வெள்ளி, 18 ஏப்ரல், 2014

யார் சொன்னது....? கண்டுபிடியுங்கள் ….




    நட்புறவுகளுக்கு வணக்கம். நான் ஐந்து பிரபலங்கள் சொன்னதை இங்கே குறிப்பிடுகிறேன். அவர்கள் யார் என்று கண்டுபிடித்து எழுதுங்கள். அனைத்தும் நாம் அறிந்த முக்கிய பிரபலங்கள் தான். கண்டுபிடியுங்கள்.

1. ஒரு கொப்பையிலே என் குடியிருப்பு.
  ஒரு கோலமயில் என் துணையிருப்பு....

2. போகனும்ன்னு மட்டும் தான் தோணுது. ஆனா...எங்க
   போவனும்ன்னு தோணலையே.....

3. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
  துப்பாய துர்உம் மழை.

4. உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில்
   உதிரங் கொட்டுதடீ...

5. எழுதுவது எப்படி சுகமாக இருக்கிறதோ அதே மாதிரி எழுதாமல்    இருந்தாலும் வருகிறது.... அதாவது சோம்பேறியாக இருப்பதும் சுகமாக இருக்கிறது.

 என்ன... கண்டுபிடித்து விட்டீர்களா....? பதில் எழுதுங்கள். பத்து பதில்களுக்கு மேல் வந்ததும் வெளியிடுகிறேன். சரியான பதில் எழுதியவர்களுக்கு இரண்டு அடி.... நிச்சயம் உண்டு.

அருணா செல்வம்.
19.04.2014

28 கருத்துகள்:

  1. 1.கண்ணதாசன்,2.சிவாஜிகணேசன் 3.திருவள்ளுவர் ,4.TMS (சிவாஜி வாயை அசைத்தார் :)))இந்த ஐந்தாவது கேள்விக்கு என் பெயர் கூடத்தான் வரும் ஆனா வராது ஒருவேளை எங்கள்சூப்பர் ஸ்ராரோ :))))))))))))))))))))) வாழ்த்துக்கள் தோழி . த .ம .2

    பதிலளிநீக்கு
  2. ஐந்தில் மூன்றுக்கு விடை தெரிந்தது தோழி

    1. கண்ணதாசன்
    2.
    3. திருவள்ளுவர்
    4. பாரதியார்
    5.

    பதிலளிநீக்கு
  3. நான் வரலே...

    குறளின் இரண்டு அடி என்றால் சரி... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  4. ஆகா அருமை
    ஐந்தாவது கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  5. ஒன்றும்(இரத்தத்திலகம்) நாலும் (வியட்நாம் வீடு) கண்ணதாசன் . அந்த நாலாவது பாரதியார் பாணியில் கண்ணதாசன் எழுதியது! இரண்டாவது சிவாஜி கௌரவம் படத்தில். மூன்றாவது திருவள்ளுவர். ஐந்தாவது நான் இல்லை என்று தெரியும்!!!!!


    பதிலளிநீக்கு
  6. 1.கண்ணதாசன்
    2.சிவாஜி?
    3 வள்ளுவர்
    4 பாரதியார்
    5. நீங்கதானே ( நானும் அப்படிதாங்க)

    பதிலளிநீக்கு
  7. ஒரு கொப்பையிலே என் குடியிருப்பு.
    ஒரு கோலமயில் என் துணையிருப்பு......கண்ணதாசன்

    2 கௌரவம் படத்தில் இணைய சிவாஜிகணேசன்

    3 -திருவள்ளுவர்

    4 -பாரதியார் -

    5 நீங்கள்??????/

    பதிலளிநீக்கு
  8. /// 1. ஒரு கொப்பையிலே என் குடியிருப்பு.
    ஒரு கோலமயில் என் துணையிருப்பு....///

    இது மதுரைத்தமிழன் சொன்னதா?

    பதிலளிநீக்கு
  9. ///2. போகனும்ன்னு மட்டும் தான் தோணுது. ஆனா...எங்க
    போவனும்ன்னு தோணலையே.....///

    தமிழகத்தில் வாழும் ஒரு பிரபல பதிவாளாராகத்தான் இருக்கனும்... அவங்களுக்கு மூச்சா வந்தா இப்படிதான் பொலம்புவாங்க...

    பதிலளிநீக்கு


  10. 3. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய துர்உம் மழை.///

    எனது அடுத்த பதிவை படிக்கும் பிரபல பெண் பதிவாளர் சொல்லப்போவது இதுதான் அது நீங்களாக கூட இருக்கலாம்

    பதிலளிநீக்கு
  11. ///4. உன் கண்ணில் நீர் வழிந்தால் - என் நெஞ்சில்
    உதிரங் கொட்டுதடீ...///

    கலைஞர் கனிமொழியை பார்த்து சொன்னதா இது

    பதிலளிநீக்கு
  12. கடைசியில் சொன்னதை பார்த்தா ஏதோ ஒரு அரை லூசு சொன்னது மாதிரி இருக்குதுங்க... நிச்சயம் அது உங்க பரெண்டாக கூட இருக்க வாய்ப்பு இருங்குங்க..

    பதிலளிநீக்கு
  13. அய்யயோ கடைசி பாராவை படிக்கும் முன் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டேனே....கடவுளே ஏதாவது ஒரு பதிலை தவறு என்று சொல்லிவிடு.. இல்லையென்றால் என் வீட்டில் அடிவாங்கியது பத்தாது என்று பிரான்ஸில் இருந்து அடிக்க ஆள் வந்துடுமே...

    பதிலளிநீக்கு
  14. ஐந்தாவது கருத்துக்கு சொந்தக்காரர் நீங்களாத் தான் இருக்கணும் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  15. ஆஹா ..இன்னும் பதில்கள் வெளிவரவில்லையே !அதுக்குள்ள
    என்ன அவசரம் அம்பாளடியாள் ?..போய் கடேசி வெஞ்சில உக்காரு
    சரீங்க ரீச்சர் :)))))))

    பதிலளிநீக்கு
  16. பதில்......

    1. கண்ணதாசன்
    2.சிவாஜி (திரைப்படத்தில்)
    3. வள்ளுவர்.
    4. பாரதியார்.
    5. பிரபல பதிவர் மதுரைத் தழிழன். (இவரைவிட்டால் வேற யார் இப்படி சொல்வது...?)

    ஐந்தாவதற்கு பதில் நானா....? உடம்பு சரியில்லை என்றாலும் தவழ்ந்து வந்து ஏதாவது பதிவை எழுதி விடுகிறேன். உங்களிடம் எல்லாம் பேசாமல் இருந்தால் மேலும் நோயாளியாகி விடுவேனோ என்ற பயம் எனக்கு இருக்கிறது... என்னைப் போய்... என்னைப் போய்.... உஉஉம்ம்ம்... (இது அழுகை)

    அனைவருக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. எல்லா பதில்களையும் ஜீனியஸ் இராஜராஜேஸ்வரி கூறி விட்டாரே,IS THERE A CATCH IN THE QUESTION?

    பதிலளிநீக்கு
  18. பரிசை நினைச்சாத்தான் பயமா இருக்குது! நான் வரலை விளையாட்டுக்கு!

    பதிலளிநீக்கு
  19. நான் இப்போத்தான் மதுரைத் தமிழன் அவர்களின் பதிவு படித்தேன்.... சரி 5 பதிலும் சரியாச் சொல்லிடலாம்ன்னு வந்தா நீங்க பதில் சொல்லி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு

  20. வணக்கம்!

    வல்ல பதிவென்று வாயார வாழ்த்திடவே
    நல்ல பதிவுகளை நல்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  21. :) அதுக்குள்ள பதில் சொல்லிட்டீங்களா, சரி விடுங்க..

    பதிலளிநீக்கு
  22. என்க்கு தெர்ஞ்சு இவுங்கதாம்மே...
    1. சல்பேட்டா சாவுகிராக்கி.
    2. மெர்சலு மாணிக்கம்.
    3. நம்ப ஏட்டைய்யா.
    4. மினிம்மா.
    5. சோமாரி துலுக்காணம்.

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    பதிலளிநீக்கு
  23. முட்டா நைனா :))))

    கேள்வியும் பதிலும் மிக நன்று....

    பதிலளிநீக்கு
  24. ஐந்தாவது கேள்விக்கான பதில் நானே நான்... ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு