செவ்வாய், 16 டிசம்பர், 2014

“லிங்கா“ படம் பார்த்தேன்!




நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இந்தப் பதிவு “லிங்கா“ பட விமர்சனம் இல்லை. என் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் மட்டுமே சொல்லும் பதிவு. அவ்வளவே!
   சூப்பர் ஸ்டார் ரஜினி படம் என்றால் எல்லோருக்கும் இருக்கும் ஆவலைப்போல எனக்கும் படம் பார்க்க ஆவல் உண்டு. ரஜினி படம் என்றால் மனத்தில் நிற்கும் பஞ்ச் டைலாக்குகள் பிடிக்கும். (அதை மற்றவர்கள் தான் எழுதினார்கள் என்பது தெரிந்திருந்தும்...)
   படத்தில் பிரமாண்ட காட்சிகள் இருக்கும். எந்திரன், சிவாஜி.... போன்று கதையில் ஏதாவது ஒரு புதுமை இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் எனக்கு மட்டுமில்லை, அனைவருக்குமே இருப்பது தான்.
    லிங்கா படம் இந்த மூன்று நாட்களில் 100 கோடி வசுலைத் தாண்டி விட்டது என்ற செய்தி கூட படம் பார்க்கும் ஆவலை மேலும் தூண்டியது. தவிர படம் மூன்று மணி நேரமாம். டைட்டானிக் போல அலுப்பில்லாமல் சென்றது என்ற விமர்சனங்கள் மேலும் மேலும் ஆவலைத் தூண்டியது.

அதனால்....

   நேற்று இரவு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தைப் பார்த்தேன். இரண்டரை மணி நேர படம். (படம் மூன்று மணி நேரம் ஓடியது மக்களுக்கு அலுப்பு வந்ததால் படத்தில் வேண்டாத 26 நிமிட காட்சிகளைக் குறைத்துள்ளார்களாம்)
   கதை இன்றைய நாளிலும், இன்றிலிருந்து எழுபது வருடம் ஆதாவது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பும் நடந்த நிகழ்ச்சியையும் படமாக எடுத்திருக்கிறார்கள்.
   ஆனால், உண்மையில் முல்லை பெரியார் அணையைக் கட்டிய பென்னி குயிக்கின் கதையின் தழுவல் தான் இந்த லிங்கா படத்தின் பழங்கால கதையமைப்பு.
   கதையில் இன்றைய நிலையில் நடக்கும் நிகழ்ச்சிகளை நயம்படவும் நகைச்சுவையாகவும் சொல்லி இருந்தாலும் முற்காலத்தில் நடந்தக் கதையைச் சொல்லிச் சென்ற விதம் சொதப்பல் தான். கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கமா இந்தப்படம் என்ற எண்ணம் அடிக்கடி தோன்ற வைக்கிறது.
   ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவைப் பல இடங்களில் பாராட்டலாம். ஆனால் கிராஃபிஸ் காட்சிகளில் கோட்டை விட்டுவிட்டார்.
   ஏ.ஆர்.ரஹ்மானின் இந்தியா.... பாடல் மனத்தை வருடுகிறது. மற்றப்பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டால் தான் பிடிப்பு ஏற்படும் என்ற அளவிலேயே உள்ளது.
   சூப்பர் ஸ்டார் கொடுத்த வேலையை மிகவும் நன்றாக செய்திருக்கிறார். அவர் நடிப்பில் குறையே சொல்ல முடியாது. நடிப்பு, நடனம், அவரின் ஸ்டெய்ல்.... எதிலும் அவரிடம் குறைகாண முடியவில்லை என்பது படத்தின் முக்கிய பிளஸ் பாயிண்ட்.
   கதாநாயகிகள் அனுஷ்கா, சோனாக் ஷி இருவரும் நன்றாகவே செய்திருக்கிறார்கள். சோனாக் ஷியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்.
   இடையிடையே ரஜினி சந்தானத்தின் நகைச்சுவை படத்தை அலுப்பில்லாமல் பார்க்க வைக்கிறது.
   
   இதிலிருந்து நான் சொல்ல வருவது என்னவென்றால், ரஜினி ரசிகர்களோ, ரசிகராக இல்லாதவரோ..... சூப்பர் ஸ்டாரின் படம் என்ற எதிர்ப்பார்ப்புடன் படம் பார்க்க வந்தவர்களுக்குப் படம் முழு திருப்பியைத் தந்திருக்குமா என்பது சந்தேகமே.

அருணா செல்வம்

16.12.0214

20 கருத்துகள்:

  1. நான் பார்க்கவில்லை. பொறுமையும் இல்லை.

    :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையுடன் பாருங்கள் ஸ்ரீராம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. இங்கு ரஜினி ரசிகரான நண்பர் படம் பார்த்து விட்டு வந்து ஒரே புலம்பல்... நான் இன்னும் பார்க்கவில்லை.... நீங்கள் சொல்லியிருப்பது அருமை அக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ரசிகர் புலம்புவார் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  3. ///லிங்காவை இணையத்தில் கிண்டல் செய்தவர்கள் மீது வழக்கு பாய்கிறது- செய்தி.///

    உங்க பதிவு கிண்டல் செய்த மாதிரி தோன்றுகிறது... உங்கள் மீது வழக்கு ஏதும் தொடுக்காமல் இருக்க
    ஏதுக்கும் ரஜினிகிட்ட பேசி பாக்குறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிண்டலா.....? அப்படியென்றால்....
      அனேகமாக ரஜினிகிட்ட பேசிட்டீங்கன்னு நினைக்கிறேன்....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி உண்மைகள்.

      நீக்கு
  4. ரசிகர்களுக்கு சந்தோசம்...!
    வெறியர்களுக்கு சந்தேகம்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட இப்படியும் இருக்கா....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. இன்னும் படம் பார்க்கவில்லை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமையாகப் பாருங்கள்.
      அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. //சோனாக் ஷியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்//
    இதெல்லாம் சாத்தியமா? சத்தியமா தெரியாமல் தான் கேட்கிறேன்.
    மற்றும்படி இந்தச் "சிங்கா"வை இலவசமாகவும் பார்க்கும் எண்ணம் இல்லை.
    சிங்கா" எனக் குறிப்பிட்டது. ஏதோ பொலிசு வருமாமே! அதுக்குப் பயந்துதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப பயந்துட்டிங்களா....
      //சோனாக் ஷியை இன்னும் கொஞ்சம் அழகாக காட்டியிருக்கலாம்//

      ஒரு பெண்ணை அழகாகக் காட்டலாம். மிகவும் அழகாகவும் காட்டலாம். அதேசமயம் அசிங்கமாகவும் காட்டலாம்.

      சோனாக் ஷியை காட்டி இருப்பது மூன்றாவது ரகம்.
      அது தான் மனம் ஆறாமல் எழுதிவிட்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி யோகன் ஐயா.

      நீக்கு
  7. நீங்கள் சொல்லுவது சரி என்றாலும் சில வை நன்றாக உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, ரஜினிக்கென்று ரசிகர்களிடம் ஓர் எதிர்பார்ப்பு இருந்துக் கொண்டு தான் இருக்கிறது. இதே படத்தை வேறு ஒரு நடிகர் நடித்திருந்தால் இதை ஆஹா ஓஹோ என்று பாராட்டிவிடலாம். ஆனால் ரஜினி என்பதால் கொஞ்சம் ஏமாற்றம் தான்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  8. ரொம்ப எதிர்பார்த்து போயிருக்கீங்கனு நினைக்கிறேன். நான் பயந்துகொண்டு போனேன், படம் ரொம்ப நல்லாவே இருந்துச்சு. un-cut long version தான் பார்த்தேன்.

    இன்னொரு முறை இந்தப் படத்தை மறுபடியும் பார்த்தாலும் பார்ப்பேன். ஆமா, அம்பூட்டு பிடிச்சது!

    என்ன பார்க்குறீங்க?

    ஆமாங்க, நான் ஒரு ரஜினி விசிறிதான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரஜினிக்குப் புழுக்கம் வராத வரையில் விசிறுங்கள். அது தான் அவரை மேலும் மேலும் நல்ல கதைகளைப் பார்த்து நடிக்கத் துர்ண்டும்.

      நானும் இன்னொரு முறை இந்தப் படத்தை மறுபடியும் பார்த்தாலும் பார்ப்பேன். ஆமா.

      என்ன பார்க்குறீங்க?

      ஆமாங்க, நான் ஒரு ரஜினி விசிறிதான்! :)


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வருண் சார்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மணிமாறன் ஐயா.

      நீக்கு