திங்கள், 4 ஜூன், 2012

பூமாலையா? பாமாலையா? (கவிதை)




காலைப் பூக்களைக் கைகளால் பறித்ததும்
       கட்டினேன் பூமாலை!
சோலைப் பூவினுள் தேனினைத் தேடியே
       சுற்றிடும் வண்டொன்று
மாலைப் பூவினுள் மதுவினைக் குடித்திட
       மயங்கியே வந்ததினால்
சேலை நெய்திடும் தறியென என்கையோ
       செய்தது பாமாலை!!

சங்கச் செந்தமிழ் தந்துள பாட்டெனச்
       சாற்றிய பாமாலை!
தங்கத் தேரினில் தமிழ்மகள் வந்திடத்
       தந்துள பூமாலை!
எங்கும் செந்தமிழ்! எதிலும் இன்றமிழ்!
       இயம்பிடும் என்மூளை!
மங்கும் வாழ்வினில் பொங்கிடும் இனிமையை
       வளர்ப்பதே நம்வேலை!


18 கருத்துகள்:

  1. தங்கள் கவிதை
    தமிழ்த் தாய்க்கு சூட்டிய
    பாமாலை தான் நண்பரே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க
      நன்றிங்க நண்பரே.

      நீக்கு
  2. மாலையை போல்-
    அழகு !

    கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க
      நன்றிங்க நண்பரே.

      நீக்கு
  3. Alakaana kavithai

    School paadap puththakangallil padiththathu ponra oru unarvu. Tnx

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அழகான கவிதை
      பள்ளி பாடபுத்தகத்தில் படித்தது போன்ற ஒரு உணர்வு. நன்றி”

      சிட்டுக்குருவி...
      இந்த பாடல் கொஞ்சம் கடினமான இலக்கணம் தான். ஆனால் எந்தத் தலைப்பில் எழுதினாலும் அழகான சந்த ஓசை நயம் வந்துவிடும். படிப்பதற்கும் ஆசையாக இருக்கும்.
      மிக்க நன்றிங்க சிட்டுக்குருவி.

      நீக்கு
  4. தமிழ்த்தாய் நிச்சயம் மகிழ்ந்திருப்பாள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா..

      அருமையான வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  5. தந்துள பூமாலை!
    எங்கும் செந்தமிழ்! எதிலும் இன்றமிழ்!
    இயம்பிடும் என்மூளை!//

    மிகச் சரி
    அதற்கு இந்தக் கவிதையே சான்று
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் சான்றாக என் கவிதையையே காட்டி வாழ்த்தியதற்கும் மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

      நீக்கு
  6. ஆம் மரபுக் கவிதை போன்று அழகு .நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வேதா. இலங்காதிலகம்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.

      (உங்கள் வலைக்கு வந்து படித்துப் பின்னோட்மிட்டால் கலைந்து விடுகிறது. கொஞ்சம் பாருங்கள்.)

      நீக்கு
  7. சூப்பரா இருக்கு! தமிழ் படிக்கப் படிக்க அழகுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஃபிரெண்ட்.
      தமிழ் மேல் தான் என் முதல் காதல்.
      நன்றிப்பா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. சசிகலா.. எப்படி இருக்கிறீர்கள்?
      ஏன் உங்கள் டாஷ்போர்ட் திறக்க மாட்டுது..?
      ஏதாவது கோளாரா...?

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க சசிகலா.
      (மச்சான்களை விசாரித்ததாகச் சொல்லுங்கள்.)

      நீக்கு
  9. மனமயக்கும் பாமாலையில் சொக்கினேன். பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு