திங்கள், 15 ஏப்ரல், 2013

நீதி மன்றம்!!



 
நாட்டில் நடக்கும் வஞ்சகங்கள்
    நன்றாய்த் தெரிந்தே நடந்தாலும்
ஏட்டில் அவைநாம் எழுதிவிட்டு
    ஏதோ மனத்தை ஆற்றுகின்றோம்!
வீட்டில் அவையே நடந்துவிட்டால்
    விம்மிப் புடைத்தே எழுந்துவந்து
நீட்டி அளந்து நீதிசொல்லும்
   நீதி மன்றில் வழக்கிடுவோம்!
   
தவற்றைச் செய்த கயவனிவன்!
    தர்க்கம் பண்ணத் தேவையில்லை!
இவனே திருடன் எனத்தெரிந்தும்
    இன்னோர் கூட்டம் அதைமறுக்கும்!
சவமாய் நடுவர் அமர்ந்துகொண்டு
   சாட்சி வேண்டும் எனச்சொல்லிக்
கவர்ந்து பேசும் பேச்சிற்குக்
   காலம் தருவார் வாய்தாவாய்!!

நீதி வேண்டும் எனச்சொல்லி
   நீதி கேட்டு நாடிநின்றால்
பாதி வாழ்க்கை ஓடிவிடும்!
   பணமும் தேய்ந்து பிறையாகும்!
வாதி பிரதி வாதியென
   வழக்கு நடக்கும் தொடர்வாக
மீதி இருக்கும் மனத்தெளிவும்
   மீள முடியாக் கர்விக்கும்!!

நமக்கு நீதி வேண்டுமென்றால்
   நடுவர் வேண்டாம் நயமாக!
தமக்கோ எங்கே ஆதாயம்
   தாமாய்க் கிடைக்கும் எனப்பார்ப்பார்!
உமக்கு நீதி வேண்டுமென்றால்
   ஊழின் காலில் அதைக்கட்டி
எமக்கோ ஏதும் தேவையில்லை
    என்றே இருத்தல் நன்னீதி!!

அருணா செல்வம்.
12.04.2013

35 கருத்துகள்:

  1. இவனே திருடன் எனத்தெரிந்தும்
    இன்னோர் கூட்டம் அதைமறுக்கும்.// ஆம் இன்றைய நிலை இப்படித்தான் உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  2. தீர்க்க தரிசனமான உண்மையான வார்த்தைகள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  3. /// நீதி கேட்டு நாடிநின்றால்
    பாதி வாழ்க்கை ஓடிவிடும்! ///

    முழு வாழ்க்கையையும் தொலைத்தவர்களும் உண்டு... (இன்னமும்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மை தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. சிறப்பான கவிதை.

    நிலுவையில் இருக்கும் பல்லாயிரக் கணக்கான வழக்குகளை எண்ணும்போது உங்கள் கவிதையின் ஆழம் புரிகிறது.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நிலுவை“... என்று இழுக்கும் பொழுதே...
      நாம் நடுவர்கள் (ஜர்ஜி) சரியான .... கள் என்றே
      எண்ணத் தோன்றுகிறது நாகராஜ் ஜி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி திகழ்.

      நீக்கு
  6. சாட்சிகளையும் வழக்குரைஞர்களின் வாதத்திறமையும் மட்டுமே அடிப்படையாய் வைத்து வழங்கப்படும் நீதியில் எனக்கும் பல சமயம் வேதனையும் வெறுப்பும் உண்டாவதுண்டு. வழக்காடுமன்றம் நடந்துநடந்தே செருப்போடு இருப்பும் தேய்ந்துவிடும்நிலையில், இயலாதவர்கள் என்னதான் செய்யமுடியும்? வழக்காடுமன்றத்தின் வழக்கமான செயல்கள் பற்றிய அருமையான கவிதை இது... பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதமஞ்சரி அக்கா.

      தங்களின் வருகைக்கும் ஆழமான கருத்தோட்டத்திற்கும்
      வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சவமாய் நடுவர் அமர்ந்துகொண்டு
    சாட்சி வேண்டும் எனச்சொல்லிக்
    கவர்ந்து பேசும் பேச்சிற்குக்
    காலம் தருவார் வாய்தாவாய்!!//

    சரியா சொன்னீங்க அர்த்தமுள்ள நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  8. நீதி தேடிப்போனால் நடுவீதியில் தான் நிற்கவேண்டிய இன்றை நிலைச்சொல்லும் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லா சொன்னீங்க தனிமரம்...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  9. நீதி வேண்டும் எனச்சொல்லி
    நீதி கேட்டு நாடிநின்றால்
    பாதி வாழ்க்கை ஓடிவிடும்!
    பணமும் தேய்ந்து பிறையாகும்!//நூற்றுக்கு நூறு வீதம் உண்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி டினேஷ்சாந்த்.

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. நல்ல கவி சொன்ன அன்புத் தோழியே அருணா...
    //உமக்கு நீதி வேண்டுமென்றால்
    ஊழின் காலில் அதைக்கட்டி
    எமக்கோ ஏதும் தேவையில்லை
    என்றே இருத்தல் நன்னீதி!!//

    நான் உங்கள் பக்கமே...:)
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. உண்மையை உள்ளபடி உரைத்த விதம் அருமை தோழி !
    வாழ்த்துக்கள் மேலும் தொடரட்டும் தங்கள் பணி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  13. நீதிமன்றம் உண்மையை உணர்த்து அழகிய கவிதை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சே.குமார்.

      நீக்கு
  14. தங்கள் கவிதையை வாசித்தால் ..

    நெஞ்சில் உரமும் இன்றி ...
    நேர்மை திறமும் இன்றி ...
    வஞ்சனை கொள்வாரடி... கிளியே ...,
    வாய்ச் சொல்லில் வீரரடி ...

    என்று பாரதி பாடி பாடல் தான் நினைவிற்கு வருகிறது

    நீதியும் நேர்மையும் சங்க இலக்கிய கதைகள் ஆகிவிட்டதே !!!

    -தங்கள் அன்பு சகோதரன்
    -மல்லன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீதியும் நேர்மையும் சங்க இலக்கிய கதைகள் ஆகிவிட்டதே !!!
      நீங்கள் சொன்னது உண்மை தான் அண்ணா.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  15. தங்கள் கவிதையை வாசித்தால் ..

    நெஞ்சில் உரமும் இன்றி ...
    நேர்மை திறமும் இன்றி ...
    வஞ்சனை கொள்வாரடி... கிளியே ...,
    வாய்ச் சொல்லில் வீரரடி ...

    என்று பாரதி பாடி பாடல் தான் நினைவிற்கு வருகிறது

    நீதியும் நேர்மையும் சங்க இலக்கிய கதைகள் ஆகிவிட்டதே !!!

    -தங்கள் அன்பு சகோதரன்
    -மல்லன்

    பதிலளிநீக்கு
  16. நீதி வேண்டும் எனச்சொல்லி
    நீதி கேட்டு நாடிநின்றால்
    பாதி வாழ்க்கை ஓடிவிடும்!
    பணமும் தேய்ந்து பிறையாகும்!

    இன்றைய நடைமுறை இதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு
  18. நீதிமன்ற நடைமுறை அழகான கவிதை ஆக்கிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு