வியாழன், 1 நவம்பர், 2012

பாரேன் கண்ணே !!!


சித்தழகுக் காட்சிகளைக் கண்கள் காட்டும்!
    சிரிப்பழகு சிந்தையிலே போதை ஊட்டும்!
தத்தழகுக் குழந்தையெனக் கொஞ்சிக் கொஞ்சிப்
    பித்தழகு மூட்டுகிறாய்! மலரும் வண்ணக்
கொத்தழகு! கொடியழகு! கவிதை பாடும்
    குயிலழகு! மயிலழகு! என்றே எண்ணிப்
பத்தழகுப் பாட்டாகப் பாவை உன்னைப்
    படித்திடவே திரும்பிஎன்னைப் பாரேன் கண்ணே!

 அருணா செல்வம்

13 கருத்துகள்:

Subramanian சொன்னது…

//சிரிப்பழகு சிந்தையிலே போதை ஊட்டும்//

ஒவ்வொரு வார்த்தைகளும் அருமையாக இருக்கிறது. மிக மிக அழகான கவிதை.

பெயரில்லா சொன்னது…

''..பத்தழகுப் பாட்டாகப் பாவை உன்னைப்
படித்திடவே திரும்பிஎன்னைப் பாரேன் கண்ணே...''
நல்ல வரிகள் அருணா..
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

பின்னழகுக் கவிதையே
தேனாய் இனிக்கிறது
இன்னும் முன்னழகு காட்டினால்
கவிதைகள் முத்துக்களாய் விரிவது நிச்சயம்
மனம் தொட்ட கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவ்வளவு சொல்லியும் பார்க்கவில்லை என்றால் எப்படி...?

அருமை...

நன்றி...
tm2

G.M Balasubramaniam சொன்னது…


பார்த்தாளா. பார்ப்பாளா.?

பால கணேஷ் சொன்னது…

அழகை வார்த்தைகளால் கோர்த்து மாலையாக்கிய கவி அழகு. உங்கள் தமிழும் அழகு அருணா.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான அர்த்தமுள்ள வரிகளுடன் பாடல் ஜோர்.

அதைவிட ஜோர் அந்தப்பின்னலங்காரப் படம்....
[அதாவது பின்னல் அலங்காரப் படம்]

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன்
VGK

சசிகலா சொன்னது…

திரும்பி பார்க்காமலும் இருப்பாங்களா இப்படி கவி கொடுத்தால்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கவிதையில் உங்கள் சந்தம் அழகு! வாழ்த்துக்கள்!

ஆத்மா சொன்னது…

அழகான கவிதை

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

சித்தழகுக் காட்சிகளைக் கண்கள் காட்டும்!
சிரிப்பழகு சிந்தையிலே போதை ஊட்டும்!
தத்தழகுக் குழந்தையெனக் கொஞ்சிக் கொஞ்சிப்
பித்தழகு மூட்டுகிறாய்! மலரும் வண்ணக்
கொத்தழகு! கொடியழகு! கவிதை பாடும்
குயிலழகு! மயிலழகு! என்றே எண்ணிப்
பத்தழகுப் பாட்டாகப் பாவை உன்னைப்
படித்திடவே திரும்பிஎன்னைப் பாரேன் கண்ணே!
superb sir

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

ரசித்துப் படித்த கவிதை .. அழகிய பாடல்....இன்பமான அனுபவம்..தொடர்க..