ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நண்பேன்டா....!! (நிமிடக்கதை)
    இரண்டு கைகளிலும் மாவுகட்டுப் போட்டு மருத்துவமனையில் படுத்திருந்த நந்திதன் கண்களைத் திறந்து தன் நண்பர்களைப் பாவமாகப் பார்த்தான். எதுவும் பேசவில்லை. ஆனால் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
    “டேய் நந்து... எதுக்காக இப்போ அழுவுற? அது தான் நாங்க வந்துட்டோம் இல்ல... கவலைப்படாதடா...“ ஒரு நண்பன் அவன் கண்களைத் துடைக்க இன்னொருத்தன் ஆறுதலாக சொன்னான்.
    அவன் எதுவும் சொல்லாமல் கண்களை மூடினான்.
    பக்கத்தில் கவலையுடன் நின்றிருந்த அவன் அம்மாவிடம் அவனின் நண்பர்கள் வந்தார்கள். “என்னம்மா ஆச்சி...? எங்களுக்கு உடனே தகவல் கொடுத்திருக்கலாம் இல்லையா...?“ ஒருவன் கேட்டான்.
    “நீங்கள் எல்லாம் கோகுலனோட கண்யாணத்திற்கு போயிட்டீங்க. இவனும் அன்னைக்கு நைட்டு தான் கிளம்பினான். போன பஸ் தான் ஆக்சிடன்ட் ஆயிடுச்சி. ரெண்டு கை எழும்பும் உடஞ்சிடுச்சாம். எனக்கு மறுநாள் காலையில தான் தகவல் வந்துச்சி. நான் ஓடியாந்து பார்த்தேன். நல்ல வேலை உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொன்னபிறகு தான் எனக்கு உயிரே வந்துச்சி. உங்களுக்குத் தகவல் சொல்ல போறேன்னு சொன்னேன். ஆனால் நந்து தான் வேணாம். கோகுலனக்குத் தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவான். புது மாப்பிள்ளை. அதனால தெரிவிக்க வேணாம்ன்னு சொல்லிட்டான்.“ என்றாள் கவலையுடன்.
    “சரி எங்களுக்காவது சொல்லி இருக்கலாம் இல்லையா...?“ இன்னொருவன் கேட்டான்.
   “அதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டான். அவங்க கல்யாணத்தைச் சந்தோஷமா முடிச்சிட்டு வரட்டும். பிறகு சொல்லிக்கலாம். ஒன்றும் சீரியஸ் இல்லை தானேன்னு சொல்லிட்டான்.“ என்றாள்.
   “சரிம்மா... ஆனால் எதுக்காக அழுவனும்...?“
   “அது வந்தப்பா... வயசு பிள்ளையில்லையா...? ரெண்டு கையும் அசைக்க முடியாத அளவு கட்டு போட்டு இருக்கிறது. எல்லாத்துக்குமே அடுத்தவரோட உதவிய கேக்கனும். அவனுக்குப் பிடிக்கலை... அதுதான் ரொம்ப கவலைப்படுறான்...“ கண்களை முந்தானையால் துடைத்துக்கொண்டே சொன்னாள்.
   சற்று நேரத்தில் அங்கு வந்த நர்ஸ், “நீங்கள் எல்லாம் கொஞ்சம் வெளியே போறீங்களா...? அவருக்குத் துணி மாத்தனும்“ என்றாள் தன் மெல்லிய குரலில்.
   “நன்றி சிஸ்டர். ஆனால் நீங்கள் செய்ய வேண்டாம். என்ன செய்யனுமோ எங்ககிட்ட சொல்லிடுங்கள். இனிமே எல்லாவற்றையும் நாங்க அவனுக்குச் செய்கிறோம்.“ என்றான் ஒரு நண்பன்.
   நிமிர்ந்து அவர்களைப் பார்த்துப் புன்முறுவல் பூத்த நர்ஸ்,     “நல்லதுப்பா. இதுக்கெல்லாம் கொஞ்சம் சகிப்புத் தன்மை வேண்டும். எங்களுக்குப் பழகிடுச்சி. இங்கே நானே செய்கிறேன். இது என் கடமை. அவன் டிச்சார்ஜ் ஆனப்பிறகு நீங்கள் செய்யுங்கள்.“ என்றாள் புன்முறுவல் மாறாமல்.
   “வேண்டாம் சிஸ்டர். எங்களை நாங்களே சுத்தப்படுத்திகிற போது நாங்க சகிப்பாவோ, சலிப்பாவோ நினைக்கிறதில்லை இல்லையா... அதே மாதிரி எங்க நண்பனுக்குச் செய்யிறதை எங்களுக்கே செய்துக்கிறதா நினைச்சி செய்துவிடுகிறோம். இது எங்களோட கடமையாக நீங்க நெனச்சிக்கோங்க. ப்ளீஸ் சிஸ்டர்“ என்றான் ஒருவன்.
   சற்று நேரம் யோசித்தவள், “சரி. உங்க விருப்பம் போல செய்யுங்கள். நல்ல ஃபிரண்ஸ் கிடைத்தால் எந்த சோகத்தையும் தாங்கிடலாம். நந்து... உனக்கு நல்ல ஃபிரண்ஸ் கிடைத்திருக்கிறார்கள். கவலைப்படாதேப்பா....“ என்று சொல்லியபடி நகர்ந்தாள் நர்ஸ்.
   நந்திதன் தன் நண்பர்களை நன்றி கலந்த பார்வையால் பார்த்தான். அவன் முகத்தில் படிந்த புன்முறுவலைக் கண்டு நண்பர்கள் மகிழ்ந்தனர்.
   இக்கட்டான நேரத்தில் தான் நல்ல நண்பர்களை அறிய முடியும்.

அருணா செல்வம்
05.08.2013

26 கருத்துகள்:

 1. நல்ல ஃபிரண்ஸ் கிடைத்தால் எந்த சோகத்தையும் தாங்கிடலாம். //உண்மைதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி கவியாழி ஐயா.

   நீக்கு
 2. நர்சின் மனநிலையும் நண்பர்களின் மனநிலையும் சிலிர்க்க வைக்கின்றன.... நல்ல கதை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   நீக்கு
 3. சிறுகதை மிகவும் நன்று.
  உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு.

  என்ற குறளை நினைவுபடுத்தியது கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நட்பு என்றாலே நம் எல்லோருக்கும் இந்த குறள் தான் ஞாபகத்திற்கு வருகிறது என்பது வள்ளுவரின் பெருமை!!!

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி முனைவர் ஐயா.

   நீக்கு
 4. நல்ல சிறுகதை......

  நண்பர்கள் நல்லவர்களாக அமைந்திட்டால் கிடைக்கும் மன மகிழ்ச்சிக்கு ஈடேது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல நட்புக்கு உண்மையில் உலகில் ஈடு இல்லைதாங்க.

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி நாகராஜ் ஜி.

   நீக்கு
 5. நல்ல நட்பு அசிங்கம் பார்க்காது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் மதுரைத் தழிழன்!!

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி “உண்மைகள்“

   நீக்கு
 6. ரெண்டு கையும் அசைக்க முடியாத அளவு கட்டு போட்டு இருக்கிறது.
  >>
  இது கோவை ஆவி பத்தின கதையா?! அவர்தான் இப்போ ரெண்டு கையிலயும் கட்டு போட்டு இருக்கார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அச்சச்சோ.... என்னவாச்சி...?

   இது உண்மையான செய்தி என்றால் நான் அவருக்காக வருந்தகிறேன்.

   (வர வர... நீங்க உண்மையைச் சொன்னாக்கூட பொய் மாதிரி தெரிகிறது. நீங்கள் சொல்வதை வைத்து... ஆவியோட கையைப் பத்தி நான் கலாய்த்து எழுதிவிட்டு... உண்மையில் அவர் கவலையில் இருந்தால்....)

   நன்றி ராஜி தோழி.

   நீக்கு
 7. ”உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
  இடுக்கண் களைவதாம் நட்பு”

  சிறப்பான கதை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி பித்தன் ஐயா.

   நீக்கு
 8. நட்பை சிறப்பிக்கும் அழகான கதை! அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 10. இக்கட்டான நேரத்தில்தான் நல்ல நண்பர்களை அறியலாம்... அருமையான கதை அக்கா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
 11. சகோ உங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன்
  நேரம் இருப்பின் http://nizammudeen-abdulkader.blogspot.ae/2013/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 12. நல்ல நட்பிருந்தால் எல்லா பலமும் நமக்குள் பொதிந்த உணர்வு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 13. நல்ல நட்பு கிடைத்தால் அதை விட வேற நல்ல உறவு கிடையாது ....

  யாரிடமும் பகிர முடியாத விசயத்தையும் நல்ல நண்பனிடம் சொல்லலாம் ...

  நல்ல நண்பனை தோழனாக பெறுவது அதிர்ஷ்டம்.

  சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்... சேலத்தில் கொலையுண்ட பி ஜே பி பிரமுகர் ஒருவரின் தோழர் , நண்பர் இழப்பின் துயரம் தாங்காமல் அவரும் ஹார்ட் அட்டக்க்கில் இறந்து விட்டார்.

  பதிலளிநீக்கு