திங்கள், 19 மார்ச், 2012

பறவை பாடும் பாட்டு! (புதுக்கவிதை)
ஊருக்குள்ளேத் திருவிழா
உள்ளுரில் எனக்கு
உட்கார ஓரிடமில்லை.
வேரூர்க் காரர்கள்
வேடிக்கைக் காட்டுகின்றார்!

என்னுர்த் திருவிழாவில்
தடியெடுத்தவன்
தண்டல்காரன்!

அகிம்சை வழி தெய்வத்திற்கு
ஆராதனைக் காட்ட
நல்ல உயிர் கிடைத்ததென
நரபலி கொடுக்கின்றான்!

வான வேடிக்கை!
வந்து விழும்
குண்டுமழை தான்
இங்கே வாடிக்கை!

பட்டாசு சத்தம்
பறந்துவந்து அடக்கியது!
வெடிச்சத்தம்! உயிர்பிழைக்க
விரட்டியது அகதியாய்!

வேரருந்த மரக்கிளையில்
வீடேது பறவைக்கு?
வேரூர்ப் போனதெல்லாம்
உள்ளுரின் ஞாபகமா?!

வந்து நின்ற நாட்டினிலே
வளமான வாழ்க்கைத்தான்!
வருமானம் போதுமெனத்
தன்மானம் இழக்கிறதோ!
 
மானும் மயிலும்
ஆடுவதைப் போல்
படக்காட்சி ஓடியது.
எல்லோரும் பார்க்கின்றார்
நானும் தான் பார்க்கின்றேன்!

10 கருத்துகள்:

 1. அருமை அருமை

  சிந்தனையைத் தூண்டும் கவிதை
  நன்று.

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை

  சிந்தனையைத் தூண்டும் கவிதை
  நன்று.

  குணா தமிழ் அவர்களே
  தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது என்பார்கள். இங்கு ஊர் பிரிந்த குருவியின் வாயிலாய் நாடு பிரிந்த மக்களின் நிலை நன்றாகவே உணர்த்தப்பட்டுள்ளது. மனம் தொட்டக் கவிதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “மனம் தொட்டக் கவிதை.“ - கீதமஞ்சரி

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
   மிக்க நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 4. மாறுபட்ட அருமையான சிந்தனை
  சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
  மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்“ - ரமணி அவர்கள்

   வணக்கம் ரமணி ஐயா!
   உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

   நீக்கு
 5. பட்டாசு சத்தம்
  பறந்துவந்து அடக்கியது!
  வெடிச்சத்தம்! உயிர்பிழைக்க
  விரட்டியது அகதியாய்!///
  அகதிகளாய் பறவைகள் நாளை ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “அகதிகளாய் பறவைகள் நாளை ?“

   கேள்விகள் மட்டுமே நமக்கு
   பதிலாகக் கிடைக்கிறது கசிகலா. நன்றி!

   நீக்கு
 6. பறவையின் பாட்டில்
  உண்மையின் நிழல்

  அருமையான கவிதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி செய்தாலி அவர்களே!

   நீக்கு