வெள்ளி, 30 நவம்பர், 2012

குளிர்காலத்தில் உடம்பு வலிக்கிறதா..? (எளிய நிவாரணம்)
   நட்புறவுகளே... உங்களுக்கு அல்லது உங்களில் யாருக்காவது இந்தக் குளிர்காலம் வந்தால்...
உடம்பு வலிக்கிறதா...?
முதுகு தண்டில் வலிக்கிறதா?
கழுத்தெலும்பு வலிக்கிறதா..?
இடுப்பெலும்பு குடைகிறதா..?
வயிறு உப்பலாக இருக்கிறதா?
சோம்பலாக இருக்கிறதா?
சாப்பிடப் பிடிக்காமல் ஏதோ சாப்பிட வேண்டுமே என்று சாப்பிடுகிறீர்களா...?
நிறைய வேலையிருந்தும் எந்த வேலையையும் செய்ய பிடிக்கவில்லையா..?

    கவலையை விடுங்கள்.
    இதையெல்லாம் இரண்டே நாட்களில் போக்க ஓர் எளிய வழியைச் சொல்கிறேன். மிகவும் சாதாரண வழி. என் பாட்டி சொன்ன வழி.
    டாக்டருக்கு பணம் அழுவ வேண்டாம். மருந்து வாங்கி கடினப்பட்டு அதை விழுங்க வேண்டாம்.
    நான் சொன்ன பிறகு ப்பு இவ்வளவு தானா என்பீர்கள். ஆனால் சிறந்த வழி.
    நான் சொல்வதைப் போல் பக்குவம் செய்து சாப்பிடுங்கள். இந்த வலியெல்லாம் ஓடியே போய்விடும்.

இரண்டு டம்ளர் நீரில்
ஒரு ஸ்பூன் மிளகுத்தூள்
ஒரு ஸ்பூன் நெல்சீரகத் தூள்
கொஞ்சம் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் பெருங்காயத் தூள்
ஒரு தக்காளி
நான்கு பல் நசுக்கிய பூண்டு விழுது
கொஞ்சம் புளி அல்லது எலுமிச்சை சாறு.
கொத்த மல்லித் தழை கைப்பிடி அளவு
விருப்பத்திற்கேற்ற உப்பு  

இந்த எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக கையால் பிசைந்து வையுங்கள். இன்னொறு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிகக் கொஞ்சமாக ஊற்றிய எண்ணையில் கடுகு உளுத்தம்பயிரு ஒரு காய்ந்த மிளகாய் போட்டு வெடித்ததும் கரைத்து வைத்ததை அதில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் நிறுத்தி ஆறவிடுங்கள்.
    பின்பு அதை ஒரு டம்ளரில் வடிகட்டி அப்படியே குடிக்கலாம். அல்லது சோற்றில் கலந்தும் சாப்பிடலாம்.
    இது போல் இரண்டு நாட்கள் சாப்பிட்டாலே உடம்பில் இருக்கும் வலியெல்லாம் ஓடிவிடும்.

   இநதப் பக்குவத்தை எங்கேயோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா...? உங்களின் எண்ணம் சரிதான்.


                             ரசம்...!!

    இதுதானா... என்று எல்லோரும் என்னை முறைப்பது எனக்கு இங்கிருந்தே தெரிகிறது. என்ன செய்வது... கோபப் படாதீர்கள்.
    இந்த குளிர்காலம் வந்தாலே உடலில் சேர்ந்துள்ள வாயு எல்லாம் மூட்டுக்கு மூட்டு தங்கி இப்படி உபத்திரவம் கொடுக்கும் தான். அதைப் போக்க எளிய வழி நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் இந்த எளிய ரசம் தான். நம் உணவே நமக்கு மருந்து என்பதை இளைய தலைமுறை அறிவதில்லை.
   அவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு. அதனால் குளிர் காலத்தில் உணவில் அடிக்கடி ரசம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
   
 ஆனால் ஒன்று...
    மேற் சொன்ன வலிகளுடன் காய்ச்சலும் இருந்தால் அவசியம் மருத்துவரிடம் செல்வது தான் நல்லது.


அருணா செல்வம்.

27 கருத்துகள்:

Prem S சொன்னது…

ஹ ஹா ரொம்ப குசும்பு தான் உங்களுக்கு ஆனாலும் உண்மை தான்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல ரஸமான பதிவு. பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அதனால் குளிர் காலத்தில் உணவில் அடிக்கடி ரசம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

கவியாழி சொன்னது…

தகவலுக்கு
நன்றி ,எனக்கும் இந்த பிரச்சனை உள்ளது

அருணா செல்வம் சொன்னது…

பாஸ்.... என்ன சிரிப்பு இது...?

நான் உண்மையிலும் உண்மையைத் தான் எழுதியுள்ளேன்.
எங்கள் வீட்டுப்பெரியவர்கள் சொன்ன வழி இது.
நீங்கள் வேறு ஏதோ ரசம் என்று நினைத்தவிட்டது போல் அல்லவா இருக்கிறது உங்களின் சிரிப்பொலி...

நன்றி பாஸ்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரிங்க... ரொம்ப நன்றி...
tm2

முத்தரசு சொன்னது…

சரிங்.


நன்றி

ezhil சொன்னது…

நீங்க சொன்னது சரிதான் . இந்தக் காலத்துக் குழந்தைகள் (நடுத்தர வயதினரும் தான்) ரசத்தை முற்றிலுமாகவே உணவில் சேர்த்துக்கொள்வதில்லை . அதன் நலன் கருதியாவது சேர்த்துக்கொள்ளலாம் .அடிக்கடி மருந்துகள் துணை நாடுவதை தவிர்க்கலாமே

Jayadev Das சொன்னது…

tHANKS!!

Unknown சொன்னது…

தினம் இரசமும் சாப்பிடுவேன்!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வரவிற்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

இங்கே பிரான்சில் நிறையப் பேருக்கு இந்தப் பிரட்சனை இருக்கிறது ஐயா.
நான் இந்த ஐடியாவை சொன்னதற்கு ரசமா... அது ஏழைகள் உணவாயிற்றே என்றார் ஒருவர்... அவரை என்வென்று சொல்வது?

தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

குட்டன்ஜி சொன்னது…

பயனுள்ள பகிர்வு

குட்டன்ஜி சொன்னது…

த.ம.7

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றிங் முத்தரசு மனசாட்சி.

அருணா செல்வம் சொன்னது…

ஆமாம் தோழி.

நம் முன்னோர்களின் உணவுமுறையில் நல்ல மருத்துவம் இருந்திருக்கிறது. என்பாட்டி நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதை நாம் தான் இந்தத் தலைமுறைக்குச் சொல்லியாக வேண்டும்.

தங்களின் வருகைக்கும் நல்ல கருத்தோட்டத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஓ... அதனால் தான் நீங்கள் நவரசத்தையும் கவிதையில் கொண்டு வருகிறீர்களா...?

தங்களின் வருகைக்கும் உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
முக்கியமாக ஓட்டிற்கும் மிக்க நன்றி குட்டன் ஐயா.

Seeni சொன்னது…

ada appadiyAaaa!!?

Yaathoramani.blogspot.com சொன்னது…

பயன் தரும் பதிவு
சொன்ன விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

பயன் தரும் பதிவு
சொன்ன விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 8

அருணா செல்வம் சொன்னது…

ஆமாங்க....

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.