வெள்ளி, 23 மே, 2014

காமக்கிழத்தன் அவர்களுக்கு...

காமக்கிழத்தன் அவர்களுக்கு வணக்கம்.
    யாதெனில் உங்களின் வலையில் வந்து கருத்திடும் இடத்திற்கு வர முடியவில்லை என்பதாலும், மின் அஞ்சல் முகவரியும் இல்லாததாலும் இந்தக் கடிதத்தை  வலையில் பதிக்கிறேன்.
    தவறெனில் மன்னிக்கவும்.
    ஐயா... உங்களின் நல்ல நல்ல பதிவுகளைப் படிக்கும் ஆர்வத்தில் உங்களின் வலையைத் திறந்தால் அது துள்ளிக் கொண்டே இருக்கிறது. இதுவரையில் நான் உங்களின் பதிவு ஒன்றையும் படித்ததில்லை.
   இதற்கு முன் “பசி பரமசிவமாக“ நீங்கள் தான் எழுதினீர்கள் என்று நினைக்கிறேன். அப்பொழுதும் இப்படித் தான் வலை துள்ளியது. ஏன் அப்படி?
   ஐயா, என்னைப் போன்று உங்களின் படைப்புகளைப் படிக்க விரும்பும் மற்றவர்களுக்கும் சேர்த்து இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன். உங்களின் வலையின் துள்ளலை நிறுத்தி நாங்களும் படிக்க உதவுமாறு வேண்டுகிறேன்.
   இதையே ஆரூரார் அவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
அருணா செல்வம்.

24.05.2014

17 கருத்துகள்:

 1. ஒரு பக்கக் கதைகளின் மன்னர். சிறந்த விமர்சகரான காமக் கிழத்தன் அவர்களிடம் நானும் சொல்ல வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு பக்கக் கதைகளின் மன்னரா அவர்.....!!!?
   சிறந்த விமர்சகரா....!!
   எனக்கு இதெல்லாம் தெரியாதுங்க முரளிதரன் ஐயா. நான் அவரின் கதைகளைப் படிக்கும் ஆர்வத்தில் மட்டுமே இந்தப் பதிவை வெளியிட்டேன்.
   கருத்திற்கும் அவரைக் குறித்து எழுதிய தகவலுக்கும் மிக்க நன்றி மூங்கில் காற்று.

   நீக்கு
 2. அருணா செல்வம் அவர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

  எனக்கு உதவ எண்ணும் தங்களின் நல்ல மனதுக்கு மீண்டும் நன்றி.

  ’துள்ளல்’ ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னளவில் பிரச்சினை ஏதுமில்லை.

  நான் கணினி நுட்பங்களை அறியாதவன் என்பதால், நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் உதவியை நாடியிருக்கிறேன். இன்றைய தங்களின் பதிவு பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.

  நண்பர் ஆரூர் மூனா செந்திலிடமும் தெரிவித்திருக்கிறேன்.

  எவ்வளவு பெரிய உதவியை எனக்குச் செய்திருக்கிறீர்கள்; ‘நல்ல பதிவுகள்’ என்று பாராட்டியும் இருக்கிறீர்கள். தவறுக்கு இடமேது? மன்னிக்க வேண்டுவது தவறல்லவா?

  கசப்பான அனுபவங்கள் காரணமாகக் கருத்துப் பெட்டியைப் பூட்டி வைத்தேன். எனக்குப் பதிவுலக நண்பர்கள் குறைவு. வரும் பின்னூட்டங்கள் மிக மிகக் குறைவு. பொறுமையுடன் விவாதிக்கும் மன உறுதி இல்லாததும் காரணம். இதன் விளைவு.......

  பதிவில் நேரும் பெரும் பிழைகளைக்கூட வாசகர்கள் சுட்டிக் காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. தற்காலிகமாக, பெட்டியைத் திறந்து வைக்கிறேன்.

  மனதில் பட்டவைகளைக் கிறுக்கிக்கொண்டிருக்கும் என்னைப் பொருட்படுத்தி ஒரு பதிவே வெளியிட்டது தங்கள் பெருந்தன்மையின் வெளிப்பாடு.

  நன்றி...நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் காமக்கிழத்தன் ஐயா.

   என்னுடைய வேண்டுகோளை ஏற்று உங்களின் வலையைச் சரி செய்தமைக்கு மிக்க நன்றி. இப்பொழுது மிகவும் நன்றாகத் தெரிகிறது.
   நான் இந்தியா சென்றிருந்த பொது தான் உங்களின் வலையில் படித்தேன். ஆனால் இங்கே (பிரான்ஸ்) என்னால் உங்களின் வலையைத் திறக்க முடியவில்லை. அனேகமாக வெளிநாட்டவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
   உங்களின் கருத்துப் பெட்டியை மூடி வைத்திருந்ததாகக் குறிப்பிட்டு இருந்தீர்கள். நீங்கள் கருத்துக்களை மட்டுப் படுத்தும் படி செய்தால் வீண்வாதங்களுக்குறிய பின்னொட்டங்களை தவிர்க்கலாம். அதனால் வீணாகும் நேரத்தைத் தவிர்க்கலாம்.
   நான், நீங்கள் எழுதுவது போன்ற சின்ன சின்ன கதைகளை விரும்பிப் படிப்பவள்.
   தவிர நீங்கள் அனுபசாளிகள். உங்களிடமிரந்து நான், என்னைப் போன்றவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
   உங்களின் ஒவ்வொரு தலைப்பையும் தமிழ்மணத்தில் பார்த்தவிட்டு ஆவலாகப் படிக்க ஓடிவருவேன். ஆனால் படிக்க முடியாது. நான் வெளியிட்ட பதிவை நான் நியாயமாக எப்பொழுதோ வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் இது தவறோ என்ற குழப்பம் இருந்ததால் வெளியிடவில்லை.
   உங்களின் இன்றைய கதையைப் போலவே மற்ற கதைகளும் நன்றாக இருக்கும். இனி நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை வாசித்து மகிழ்வேன்.

   தவிர இதில் பெருந்தன்மையெல்லாம் இல்லை ஐயா. உண்மையைச் சொன்னால்.... இது என்னுடைய சுயநலம் தான்.
   உங்களைத் தொடர்கிறேன் காமகிழத்தன் ஐயா. நன்றி.

   நீக்கு
 3. நல்ல வேண்டுகோள். அவரவர் தளங்களில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்தால் படிக்கும் அனைவருக்கும் வசதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரவர்களின் தளங்களில் இருக்கும் பிரட்சனைகள் அவரவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. யாராவது முன்வந்து சொன்னால் தான் தெரிகிறது.
   இப்பொழுது காமக்கித்தன் ஐயா தன் வலையைச் சரிசெய்து விட்டார் நாகராஜ் ஜி.
   நன்றி.

   நீக்கு
 4. இது போன்று இன்னும் ஒரு சில வலைத் தளங்கள் இன்னமும் துள்ளிக் குதித்த
  வண்ணமே இருக்கின்றது தோழி அவர்கள் இதைக் கருத்தில் கொண்டு சரி செய்தால் நாமும் அவர்களது ஆக்கங்களைப் படிக்க முடியும் .பகிர்வுக்கு மிக்க நன்றி .இதோ நானும் தங்களை அழைக்கின்றேன் வாருங்கள் ஒரு சோக கீதம் என் வலையில் தங்கள் வரவிற்காகவும் காத்திருக்கிறது தோழி

  http://rupika-rupika.blogspot.com/2014/05/blog-post_9392.html#comment-form

  பதிலளிநீக்கு
 5. பிளாக்கர் நண்பனின் வழிகாட்டுதலின்படி, Gadget இல் இருந்த ஒரு நிரலை நீக்கிவிட்டு, HTML இல் ஒரு நிரலைச் சேர்த்திருக்கிறேன். இப்போது என் வலை துள்ளாது என்று நினைக்கிறேன்.

  தகவல் சொல்லுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பிளாக்கர் நண்பனில், துள்ளலுக்கான தீர்வு பற்றிய பதிவிலிருந்து.....


  //ஒருவேளை பதிவர் இதை செய்யவில்லை என்றால் வாசகர்கள் நாம் எப்படி படிக்க வேண்டும்?

  மிக எளிது! வலைப்பூ முகவரியில் இறுதியாக .com/ncr என்று கொடுத்தால் அந்த வலைப்பூ .com முகவரியிலே இருக்கும், Redirect ஆகாது.

  உதாரணத்திற்கு http://malaithural.blogspot.com/ncr //

  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அன்புடையீர் வணக்கம்! எனது வலைத்தளமும் இவ்வாறுதான் துள்ளிக் கொண்டு இருந்தது. அதாவது இந்தியாவில் உள்ளவர்கள் எனது வலைத்தளத்தை பார்வையிடலாம்,படிக்கலாம். ஆனால் வெளிநாட்டு நண்பர்கள் எனது வலைப்பக்கம் சென்றால் அது துள்ளிக் கொண்டே இருக்கும்.. பின்னர் ப்ளாக்கர் நண்பன் அப்துல்பாசித் அவர்களின் ஆலோசனைப்படி சரி செய்தேன்.
  எனது இந்த அனுபவத்தையும், எனக்கு ஏற்பட்ட பயத்தினையும், அந்த துள்ளலை நீக்கிய முறையையும்

  துள்ளித் துள்ளி ஓடும் வலைத்தளம்
  http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_9497.html

  என்ற பதிவினில் எழுதி இருக்கிறேன்.


  பதிலளிநீக்கு
 8. I did not have any jumping problem in his site. May be bcos I have my virus-protection, fire-wall, pop-up blocker set up differently. But sometimes I felt like writing a "response" and felt bad that I could not comment. However I respect that it is his blog and he does things based on his experience. If at all I need to comment very badly, I will take it to my blog and do it as usual. :)

  பதிலளிநீக்கு
 9. நாங்களும் காமக்கிழத்தன்அவர்களுக்கு கருத்துரைப் பெட்டி இல்லையே என்று சொல்லி அவரது மின் அஞ்சல்லுக்குத்தான் பின்னூட்டத்தை அனுப்பி வருகின்றோம்! தாங்கள் அதை ஒரு பதிவாக எழுதி அவரை, பூட்டிய கருத்துரைப் பெட்டியைத் திறக்க வைத்தமைக்கு மிக்க நன்றி! சகோதரி!

  பதிலளிநீக்கு
 10. ஆனால் எங்களுக்கு இதுவரை அவரது வலைப்பூவோ இல்லை வேறு வலைப்பூவோ துள்ளவில்லை!. எங்கள் ப்ளாகர் தான் சென்ற முறை இடுகை இடும் போது எழுத்துக்களும் படங்களு மாறி மாறி ஓடின.....பின்னர் வெளியில் வந்து மூடிவிட்டு பின்னர் திறந்து செய்து சமாளித்தோம்!

  பதிலளிநீக்கு
 11. எனது தளத்தில் தொடர்பு கொண்டார்... நன்றிகள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 12. எல்லோர் மனதிலும் இருந்ததை பதிவாக வெளியிட்டு காமக்கிழத்தன் அவர்களுக்கு தகவல் சொல்லி கருத்துப்பெட்டியை திறக்கவைத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 13. சிலரின் வலை இப்படி இருக்கு டீச்சர் ஆரூரா நிலையும் இதுதான்! நல்லதே நடக்கட்டும்!

  பதிலளிநீக்கு

 14. தங்கள் செயலைச் சிறந்த பணியாகக் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு