வியாழன், 13 நவம்பர், 2014

வண்ணவிருத்தம் -1சந்தக் குழிப்பு.. தானன தனத்த தனதானா

ஓடிடும் கணத்தை மதியாலே
   ஓரிடம் ஒளிக்க முடியாதே!
தேடிடும் பணத்தை மறந்தாலே
   தீமைகள் மனத்தை நெருங்காதே!
கூடிடும் குணத்தை அறிந்தாலே
   கோபமும் உரைக்க விரும்பாதே!
நாடிடும் அறத்தை அடைந்தாலே
   நாமகள் நலத்தை அருள்வாளே!

அருணா செல்வம்
13.11.2014

34 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அறம் காப்போம்
அருமை சகோதரியாரே
நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

'பசி’பரமசிவம் சொன்னது…

நல்ல நல்ல கவிதைகள் படித்திட
நாடுக அருணா கதம்ப வலை.

Avargal Unmaigal சொன்னது…

அருமை அருமை

Avargal Unmaigal சொன்னது…

தலைப்பையும் தமிழில் எழுதுங்க....

'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...

KILLERGEE Devakottai சொன்னது…

நல்ல சிந்தனையில் உதி(ர்)த்த நல்ல கவி அருமை.

இளமதி சொன்னது…

உள்ளத்தைக் கொள்ளையிட்ட வண்ண விருத்தம்!
சந்தமோ சாற்றுதற்கில்லை! அத்தனை சிறப்பு!

வாழ்த்துக்கள் தோழி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை சகோதரி! என்ன கவி வண்ணம்!!!!

Unknown சொன்னது…

வண்ண விருத்தத்தில் உங்கள் எண்ணம் அமிர்தம் ,பருகி மகிழ்ந்தேன் !
த ம 6

”தளிர் சுரேஷ்” சொன்னது…

விதவிதமாய் கவிதைகள் படைத்து அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…வணக்கம்!

தமிழ்மணம் 7

வண்ண விருத்தம் வழங்கும் வடிவழகு
எண்ணம் புகுந்தே இனித்ததுகாண்! - திண்ணமுடன்
பாட்டுக் கலைபயிலும் பாவை அருணாவைத்
தீட்டும் புகழே திரண்டு!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நீங்களும் உங்கள் உங்கள் குருநாதரும் பல வகைப் பா வகைகளை அறிமுகப் படுத்தி விளக்கமும் அளிப்பது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
பாடலும் கருத்தும் அருமை

மகிழ்நிறை சொன்னது…

ஹா....ஹா...ஹா...

மகிழ்நிறை சொன்னது…

நல்ல சிந்தனை தோழி!!!
அவ்வ்வ்வ் நமக்கு தெரிஞ்சதெல்லாம் அவ்ளோ தான்:((

சிவகுமாரன் சொன்னது…

"சந்ததம் பந்தத் தொடராலே"
என்னும் திருப்புகழ் மெட்டில், அசத்திவிட்டீர்கள் சகோதரி.

சிவகுமாரன் சொன்னது…

"சந்ததம் பந்தத் தொடராலே"
என்னும் திருப்புகழ் மெட்டில், அசத்திவிட்டீர்கள் சகோதரி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஐ.... எனக்கு விளம்பரம்......!!!

வணக்கம் ஐயா.
எப்போது மீண்டும் உங்களின் கதைகளைப்
படிக்க முடியுமா.....?

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “பசி“ பரமசிவம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

ஐயோ.....

தமிழரே எனக்கு இவ்வளவு தாங்க தமிழ் தெரியும்....

மைதிலி தோழி..... நம் நண்பர் ஜோக் அடித்துள்ளாரா....?

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கில்லர் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

இது வண்ணமா? சந்தமா? என்று தெரியவில்லைங்க.

புலவர் அரங்க.நடராசன் அவர்களின் புத்தகத்தில் இந்தச் சந்தக்குழிப்பில் பாடல் ஒன்று இருந்தது. எழுதிப்பார்த்தேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

அமிர்தம் இனிப்பாக இருந்ததா....?

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாகவான் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்து கவிதைக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

எந்த வகையாக இருந்தாலும் எளிமையான தமிழில்
எழுதவே ஆசைப்படுகிறேன் ஐயா.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

தெரியாததையும் கற்றுக் கொள்ளலாம் தோழி.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

ஓ.... திருப்புகழில் இப்படி ஒரு மெட்டு இருக்கிறதா.....?
உங்கள் அளவில் நான் ஆராய்ந்து படித்ததில்லை கவிஞர்.

இலக்கண குறிப்புடன் ஏதாவது பாடல் படித்தால் அதன் படி எழுதி பார்ப்பேன். அவ்வளவு தான்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோதரரே.