புதன், 1 ஆகஸ்ட், 2012

அன்பே அனைத்தும் !! (கவிதை - 3)

துன்பம் என்றே ஒன்றுவந்து
    துயரக் கடலில் ஆழ்த்துமிடம்
அன்பால் அவன்கண் துடைத்துவிட்டு
    ஆறு தலாகப் பேசிநின்றால்
அன்பில் கலந்த அவனுள்ளம்
    அமைதி கொஞ்சம் அடைந்துவிடும்!
முன்பின் காணாத் தெய்வத்தை
    முன்னே கண்ட நிறைவுவரும்!

கொடுக்கக் கொடுக்கக் குறையாமல்
    கொடுத்தப் பின்பும் நிறைந்திருக்கும்!
எடுத்தே அதனை வைப்பதற்கோர்
    இடத்தைத் தேடி அலையாமல்
அடுத்துக் காணும் அனைத்துயிர்க்கும்
    அள்ளி அள்ளிக் கொடுத்துவந்தால்
அடுத்தப் பிறவி ஒன்றிருந்தால்
    அதிலும் இன்பம் அடைந்திடலாம்!

தாவி யோடும் குரங்குபோலத்
    தாவும் மனத்தைக் கொண்டோரும்
பாவி இவன்தான் எனச்சொல்லும்
    பாவச் செயலைப் புரிவோரும்
காவி லிருக்கும் கசப்பாக
    கல்லாய் இதயம் கொண்டோரும்
ஆவி போகும் முன்னாலே
    அன்பிற் காக ஏங்கிடுவார்!

அன்னை கொடுத்த நல்லன்பு
    ஆயுள் வரையில் நிலைத்திருக்கும்!
கன்னி காட்டும் உள்ளன்பு
    காதல் களத்தில் பேரெடுக்கும்!
தன்னுள் இருக்கும் மென்னன்பைத்
    தர்மம் போலக் கொடுத்துவந்தால்
உன்னுள் இருக்கும் தெய்வத்தை
    ஒருநாள் நீயே அறிவாயே!!


அருணா செல்வம்

25 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் தொடர் வருகைக்கு
   மிக்க நன்றிங்க கோவி சார்.

   நீக்கு
  2. கோவி சார்... இன்றைக்கும் உங்கள் வலைக்குள் போக முயற்சித்து எனக்கு தோல்விதாங்க.

   நீக்கு
 2. //// தன்னுள் இருக்கும் மென்னன்பைத்
  தர்மம் போலக் கொடுத்துவந்தால்
  உன்னுள் இருக்கும் தெய்வத்தை
  ஒருநாள் நீயே அறிவாயே!! ////

  அருமை வரிகள்... உண்மை வரிகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும்
   மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

   நீக்கு
 3. தன்னுள் இருக்கும் மென்னன்பைத்
  தர்மம் போலக் கொடுத்துவந்தால்
  உன்னுள் இருக்கும் தெய்வத்தை
  ஒருநாள் நீயே அறிவாயே!!

  அருமையான சிந்தனை அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தொடர் உற்சாகமூட்டும் பாராட்டு வரிகள்
   என்னை மேலும் எழுதத் துாண்டுகிறது ரமணி ஐயா.
   நன்றிங்க.

   நீக்கு
 4. //ஆவி போகும் முன்னாலே
  அன்பிற் காக ஏங்கிடுவார்!//கண்டிப்பாக இறுதி நாளில் தான் அன்புக்காக ஏங்குவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் பாஸ்...

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றிங்க பாஸ்.

   (நீங்கள் கொடுத்தத் தமிழ்மண ஓட்டுப்பட்டை நடக்கவில்லை பாஸ்.
   ஏன்னே தெரியலைப்பா...)

   நீக்கு
 5. அன்புக்காக ஏங்கும் எத்தனை உள்ளங்கள்.அருமையான கவிதை அருணா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் இனிய தோழி ஹேமா...

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க தோழி.

   நீக்கு
 6. ''..தன்னுள் இருக்கும் மென்னன்பைத்
  தர்மம் போலக் கொடுத்துவந்தால்
  உன்னுள் இருக்கும் தெய்வத்தை
  ஒருநாள் நீயே அறிவாயே!!...''
  இதைச் செய்யத் தவறுவதாற்றான் பல துன்பம் உலகில்.சிறப்புக் கவிதை. நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவைக்கவி அவர்களே...
   உங்கள் கருத்து உண்மைதாங்க.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.

   நீக்கு
 7. //தாவி யோடும் குரங்குபோலத்
  தாவும் மனத்தைக் கொண்டோரும்
  பாவி இவன்தான் எனச்சொல்லும்
  பாவச் செயலைப் புரிவோரும்
  காவி லிருக்கும் கசப்பாக
  கல்லாய் இதயம் கொண்டோரும்
  ஆவி போகும் முன்னாலே
  அன்பிற் காக ஏங்கிடுவார்!//
  உண்மைதான் .கலக்கிட்டீங்க நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க முரளிதரன் ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தய்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க நண்பரே.

   நீக்கு
 9. எவ்வளவு கொடுத்தாலும் குறையாது, எவ்வளவு எடுத்தாலும் நிறையாது, அத்தகைய அன்பின் மகத்துவம் உணர்த்தும் அற்புத வரிகள். பாராட்டுகள் அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
 10. எவ்வளவு கொடுத்தாலும் குறையாது, எவ்வளவு எடுத்தாலும் நிறையாது, அத்தகைய அன்பின் மகத்துவத்தை அற்புதமாய்ச் சொன்ன வரிகளுக்குப் பாராட்டுகள் அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பாட்டைவிட உங்களின் கருத்து நிறைவாக இருக்கிறது
   கீதமஞ்சரி அக்கா. நன்றிங்க.

   நீக்கு
 11. அன்பிற்கு ஓர் ஆகமம்
  படித்துவிட்டீர்கள் நண்பரே..
  எவ்வளவு படித்தாலும் திகட்டாத
  தேன் கவிதை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூன்று பாகத்தையும் தொடர்ந்து படித்து
   அழகிய கருத்திட்டீர்கள். மிக்க நன்றிங்க நண்பரே.
   பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றிங்க.

   நீக்கு
 12. அழகான வரிகள் + கற்பனை = கவிதை
  உரமிடுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும்
   மிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.

   நீக்கு
 13. அன்பின் அருணா

  அன்பே அனைத்தும் - கவிதை அருமை

  அன்பாய் ஆறுதலாய்ப் பேசினாலே துன்பம் அமைதி அடையும் - தெய்வமெனப் போற்றுவார்.

  கொடுப்பதில் உள்ள இன்பம் வேறு எதிலும் இருக்காது. அள்ளி அள்ளிக் கொடுத்தால் அடுத்த பிறவியிலும் இன்பம். ஆவி பிரியும் முன் அன்புக்காக ஏங்குபவர் பட்டியல் நன்று.

  இறுதியாக அன்பின் இலக்கணம் நன்று.

  அன்னை கொடுத்த நல்லன்பு
  ஆயுள் வரையில் நிலைத்திருக்கும்!
  கன்னி காட்டும் உள்ளன்பு
  காதல் களத்தில் பேரெடுக்கும்!
  தன்னுள் இருக்கும் மென்னன்பைத்
  தர்மம் போலக் கொடுத்துவந்தால்
  உன்னுள் இருக்கும் தெய்வத்தை
  ஒருநாள் நீயே அறிவாயே!!

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு