செவ்வாய், 10 டிசம்பர், 2013

உலகில் நானே உயர்ந்தவன்!!


   ஒரு சமயம் யோகி ஒருவர் ஒரு ஞானியிடம் வந்தார்.
   அவர் ஞானியிடம், “சாமீ... எனக்கு ஆகாயத்தில் பறக்கும் சக்தி இருக்கிறது. பூமிக்குக் கீழ் நீண்ட நேரம் புதையுண்டு மூச்சை அடக்கும் சக்தி இருக்கிறது. தண்ணீருக்குள் அதிக நேரம் மூழ்கி இருக்கும் அபரிமிதமான சக்தியும் இருக்கிறது“ என்றார் பெருமையாக.
   ஞானி அவர் சொன்னதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. யோகிக்குக் கோபம் வந்தது. இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல், “சாமீ... இந்த விசயங்கள் எல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை அல்லவா...? அப்படியென்றால் உலகில் நான் மட்டும் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்பதைத் தங்களின் வாயால் சொல்லுங்கள்“ என்றான்.
   ஞானி அந்த யோகியைக் கூர்ந்து பார்த்தார்.
   பேச்சில் மட்டுமல்ல, அவரது கண்களிலும் அகந்தை சுடர் விட்டது.
   அதை அழிக்க எண்ணிய ஞானி, “ஐயனே... பாருங்கள்... பறவைகள் ஆகாயத்தில் பறக்கின்றன. புழுக்கள், விஷ ஜந்துக்கள் போன்றவை பூமிக்கடியில் நீண்ட காலம் வாழ்கின்றன. மீன்கள் தண்ணீருக்குள்ளேயே பிறந்து வாழ்கின்றன. இவையெல்லாம் எனக்கும் சாத்தியம் என்கிறீர்கள். அப்படிப்பட்ட அற்ப ஜந்துக்களைப் போலத்தான் இப்போது நீங்கள் எனக்குத் தெரிகிறீர்கள். அவையெல்லாம் தெரிந்ததால் உங்களுக்கு என்ன பயன்...?“ என்று கேட்டார்.
   யோகி விழித்தார்.
   “பறப்பதால், பூமிக்கடியில் மூச்சை அடக்குவதால் நீங்கள் அடையப் பாகும் லாபம் என்ன?“ திரும்பவும் கேட்டார் ஞானி.
   யோகி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.
   ஞானி புன்னகைத்து, “உலகில் மனிதன் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. கருணை போன்ற நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும். அகந்தை போன்ற தீய குணங்களை விட்டொழிக்க வேண்டும். இவற்றை விட்டு விட்டு பறப்பதாலும் மூச்சை அடக்குவதாலும் யாதொரு பயனும் இல்லை.“ என்றார்.
   “உலகிலேயே நான் தான் உயர்ந்தவன், வஸ்தாது“ என்ற அகந்தை கொண்டிருந்த அந்த யோகி, ஞானியின் விளக்கத்தைக் கேட்டு வெட்கித் தலை குனிந்தான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

32 கருத்துகள்:

 1. யோகி கஷ்டப்பட்டு பல வித்தைகளை கற்றுக் கொண்டு ஞானியிடம் காண்பித்து சிறு குழந்தையை போல பாராட்டு பெற வந்தால் அந்த ஞானி இப்படி மட்டும் தட்டி அனுப்பிட்டாரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகி இன்னும் சிறு குழந்தையைப் போலவே
   பேசுகிறாரே என்றுதான் ஞானி சுட்டிக்காட்டினார் போலும்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி “உண்மைகள்“

   நீக்கு
 2. ஆழமான பொருளுடைய
  அற்புதமான கதை
  இன்றைய சூழலுக்கு தேவையான
  கதையும் கூட
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   நீக்கு
 3. உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும்.
  திறமைகளும் இருக்கும். அதைக்கொண்டு அகங்காரம் கொண்டு
  நான் உயர்ந்தவன் என்ற பிதற்றல் எப்போதும் உய்விக்காது என்று
  விளம்பும் நல்ல கதை சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி மகி அண்ணா.

   நீக்கு
 4. வணக்கம்
  கதை அருமை வாழத்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 5. எனக்கும் படித்ததில் பிடித்துவிட்டது

  பதிலளிநீக்கு
 6. ம்ம்ம்ம்ம்ம் நல்ல தகவல்... நல்ல கதை... நல்ல தத்துவம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி காயத்ரி.

   நீக்கு
 7. அவனுக்கு தெரிந்ததை கொண்டு நல்ல முறையில் மக்களுக்கு உதவ முயற்சிக்கலாம். வெட்கப் பட வேண்டிய அவசியமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவரின் அகங்காரத்தை மற்றவர் சுட்டிக்காட்டும் பொழுது அதில் உண்மையிருந்தால் அவன் வெட்கித் தலைகுனிய வேண்டி உள்ளது.
   அந்த நேரத்தில் அவன் தன் தவறு உணர்ந்து வெட்கப்பட்டால் உயர்ந்தவன் ஆகிறான்.
   அதனால் இக்கதையில் முடிவில் சொல்லியவிதம் நன்றே.

   கருத்துக்கு மிக்க நன்றி ஆவி.

   நீக்கு
 8. ஞானியின் விளக்கம் அருமை... நன்றி...

  வாழ்த்துக்கள் சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் ஐயா.

   நீக்கு
 9. மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

  லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html

  பதிலளிநீக்கு
 10. ஆனாலும் எங்க வீட்டுக்கார் என்னை விட உயர்ந்தவர்ங்க... அட ஹைட்லதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவருக்கு மனசும் உயர்வானதாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன் உஷா.

   உங்களைப் படத்தில் பார்த்தேன். உங்களைவிட உயரமான துணை. நிச்சயம் ஜோடி அருமையாகத் தான் இருக்கும். வாழ்த்துக்கள் உஷா.

   நீக்கு
 11. Nice .

  யோகிக்கும் ஞானிக்கும் என்னங்க வித்தியாசம் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடலை மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கட்டி வைத்திருப்பவன் யோகி.
   உடலையும் மனத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவன் ஞானி.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஜீவன் சார்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நம்பள்கி.

   நீக்கு
 13. எளிமையான கதையில் ஆழமான கருத்து....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி கலிய பெருமாள் ஐயா.

   நீக்கு
 14. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 15. ஞானி அந்த யோகிக்கு உணர்த்தி விட்டார் ,ஆனால் நடப்பில் இப்படி செய்வதாக கூறிக் கொளபவர்கள் தானே மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ?
  த.ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னவோ உண்மைதாங்க பகவான்ஜி.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பகவான் ஜி.

   நீக்கு