்ப மோசம் ஆனா நான் எழுதுவது எல்லாம் நிஜம் நிஜத்தை தவிர வேறு ஏதும் இல்லை.. நான் அடி வாங்கி வாங்கி எனது முகமே மிக கோணலாகிவிட்டது அதனால் தான் மற்றவர்கள் மாதிரி என்னால் புரொபைலில் எனது முகத்தை காட்ட முடியவில்லை....

Avargal Unmaigal சொன்னது…

//பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத இளஞர்கள்... சீனு, ஹாரி, அரசன், அ. பாண்டியன் போன்றோர்கள் உங்களின் பதில்களில் பயந்து விட மாட்டார்களா....?))) ஏங்க சின்ன பிள்ளைகளை இப்படி பயமுறுத்துகிறீர்கள்...? ///

இந்த புள்ளைங்களுக்கு நாங்க சொல்லறதெல்லாம் காதில் விழாதுங்க.... கல்யாணம் ஆன பிறகு தான் அண்ணே நீங்க எவ்வளவு அருமையா உண்மையை சொல்லிறீக்கீங்க நாங்கதான் இந்த பொண் பிள்ளைகள் பேச்சை கேட்டு இப்படி மோசம் போயிட்டோமேனு அழுவானுங்க

Avargal Unmaigal சொன்னது…

///புதுமலர் அல்ல! காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லாள்
தள்ளாடி விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு
வறள்நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக்(கு) இன்பம் நல்கும்?
“இருக்கின்றாள்“ என்ப தொன்றே!////

இந்த கவிதையை படித்த போது மனதில் எழும் கருத்து.... நாங்க கல்யாணம் ஆனவங்க அழுவது ஏதோ அழகுக்காக என்பது போல சொல்லிருக்கீங்க.... அது தவறு


2வதாக இப்படி ஒரு கவிதையை போட்டு இந்த கவிதை பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத இளஞர்கள்... சீனு, ஹாரி, அரசன், அ. பாண்டியன் போன்றோர்கள் பயந்து விட மாட்டார்களா....?))) ஏங்க சின்ன பிள்ளைகளை இப்படி பயமுறுத்துகிறீர்கள்...?

Avargal Unmaigal சொன்னது…

///ஆண்களுக்குச் சிரிக்கவே தெரியாதா....? அல்லது வராதா....? ///

யாரை யாரைப்பார்த்து இந்த கேள்வி? நாங்களும் திருப்பி கேப்போம்ல ஆண்களை சிரிக்க வைக்க பெண்களுக்கு தெரியாதா அல்லது வராதா

மகிழ்நிறை சொன்னது…

விடுங்க தோழி, இந்த காலத்து பசங்க ரொம்ப தெளிவு!! இவங்க சொல்றதை அவங்களும் நம்புறமாதிரியே மெய்ண்டைன் பண்ணிக்குவாங்க:)) எனக்குகூட ஒம்பதாவது பதிலுக்கு 'இவ்ளோ நாள் உன்னைமாதிரி மரமண்டைகிட்ட கஷ்டபட்ட மகராசி போய் சேர்ந்திட்டா , விடு "என்று அட்வைஸ் பண்ணத்தான் ஆசை. அப்போ கொஞ்சம் மூட் சரியில்லை:))
பொழைச்சு போகட்டும் நம்ம சகோக்கள் தானேன்னு எப்பவும் போல் பெண்கள் பெருந்தன்மையா மன்னிச்சு விடுடுவோம்))

Avargal Unmaigal சொன்னது…

ஜோக்கு சொல்லி எல்லாம் சிரிக்க வைப்பாங்கன்னு கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் ஜோக்கு சொல்லி அழுக வைத்த பெருமை உங்களுக்கே சேரும்...

இப்படி எல்லாம் சொல்லி ஆண்களுக்கு சிரிக்கவே தெரியலைன்னு வேற ஒரு பழியை தூக்கி போடுறது.. ஹும்

Avargal Unmaigal சொன்னது…

//////இந்தப் பதிவு யார் மனத்தையும் புண்படுத்த நினைத்து எழுதியது இல்லை////

ஐய்யகோ இப்படி மனதை புண்படுத்தி வீட்டீர்களே....புண்பட்ட இதயத்தை புகைவிட்டு ஆத்து என்பார்கள் ஆனால் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாததால் சரக்கு ஊற்றி ஆற்றிக் கொள்கிறேன்....

இந்த வாரம் சரக்கு அடிக்க கூடாது என்று நினைத்து இருந்தேன்....ஆனால் உங்கள் பதிவை படித்ததும் மனது சரக்கை நாடியது...

'பரிவை' சே.குமார் சொன்னது…

நகைச்சுவை நன்று...
அவர்களின் பதிலைப் நானும் படித்தேன்... எல்லாமே மதுரைத் தமிழன் போல் நகைச்சுவையாக எழுதப்பட்டவையே...

கும்மாச்சி சொன்னது…

அருணா "நாங்கள் எல்லோரும் பெண்களை மதிப்பவர்கள்தான் அவர்களால் மிதிபடும் வரை".

உங்களது ஜோக் புரியவில்லை.

அருணா செல்வம் சொன்னது…

ஸ்ரீராம் அவர்களுக்கு வணக்கம்.

நீங்களும் அங்கேயே போய் படித்தால் அவர்களின் நகைச்சுவையை நீங்களும் ரசித்துச் சிரிப்பீர்கள் என்று தான் கொடுக்கவில்லை.

ஆமாம்.... நீங்கள் ஏன் பத்து பதில்களை எழுதவில்லை?
இந்த வலையில் நீங்கள் மட்டும் சிக்காமல் தப்பிக்கலாம் என்று நினைத்தீர்களா...?

எழுதுங்கள் ஐயா.
நீங்கள் “புத்தகம்“ எழுதியது போல. என்னமா “புத்தகம்“ எழுதி இருக்கிறீர்கள்....? மனம் நிறைந்து சிரித்தேன்.

நன்றி ஸ்ரீராம் ஐயா.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஜோக் சிரிப்பு வரவில்லை! பதிவர்கள் எழுதுவது நகைச்சுவைக்காக அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது! பாவேந்தர் பாடல் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

Unknown சொன்னது…

ஜோக் புரிந்தால் தானே சிரிப்பதற்கு
உண்மையிலே உங்க ஜோக் எனக்கும் புரியவில்லை.

பெயரில்லா சொன்னது…

//வந்தவர் எதுவும் விளங்காமல் “ஙே“ என்று விழித்தபடி சென்றார்.//

Me too!.

அருணா செல்வம் சொன்னது…

ஏங்க இவ்வளவு சீரியஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.....

அருணாவும் நகைச்சுவைக்காகத் தான் எழுதியது. நாம எழுதிட்டா... அந்த சின்ன புள்ளைங்க நம்பிடவா போகிறது. அருணாவும் சின்ன பிள்ளை இல்லைங்க. உங்களின் நகைச்சுவைகளை ரசித்தேன்.

ஆனாலும் அடுத்தவரை மகிழ்ச்சிப் படுத்தவதற்காக நம்மவரை நாம் கவலைக்குள்ளாக்கிட கூடாது இல்லையா...?

உடன் பதிலுக்கு மிக்க நன்றி கணேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அப்பாடா..... உங்களுக்காவது இந்த நகைச்சுவை புரிந்ததே....

மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

-அருணா "நாங்கள் எல்லோரும் பெண்களை மதிப்பவர்கள்தான் அவர்களால் மிதிபடும் வரை".-

பெண்கள் அவ்வளவு கொடுமையானவர்கள் இல்லை. அவர்களை நீங்கள் (ஆண்கள்)புரிந்து கொள்ளவில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது கும்மாச்சி அண்ணா.

ஜோக் புரியவில்லையா கும்மாச்சி அண்ணா.

நான் அந்த ஜோக்கை விளக்கமாக சொல்லி விட்டால்... “ஐயே....“ என்று முகம் சுளிக்கத் தோன்றும். அருணா போய் இப்படி எழுதகிறதே என்று என்னைத் திட்டவும் தோன்றும். அதனால் தான் பட்டும் படாமல்....
அதாவதுங்க..... “பேனா“ என்ற வார்த்தையைப் புறகடைக்கப் போவதை எண்ணிக்கொண்டால் போதும்.

அப்படியே எண்ணிக்கொண்டு திரும்பவும் ஜோக்கைப் படித்துப் பாருங்கள். அப்படியும் சிரிப்பு வரவில்லை என்றால்....

நாளைக்கு வேற ஒரு ஜோக் எழுதி உங்கள் அனைவரி மண்டையையும் பிச்சிக்க வைக்கிறேன்.

நன்றி கும்மாச்சி அண்ணா.

(இப்பொழுது அவசரமாக வெளியில் கிளம்பகிறேன். மற்றவர்களுக்குப் பிறகு பதில் எழுதுகிறேன். நன்றி)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

வட மாவட்டங்களில் காலைக் கடன் கழிப்பதை இப்படி சொல்வது உண்டு. இரண்டாவது முறை படித்தபோது ஜோக்கை புரிந்து கொண்டேன்.
ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டீர்கள்.

vimalanperali சொன்னது…

வந்தவர் திரும்புவதும்,திரும்புபவர் வருவதும் வாடிக்கைதானே/

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

3. கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?

பெண்களுடன் பணி புரிவதால் சிரிப்புக்கு பஞ்சமில்லை, எனக்கு சிரிப்பு வந்தால் இழவு வீட்டுலேயும் சிரிச்சு தொலைச்சிருவேன், சீரியஸான இடங்களுக்கு போனால் ஒன்று என் அக்காள் என் கூட இருந்து கவனிச்சுப்பாங்க, இல்லைன்னா வீட்டம்மா.

சிரிச்சு செமையா வாங்கி கட்டியிருக்கேன் !

விழுந்து விழுந்து சிரிச்சதுன்னா நம்ம விஜயன் பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டது, அதாவது....

மலேசிய அரசாங்கம் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வந்துருக்காம் "முஸ்லீம் அல்லாதோர் அல்லா என்று சொல்ல கூடாதாம்" அதுக்கு விஜயன் பதில்..."செத்தாண்டா மலையாளிகள்" என்று...ஏன்னா ஒரு நாளைக்கு எந்த மலையாளியாக இருந்தாலும் சராசரி நூறு தடவையாவது அல்லா [[இல்லை]] என்ற வார்த்தையை பிரயோகிப்பார்கள்...

மலேசியாவின் தண்டனை தெரியும்தானே ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மேலும் இதைப் பற்றி பதிவு உள்ளதா...?

அடப்போங்க சகோதரி...

Iniya சொன்னது…

என்ன தோசையை அப்படியே திருப்பி இல்ல போட்டு விட்டீர்கள். ரொம்ப சமத்து தான் ஹா ஹா ...

Iniya சொன்னது…

அது எனக்கு தெரியுமே ( மனதை புண் படுத்த எழுதவில்லை என்று தான் ) மதுரை தமிழன் எல்லோரையும் நட்பு வலையில் சிக்க வைத்து சந்தோஷப் படுத்த வல்லவா இதை தொடக்கி வைத்தார். இப்பொழுது அதெல்லாம் வீணாகிவிடும் போல் அல்லவா தெரிகிறது.
இதுவும் ஜோக்கு தான் ! தங்கள் ஜோக்கும் எனக்கு அவ்வளவாக புரியல்லம்மா. இருந்தாலும் ரசித்து சிரித்தேன் பதிவை.

Yarlpavanan சொன்னது…

சிறந்த ஆய்வுப் பதிவு
சிந்திக்க வைக்கும் நகைச்சுவை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

:))))))

Avargal Unmaigal சொன்னது…

எனது கருத்துக்கு பதில் கருத்தை காணவில்லை நான் சொன்னது ஏதும் உங்கள காயப்படுத்திவிட்டதா? காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

அருணா செல்வம் சொன்னது…

அடிவாங்கி அடிவாங்கி முகம் கோணலாகி விட்டதா....?
இந்த முகத்தை வைத்துக்கொண்டு மேலும் சிரித்தால்...... அப்ப்ப்ப்பா...... நினைத்துப் பார்க்கவே சகிக்கவில்லை.

பாவம் தான் மாமீ.

அருணா செல்வம் சொன்னது…

அவர்கள் யாரும் உங்களைப் போன்று “வாயாடி“கள் இல்லை.

பெண்களிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்ற “பக்குவம்“ தெரிந்தவர்கள். பொழச்சிக்குவாங்க.

அருணா செல்வம் சொன்னது…

இனியா அம்மா.... தோசையைத் திருப்பிப் போட்டாலும் சுவையாகத் தான் இருக்கும்.

அவரு ரொம்ப சமத்தா.....

அருணா செல்வம் சொன்னது…

மதுரைத் தமிழா.....

1. மதியின் சிறையை மூடிவிட்டு
மனச்சிறைக்குள் பதுங்கிக்கொண்டால்.... கல்யாணம் ஆனவர்கள்(ஆண்கள்) அழுதுக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

2. ஏங்க இப்படி.....
இது முதுமை வரை வரும் வந்த காதலுக்காகப் பாடப்பட்டது என்று இந்த சின்ன பிள்ளைகளுக்குத் தெரியுங்க.

(இருந்தாலும் நீங்கள் இப்படி யோசித்தது என்னைச் சிரிப்பில் ஆழ்த்தியது. நன்றி.)

அருணா செல்வம் சொன்னது…

சிரிப்பதற்கு முதலில் இரசிக்கத் தெரிய வேண்டும்.

குருடன் முன் அழகிய ஓவியம் வைத்தாலும்.....

அருணா செல்வம் சொன்னது…

.....)))))

நான் கூட ரொம்ப சீரியஸா எழுதனும் என்றதாலே.... அதிலும் என் கணவரை மனக்கண்முன் நிறுத்தியதாலே.....
சரி விட்டுடலாம் தோழி.

மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஐயே.... மதுரைக்காரர்கள் எல்லாம் இவ்வளவு தானா....

ஜோக் புரியலைன்னா கூட அழுவீர்களா....?

அருணா செல்வம் சொன்னது…

நீங்கள் குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேண்டும்.

அன்றைக்கு இந்தப் பதிவு ஒரு காரணமா...?

(நான் மனத்தில் சரியெனப் பட்டதை அப்பட்டமாக எழுதி விடுபவள். ஆனால் வலையுளகில் உள்ள அனைவரிடத்திலும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பதால் என் கருத்துக்கல் எந்த விதத்திலும் யாரையும் காயப்படுத்தி விடுமோ... என்ற தயக்கம் வந்து விட்டது. அதனால் தான் அப்படி ஒரு வரி எழுதினேன்.)

அருமையான நகைச்சுவையானப் பின்னோட்டங்களுக்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன். மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

நகைச்சுவை உங்களுக்குப் புரிந்ததா...?

உண்மை தான். “சும்மா“ நாமும் ஒரு பதிவைத் தேத்திட்டெனுல்ல....))))

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

ஜோக் சிரிப்பை வரவழிக்க வில்லையா..... ப்ச்சி....

உங்களின் கருத்தை நான் ஏற்கிறேன் சுரேஷ்.

மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

இது அந்த அந்த நேரத்தில் வரும் சிரிப்பு.

பள்ளியில் டூர் போனபோது சொன்ன நகைச்சுவை. இப்பொழுது நினைத்தாலும் எனக்குச் சிரிப்பு வரும். ஆனால் இதை இங்கே சொல்லி இருக்கக் கூடாதோ..... என்றே நினைக்கிறேன். எனக்கு இதை விளக்கிச் சொல்ல உவ்வ்வ்வே....

நன்றி கரிகாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

திரும்பவும் ஜோக்கை யோசித்தப் படித்து ஆஹ்ஹா... என்று சிரித்தபடி செல்லுங்கள்.

நன்றி பெயரில்லதவரே!!!!

அருணா செல்வம் சொன்னது…

ஏன் ஆண்கள் தான் ஜோக் சொல்ல வேண்டுமா.....

எங்களின் பெண்கள் வட்டத்தில் நிறைய ஜோக்குகள்... உண்மையாய் சிரிக்க நிறைய இருக்கிறது. ஆனால் நாங்கள. அதை வெளியில் சொல்வதில்லை. தன்னடக்கம் தான் காரணம்.

தங்களின் வருகைக்கும் ஓரளவிற்கு என் ஜோக்கை மற்றவர்கள் புரியும்படி விளக்கியதற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

உண்மை தான் விமலன் ஐயா.

ஆனால் யார் எங்கிருந்து வந்தவர்.
வந்தவர் எங்கே திரும்புகிறார் என்பதை அறியாதவரை வந்தவருடன் சேர்ந்து அவருக்காக வாழ்வதும் வாடிக்கையாகித்தான் போய் விட்டது.

தங்களின் வருகைக்கும் ஆழ்ந்த கருத்தோட்டத்திற்கும்
மிக்க நன்றி விமலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அண்ணா.... நீங்களே இப்படி சொன்னதால்.... நிச்சயம் இதைப்பற்றிய பதிவை ப் போடுவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டேன் அண்ணா.

ரொம்பவும் மண்டைக் காய்ந்து வெறுத்துட்டீங்க போல.....

கவலைப்படாதீர்கள். நீங்களெல்லாம் சந்தோஷப்படுவது போல கூடிய விரைவில் ஒரு நல்ல பதிவாக இடுகிறேன்.
நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

சிரிக்கத் தெரிந்தவரே மனிதர்.

ஆனால் அடுத்தவர் மனம் புண்படும் படி நாம் சிரிக்கக் கூடாது.

மலையாளத்தில் அல்லா என்றால் இல்லை என்று அர்த்தமா....?
மனோ சார்.... மலையாளத்தில் முஸ்லீம்கள் இல்லையா...? நான் உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன். அப்படி இருந்தால் அவர்கள் அல்லாவை இல்லை இல்லை என்று எப்படி பிராத்திப்பார்கள்...?

இதற்காக மலேசியாவின் தண்டனை என்ன? தெரியாது சார்.
சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்.

நன்றி மனோ சார்
உங்களின் நகைச்சுவையை நாங்களும் இரசித்தோம்.

அருணா செல்வம் சொன்னது…

இல்லை இல்லை. அதெல்லாம் வீணாகாது அம்மா.

இந்த ஜோக் புரியாததுவும் நல்லது தான்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி இனியா அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காவிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஹி ஹி ஹி.....

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம் என் மனத்தைக் காயப்படுத்தி அதனால் கவலை கவலையாக வந்துவிட்டது.
ஆண்கள் கவலைப்பட்டால் தண்ணீ அடிக்கிறீர்கள்.... நான் இப்போது என்ன செய்வதாம்.....

நேற்று முன்தினமே நான் “பிரான்ஸ் கம்பன் கழகத்து விழாவில் கவிதை வாசிக்க போய் விட்டேன். “சும்மா கவியரங்கத்திற்குப் போக முடியுமா.... கவிதை எழுத வேண்டாம்....
அதனால் தான் ஒரு சிலரின் கேள்விக்கு மட்டும் பதிலெழுதி விட்டுச் சென்றேன்.

நான் பதிவெழுதுவதை விட உங்களைப் போன்றோர்களின் கருத்துரைகளுக்குப் பதில் எழுதுவது தான் மகிழ்ச்சியாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதி எங்களுக்கு ஊக்கவிப்புக் கொடுங்கள்.

நன்றி “உண்மைகள்“

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

சகோதரி மலையாளிகள் "அல்லா" என்றால் இல்லை என்று தான் அர்த்தம்! ஆனால் அவர்கள் நாம் தமிழில் அல்லா என்று சொல்லுவது போல கடவுளை அல்லா என்று சொல்லுவதில்லை. அவர்கள் உச்சரிப்பு 'ல்' க்கும் 'ள்' க்கும் இடைப்பட்ட உச்சரிப்பு....அதை உச்சரித்தால்தான் புரிந்து கொள்ள முடியும்....எழுதிப் புரிய வைக்க முடியாது ஏனென்றால் மலையாளம் வாசிக்கத் தெரிந்தால் மட்டுமே அதை எழுத முடியும்! அதனால் ம்லையாளிகள் அல்லா என்பதற்கும் இஸ்லாமிய இறைவனான அல்லா என்று சொல்லுவதற்கும் வித்தியாசம் உண்டு! பின்னர் அவர்கள் அல்லாஹு அக்பர் என்றுதான் பெரும்பாலும் சொல்லுவதுண்டு!

நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எல்லாவற்றையுமே ரசித்தோம்!

வருண் சொன்னது…

பெண்கள் ஆண்கள் பத்தி நேரடியா இதயத்திலிருந்து வரும் வார்த்தைக்ளை/ "உண்மைகளை" அபப்டியே சொல்லி பேசுவதை கேட்டால் ஆண்களுக்கு கஷ்டம்தான்! :(

இதையெல்லாம் இ-மெயில்ல பேசிக்காமல் இணையச் சந்தியிலே நின்னு பேசி எங்களை ஒரு வழி பண்ணுறீங்களே? இதெல்லாம் நியாயமா?

ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க! பெண் என்றால் பேய்தான் இறங்கும்! ஆண் கள் என்று இறங்குவதுபோல் நடிக்கத்தான் செய்வாங்க! It is all "genetics"! Men genes are built that way! இதெல்லாம் கடவுள் செய்த குற்றம். அந்தாள்ட்ட போயி கேக்காமல் பாவம் எங்களைப்போட்டு "செட்டு" சேர்ந்துக்கிட்டு கொல்றீங்களே? நீங்க ரெண்டு பேரும் 150 ஆண்டுகள் வாழ்ந்து "அனுபவிக்கணும்"னு சபிக்கிறேன்! :)

வருண் சொன்னது…

இதிலிருந்து விளங்குவது என்ன வென்றால்..அருணா செல்வம் அவர்கள் வாழ்வது மிகச் சிறிய உலகம்! மனம் விட்டு சிரிக்கும் ஆண்களை இன்னும் இவர்கள் பார்க்கவில்லை போல! :(

ezhil சொன்னது…

யார் என்ன சொன்னாலும் ஆண்களும் மாறப் போவதில்லை.பெண்களும் மாறப் போவதில்லை.. திருமணங்களும் நடக்காமல் இருக்கப் போவதில்லை...

saamaaniyan சொன்னது…

ஒவ்வொரு சமூகத்திலும் தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை ஒன்று உண்டு ! தமிழின் கணவன் மனைவி சார்ந்த நகைச்சுவையும் அப்படியே !

நான் அனுபவத்தில் கண்ட ஒன்று... தங்கள் மனைவியரை பற்றி "திகில்" நகைச்சுவையாய் பேசுபவர்கள் உண்மையில் அவர்கள் மனைவியர் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.

மதுரைத் தமிழன், பகவான் ஜி, பால கணேஷ் ஐயா, ரஹிம் கஸாலி..... போன்றவர்களும் நிச்சயமாய அப்படிபட்டவர்களாக தான் இருப்பார்கள்.

" பதிவுகளைப் படிக்கும் திருமணமாகாத இளஞர்கள்... "

அவங்களெல்லாம் எங்களைவிட ரொம்ப விபரம்...

" பூரிக்கட்டையெல்லாம் வச்சிக்கிட்டு நீ சிரமப்பட வேண்டாம்மான்னு " சொல்லி ரொம்ப முன் ஜாக்கிரதையா "சப்பாத்தி மேக்கர் " வாங்கி கொடுத்திடறாங்க !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

பெயரில்லா சொன்னது…

அருணா, உங்கள் பதிவை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், வியந்தேன். கருணாகரன்

மகிழ்நிறை சொன்னது…

ஒ! நீங்க எங்களை பப்ளிக்கா கலாய்க்கலாம். ஆனா நாங்க இதை மெயில் ல தான் பேசிக்கனும்மா? இதை சொன்னது வருண் தானா? இல்லை நான் எதுவும் தவறாக புரிந்துகொண்டிருக்கிறேனா? 150ஆண்டுகள் உண்மையிலேயே சாபம் தான்:(( ஒரு friend க்கு இவ்ளோ கடுமையான சாபம் தரலாமா?

Yaathoramani.blogspot.com சொன்னது…

மதுரைத் தமிழன் அவர்களின்
விளக்கம் மூலமே ஜோக்கைப் புரிந்து கொள்ள
முடிந்தது,வயதாகிவிட்டதோ ?

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 12

வருண் சொன்னது…

டீச்சர்: மொதல்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை சரி செய்து கொள்கிறேன். அது "இரங்கும்"னு வரணும். :)


வருண் சொன்னது…

அடடே நம்ம தல, மதுரைத் தமிழன்தான் இதை ஆரம்பிச்சு வச்சாராக்கும்? அவர் ஒரு அப்பாவிங்க. ரொம்ப வெகுளினால மனநாக்கில் பேச வேண்டியதை எல்லாம் இப்படி பின்னூட்டமாக உலகறிய வெளியிட்டு விடுவாரு. நானே அவரை தப்பாப் புரிந்து கொண்டு அவருடன் சண்டையெல்லாம் போட்டு இருக்கேன். அவர் பெரிய மனுஷன். நான் அப்படி நடந்தும் என் சிறுபிள்ளைத் தனத்தைப் புரிந்துகொண்டு, என்னை மன்னித்து தன்னை பெரியமனிதன்னு நிரூபித்தவர் அவர். :)

சரி நம்ம எல்லாரும் சமாதானமாப் போயிடலாம். உங்களோட சண்டை போட எனக்கு திரானியில்லை! :)

அருணா செல்வம் சொன்னது…

வருண் சார்.... ஏங்க இப்படி?

கடைசியில் என் தலைப்புக்கு ஏற்றார் போல வந்திட்டீங்களே....

ஏதோ மதுரைத்தமிழன் நீங்கள் கவிதை எழுதவில்லை என்பதால் உங்களைத் தன் நண்பராக எற்றுக் கொண்டார்.
அதற்காக அதற்காக.... இப்படியா....?

வருண் சொன்னது…

என்னது எனக்குக் கவிதை எழுதத் தெரியாதா?

நம்ம கவிதையைக் கொஞ்சம் பாருங்க!

http://timeforsomelove.blogspot.com/2012/05/blog-post_4866.html

கவிஞரே! ஏன் இந்த வீண் வம்பு? (இதுதான் கவிதைத் தலைப்பு)
---------------------------
சொல்லவந்த ஒரு விசயத்தை
தெளிவாக சொல்வதை தவிர்த்து
கவிதை வடிவாக்க வேண்டுமென்பதால்
மடக்கி மடக்கி எழுதி
பத்தி பத்தியாக எழுதி
அர்த்தமற்ற கற்பனையை
வலுக்கட்டாயமாகக் கலந்து
தேவையேயில்லா வர்ணனையை
அங்கங்கே அதில் பூசி மொழுகி
பிறரையும் குழப்பி தானும்
குழம்புவதுதான் கவிதையா?

-கவிஞர் வருண் :))))