திங்கள், 29 செப்டம்பர், 2014

மிகப் பழங்கால வீர விளையாட்டு அரங்கம்!! (இத்தாலி - 7)

அன்று

இன்று

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இத்தாலின் முக்கிய அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டு மறுநாள் 7.08.2014 அன்று காலை ரோம் நகரின் முக்கிய இடமான கொலிசோவிற்குச் சென்றோம்.

அன்று

இன்று

    இவ்விடத்திற்குள் செல்ல ஒருவருக்கு 12 யுரோ கட்டணம்.

உள்ளே போகும் வழி.

    கொலிசோ என்பது கி.பி 79 ம் ஆண்டு கட்டப்பட்ட வீர விளையாட்டு அரங்கம் ஆகும். 

முதல் மாடியில் இருந்து...

   நாம் பழங்கால சினிமா படங்களில் பார்த்திருப்போம். கடைசியாக தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத கதையில் கூட பார்த்திருக்கிறோம். ஆனால் நம் நாட்டில் உண்மையில் இந்த வீர விளையாட்டுகள் நடந்த இடங்களின் தடம் கூட இல்லை.


    ஆனால் இத்தாலியின் முக்கிய இடமான ரோம் நகரத்தின் நடுவிலேயே இந்தப் பழங்கால விளையாட்டு அரங்கத்தை அழிக்காமல் பாதுகாத்து வருகிறார்கள். இவ்விடம் ரோம் நகரத்தின் முக்கிய காட்சி தளமாக விளங்குகிறது.

இப்போது பார்வைக்காக ஒழுங்கு படுத்தப்பட்ட மைதானம்.

   இவ்விடம், பழைய மன்னர்கள் மனிதர்கள் மனிதர்களுடனும், மனிதர்கள் மிருகத்துடனும், மிருகங்கள் மிருகத்துடனும் சண்டையிட செய்து வேடிக்கைப் பார்க்கும் இடமாக இருந்திருக்கிறது.


   இவ்விடம் கி.பி 79ம் ஆண்டில் கட்டப்பட்டது. என்றாலும் இதை எப்போது கட்டத் துவங்கினார்கள் என்பதும், எந்த மன்னரால் கட்டப்பட்டது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் கி.பி.80ம் ஆண்டில் தொடக்க விழா நடந்தது.


   விழா துவங்கி 100 நாட்களில் 5000 மிருகங்களுக்கு மேல் கொல்லப்பட்டதாம். மனிதர்கள் எவ்வளவு பேர் என்பது கணக்குத் தெரியவில்லை.

சுரங்கம்

    இந்த வீரவிளையாட்டால் அதிக அளவு மனிதர்களும் மிருகங்களும் கொல்லப்பட்டதால் கி.பி 438 ம் ஆண்டு இப்படி விளையாடுவதை நிறுத்தி விட்டார்கள்.


   இதன் உயரம் 48.50 மீட்டர். நடு அகலம் 54 க்கு 86 மீட்டர். இதனுள் ஒரே நேரத்தில் 40,000 முதல் 73,000 ஆயிரம் பேர் சென்று வரலாம்.
   ஆனால் இப்போது ஒரு நாளைக்கு 3000 பேர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் மறுநாள் காத்திருந்து தான் வரவேண்டும். நாங்கள் சென்ற போது அவ்வளவு சனம் இல்லை.


   தவிர இந்த கொலிசோவை ரோம் நகரத்தை அக்காலத்தில் ஆண்ட மன்னர்கள் வழி வழியாக பாதுகாத்து வந்திருக்கிறார்கள். ஆனால் பழங்கால எந்த மன்னரும் இதைத் தன் உரிமையாகக் கொள்ளவில்லை. அதனால் எந்த மன்னரின் பெயரும் அங்கு எழுதப்படவில்லை.


   இவ்விடத்தைப் பார்க்கும் போது பழங்கால இத்தாலியர்கள், தாங்கள் உயிர் வாழ்வதை விட வீரமாக வாழ்வதில் அக்கரைக் கொண்டவர்களாக இருந்தார்கள் என்பது நன்கு விளங்குகிறது.


   இவ்விடத்தை நாங்கள் காலை ஒன்பது முதல் பகல் பனிரெண்டு வரை பார்த்துவிட்டு மதிய உணவை முடித்துக்கொண்டு ரோம் நகரில் இன்னொரு முக்கிய இடமான, கி.மு 400 ம் ஆண்டுகளில் கட்டப்பட்ட மிக மிகப் பழங்கால இடத்தைப் பார்த்தோம்.
   அதைப்பற்றி அடுத்தப் பதிவில் படங்களுடன் வெளியிடுகிறேன்.

அன்புடன்

அருணா செல்வம்.
30.09.2014

7 கருத்துகள்:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

படங்களும் தகவல்களும் மிக அருமை! நாங்களும் கண்டு களித்தோம்! மிக்க ந்னறி பகிர்வுக்கு சகோதரி!

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அறிய முடியாத இடத்தை தங்களின் பதிவு வழி அறிந்தேன்.. பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan சொன்னது…

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

Kasthuri Rengan சொன்னது…

ஒரு பதிவுப் பயணம் போய் வந்த மாதிரி இருக்கிறது தொடருங்கள் ..

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை சகோதரியாரே
திரைப் படங்களில் மட்டுமே கண்டு ரசித்த அரங்கம்
இப்பொழுது தங்களின் கண்கள் வழியாக நாங்களும்கண்டு ரசித்தோம்.
பெருமூச்சுதான் வருகிறது சகோதரியாரே
இதுவே நம்மூராக இருந்தால், பத்துப் பதினைந்து கல்வெட்டுகள் புதிதாக முளைத்திருக்கும், நான்தான் வெள்ளை அடித்தேன், நான்தான் பழுது பார்த்தேன் என்று...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 3

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான படங்கள்.

புராதன சின்னங்களைப் பாதுகாத்து வைப்பதில் நம்மவர்களுக்கு இவ்வளவு அக்கரை இல்லை. இருக்கும் சின்னங்களிலும் தாங்களாகவே தங்கள் காதலை கல்வெட்டுகளாக பதித்து வைக்கிறார்கள்! :(