புதன், 2 ஜனவரி, 2013

குழப்பமின்றி வாழ்த்துகிறேன்.!!


நட்புறவுகளுக்கு 2013 -ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்!!


     அப்பாடா.... இரண்டு நாட்களாக புதிதாகப் பிறந்த புத்தாண்டிற்கு அனைவருக்கும் எப்படி வாழ்த்துக் கூறுவது என்று தெரியாமல் ஒரு வழியாக நானே கண்டுபிடித்து வாழ்த்தி விட்டேன். எனக்கு வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கு மிக்க நன்றி.


     நான் நேற்றே நம் வலையுக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லலாம் என்று வந்தால்.... நம்முள் பிரபல பதிவர் “கோடாங்கி“ இக்பால் செல்வம் அவர்கள்

    பலத் தமிழர்கள் புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்றழைக்கின்றனர். அது சரியான ஒன்றல்ல, ஆங்கிலேயேர் நமக்கு இப் புத்தாண்டை அறிமுகம் செய்திருந்தால் கூட, இப்புத்தாண்டு சுமேரியர்களால் உருவாக்கப் பட்டு, ரோமர்களால் வளர்க்கப்பட்டு, கிரிகேரி அவர்களால் சீர் செய்யப்பட்டு இன்று பன்னாட்டு புத்தாண்டு தினமாக மாறிவிட்டது. ஆகையால் இதனை ஆங்கிலப் புத்தாண்டு என்றழைப்பதை விடுத்து, வெறுமனே புத்தாண்டு, பொதுப் புத்தாண்டு, பன்னாட்டு புத்தாண்டு என்று அழைக்கலாமே. நன்றிகள்.என்று எழுதியிருந்தார்.


   ஒரு சிலர்,  ஆங்கில மாதமான ஜனவரியில் ஆண்டு துவங்குவதால் ஆங்கிலப் புத்தாண்டு என்றே சொல்ல வேண்டும் என்கிறார்கள்.


   ஒரு சிலர், தமிழர்களாகிய நாம் தை மாதம் முதலாம் நாளைத் தமிழர் புத்தாண்டாகக் கொள்ளவேண்டும் என்கிறார்கள். அன்றைய தினத்தையே திருவள்ளுவர்(2044) தினமாகவும் தமிழருக்குறிய பொங்கல் திருநாளையும் சேர்த்துக் கொண்டாட வேண்டும் என்கிறார்கள்.


   ஒரு சிலர், சித்திரை மாதம் முதல் தேதியைத்தான் தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்றும்... அது ஆரியர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும் காலம் காலமாக அப்படியே கொண்டாடிப் பழகி விட்டதால் அதைத்தான் தொடர வேண்டும் என்கிறார்கள்.


    தற்போதைய வருடம் கிருஸ்து பிறப்பிற்குப் பின் என்று கணக்கைக் கொண்டிருந்தாலும் கிருஸ்து டிசம்பர் 25 ந் தேதி பிறந்தார். ஆனால் வருடம் ஜனவரியில் பிறக்கிறது... பிறகெப்படி...? இதுவும் புரியவில்லை.


   இந்த நேரத்தில் மயன் கணக்குக் கூட முடிந்துவிட்டது...!!


   இப்படி எத்தனை குழப்பங்கள்?


   பிறகு நன்கு யோசித்துப் பார்த்தால் நண்பர் “கோடாங்கிஅவர்கள் சொன்னதே சரி என்று பட... அப்பாடா ஒரு வழியாக “வெறும் புத்தாண்டு வாழ்த்துக்கள்“ என்று சொல்லலாம் என்று முடிவெடுத்து... சொல்லிவிட்டேன்.(அப்பாடா.... ஒரு பதிவைத் தேத்த எவ்வளவு கஷ்ட பட வேண்டியுள்ளது)
அனைவருக்கும்  2013 –ம் வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.நட்புடன்
அருணா செல்வம்
   


25 கருத்துகள்:

 1. எது எப்படியோ...
  பிறக்கும் ஒவ்வொரு நாளும்
  நன்மையாகவும் அந்நாளை
  நன்மையாக மாற்றிக்கொள்ளும்
  திறனும் வளர்ந்திட இனிதாய் அமையட்டும்...

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.
   மிக்க நன்றி.

   நீக்கு
 2. நல்ல யோசனை பொதுவான புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
   கவியாழி ஐயா.

   நீக்கு
 3. இவ்ளொ கஷ்டப்பட்டாத்தான் அல்லாரும் வந்து படிக்கிறாங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது என்னவோ உண்மை தாங்க ஜெயசந்திரன்.
   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 4. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.புத்தாண்டு பற்றி நல்ல ஆராய்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
   நன்றி பாஸ்.

   நீக்கு
 5. குழப்பமின்றி உங்கள் பதிவு வரும் முன்பே வாழ்த்தி விட்டேன் ஹாய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் தெளிந்த சிந்தனை உள்ளவர் என்பது எங்களுக்குத் தெரியும் “உண்மைகள்“
   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 6. உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி.
   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பால கணேஷ் ஐயா.

   நீக்கு
 7. வெறும் புத்தாண்டு ஏன் இனிப்பு கொடுத்து சொல்லுங்க. ஹஹ சும்மா அடிக்க ஆள் எதாவது தேடாதிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சசிகலா.... இனிப்பை வலையின் வழியிலேயே அனுப்பி விடுகிறேன்.
   அதை எடுத்துச் சாப்பிடுவது உங்களின் சாமார்த்தியம்.
   நன்றி தோழி.
   உங்களுக்கும் உங்கள் கணவர், இனியவன், இளையவன் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 8. எப்படியோ ஒரு புதுத் தேடல் உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையில் இது கொஞ்சம் குழப்பத்தைத் தான் தருகிறது தோழி.
   எதை எதையோ நம் முன்னோர்கள் சொன்னார்கள் என்று கடைபிடிக்கிறோம். ஆனால் அதற்கான உண்மையான விளக்கத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை.

   பள்ளத்தை நோக்கியே
   நீர் ஓடும்.
   தேங்கினால்
   குட்டையாகி விடும்.
   தேங்காமல் ஓடினாலும்
   எல்லா நீரொட்டமும்
   கடலில் தான் கலந்துவிடும்!

   எல்லோரும் ஓடுகிறார்கள்.
   நாமும் ஓடுவோம்!!

   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.


   நீக்கு
 9. புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஆண்டு எதுவாக இருந்தால் என்ன? மகிழ்ச்சியாக இருந்தால் சரி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

   நீக்கு
 10. அரிய தகவல்களுடன் கூடிய புத்தாண்டுவாழ்த்து
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி இரமணி ஐயா.

   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா.

   நீக்கு
 11. Happy new year 2013.
  கொஞ்சம் தவறிவிட்டது இங்கு வர . தங்களையும் அங்கு காணோம். காலமும் அப்படியே ஓடுகிறது. 2 நாளாக அருணா செல்வத்திற்கு கருத்திட வேண்டம் என்று நினைத்து இன்று தான் நடக்கிறது. புத்தாண்டுடன் ஆரம்பிக்கிறேன். மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவைக்கவி அவர்களுக்கு வணக்கம்.

   தங்களின் வரவும் வாழ்த்தும்
   மனத்தில் புது உற்சாகத்தைக் கொடுக்கிறது.

   உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
   மிக்க நன்றி.

   நீக்கு
 12. என் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் அருணா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வரவிற்கும் புத்தாண்டிற்கு வாழ்த்தியமைக்கும்
   மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

   நீக்கு