வெள்ளி, 12 செப்டம்பர், 2014

கொஞ்சம் சிரித்துவிட்டுப் போங்கள்!நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இன்று கொஞ்சம் “கடி“ ஜோக்ஸ் பதிந்துள்ளேன். சும்மா வந்து சிரித்துவிட்டு போங்க.

1.
இவர்- “நாங்கள் ஏழு பேர் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால் ஒருத்தர் கூட நனையவில்லை“
மற்றவர் – “அதெப்படி?“
இவர் – “அப்போது தான் மழையே பெய்யவில்லையே....“

2
ஆசிரியர் – “ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வச்சிருக்கே?“
மாணவன் – “அது வாயில்லாப் பிராணி சார்“

3
ஆசிரியர் – “வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன?“
மாணவன் – “முட்டையிலிருந்து தான் சார்“

4
ஒருவன் – “படகுல ஏறி பார்க்கலாமா?“
மற்றவன் – “அது முடியாது. ஏரியில தான் படகைப் பார்க்க முடியும்“

5.
ஆசிரியர் – “உலகில் எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கிறது?“
மாணவன் – “எல்லா பெட்ரோல் பாங்க்குகளிலும் சார்“

6.
ஆசிரியர் – “படிச்சி முடிச்சதற்கு அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு இருக்க?“
மாணவன் – “புக்கை மூடி வைக்கலாம் என்று இருக்கிறேன் சார்“

7.
ஆசிரியர் – “சுரேஷ்... நீ மட்டும் ஏன் ஹோம் வொர்க் பண்ணலை?“
சுரேஷ் – “நான் ஹாஸ்டல்ல தங்கி இருக்கிறேன் சார்“

8.
ஆசிரியர் – “நீ மூன்றாம் மாடியில் இருக்கும் போது தீ பிடித்துக்கொள்வதாக நினைத்துக்கொள். எப்படி அங்கிருந்து தப்பிப்பாய்?“
மாணவன் – “ரொம்ப ஈஸி சார். கற்பனைப் பண்ணுவதை நிறுத்திக்கொள்வேன்“

9.
ஆசிரியர் – “உங்க பையன் இங்கிலிஸில் படு வீக்கா இருக்கிறான் சார்“
பையனின் தந்தை – “தமிழிலே எப்படி இருக்கிறான்னு சொல்லுங்க சார்“
ஆசிரியர் – “தங்களின் மகன் ஆங்கிலத்தில் மிகவும் வலுவிழந்து இருக்கிறான் ஐயா“
பையனின் தந்தை - ???!!!

10.
ஒருவன் – நீண்ட நாள் உயிரோட வாழ என்ன வழி?“
மற்றவன் – “வேறென்ன... சாகாமல் இருப்பது தான்“

11.ஒருவர் – “காபி டம்ளரை வாய்கிட்ட வெச்சிக்கிட்டு அவர் என்ன பேசிக்கிட்டு இருக்கிறார்?“
மற்றவர் – “ஆவியோட பேசுறாராம்“

12.
ஒருவர் – “காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?“
மற்றவர் – “அவங்க “மெய்“ மறந்து காதலிக்கிறவங்களாச்சே!“

13.
ஒருவர் – “நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்று நினைத்தேன்“
மற்றவர் – “செய்வது தானே...“
முதலாமவர் – “கை எச்சலாகி விடுமே....“

14.
நோயாளி – “டாக்டர்.... எனக்கு மூனு மாதமா கடுமையான இருமல்..“
டாக்டர் – “அப்படியா? இத்தனை நாளா சும்மாவா இருந்தீங்க?“
நொயாளி – “இல்லை டாக்டர். இருமிகிட்டே தான் இருந்தேன்“

15.
அவர் – “நேத்து உங்க காருக்கு எப்படி ஆக்ஸிடென்ட் ஆச்சு?“
இவர் – “அதோ... அங்க ஒரு மரம் தெரியுதில்லையா?“
அவர் – “ஆமாம். தெரியுது.“
இவர் – “அது நேற்று எனக்குத் தெரியவில்லை“

கேட்டதில் சிரித்தது

அருணா செல்வம்

29 கருத்துகள்:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் நகைச்சுவைகள் பகிர்வுக்கு நன்றி
  த.ம2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 2. கொஞ்சம் என்ன நிறையவே
  ரசித்துச் சிரித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படீங்களா.....? மிக்க சந்தோஷம்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   நீக்கு
 3. அனைத்தும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி நாகராஜ் ஜி.

   நீக்கு
 4. எல்லாம் அருமை.
  4 - சுமார்.
  8 - இதை இன்னும் டெவெலப் செய்து சொல்வார்கள்.
  9, 14, - சூப்பர்!

  15 - என்ன ஒரு திறமையான பதில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் நிறைய ஜோக்குகளைப் படித்திருந்தாலும் கேட்டிருந்தாலும் இவையெல்லாம் நான் சமீபத்தில் கேட்டு இரசித்தவைகள்.
   நான் பெற்ற இன்பம் நம் வலைஞர்களுக்கும் என்று தான்....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

   நீக்கு
 5. கஷ்டத்தில் சிரிப்பவனுக்கு தோல்வியே கிடையாதே..!

  அருமையான தணுக்குகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கஷ்டத்தில் சிரிப்பு வருமா என்று தெரியவில்லை. ஆனால் விரக்தியில் வரும்.... அனுபவம் தான்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

   நீக்கு
 6. நீங்கள் தொகுத்தளித்த நகைச்சுவை விருந்துண்டு நானும் மகிழ்ந்தேன் !
  த ம 6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருப்பதிக்கே லட்டு கொடுத்திருக்கிறேன்.... பார்த்தீங்களா....))

   தங்களின் வருகைக்கும் மகிழ்ந்ததற்கும்
   மிக்க நன்றி பகவான் ஜி.

   நீக்கு
 7. ஏன் கொஞ்சமா தான் சிரிக்கனுமா ? ஹஹ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்...... அதிகமாகச் சிரித்துவிட்டால்... நீங்கள் பத்து ஜோக்கு பதியனும் சசிகலா.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சசிகலா. கீதா????

   நீக்கு
 8. ஒருவர் – “காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க?“
  மற்றவர் – “அவங்க “மெய்“ மறந்து காதலிக்கிறவங்களாச்சே!“

  இது, மெய் மறந்து சிரித்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு சமயம் நீங்கள் ஜோக்குகளைக் காதலிக்கிறீர்களோ....

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 9. ரொம்பவே வலிக்குதுங்க! ஹிஹி சிரிப்புக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுரேஷ்..... சரியா சொல்லுங்கள்....
   நகைச்சுவையைப் படித்து சிரித்ததனால் வயிறு வலிக்கிறதா....?
   கோபத்தில் தலை வலிக்கிறதா....? என்று.

   தலை வலிக்கிறது என்றால் அடுத்த முறை டாக்டர்.. மருந்து போன்ற ஜோக்குகளைப் பதித்துச் சரி செய்து விடுகிறேன்....))

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 10. செம காமெடி:)))))
  அதென்னவோ ஆசிரியர் மாணவர் ஜோக்குகள் எல்லாமே கலக்கலா இருந்தது. கட்டம் கட்டி காலி பண்ணிடிங்க தோழி:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் நம்ப டீச்சர் தோழி சொன்னது தாங்க.
   அடுத்து ஒரு டாக்கடர் தோழி இருக்கிறார்கள்.... அவர்கள் சொன்னதும் அருமையாக இருக்கும். பின்பு வெளியிடுகிறேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 11. ஹா...ஹா..ஹா... நன்றி பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகான சிரிப்பிற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 12. வணக்கம் தோழி !

  இன்பத் தமிழில் இனிக்கும் அருமையான பாமாலைகளைத் தினமும்
  வழங்கி வரும் தங்களுக்கு இந்த அம்பாளடியாள் விருது ஒன்றினை
  வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றேன் .தயவு கூர்ந்து
  அதனைப் பெற்றுக்கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றேன் .

  http://rupika-rupika.blogspot.com/2014/09/blog-post_14.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விருதா.... எனக்கா..... இதோ உடனே வருகிறேன்.

   வந்து விட்டேன்....
   வாங்கிவிட்டேன்.....

   மிக மிக நன்றி தோழி.

   நீக்கு
 13. ரசித்தேன்
  சிரித்தேன்
  சகோதரியாரே நன்றி
  தம 9

  பதிலளிநீக்கு
 14. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 15. சிரித்தேன்... ரசித்தேன்...
  அருமை சகோதரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மகி அண்ணா.
   நலமா?

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி .

   நீக்கு