செவ்வாய், 27 ஜனவரி, 2015

எங்கே சென்றாய்?



கண்ணிருந்தும் குருடாக்கி!
    காதிருந்தும் செவிடாக்கி!
மண்ணிருந்தும் தரிசாக்கி!
    மலரிருந்தும் வீணாக்கி!
பண்ணிருந்தும் வாய்மூட
    பா..இருந்தும் கைமூட
என்னிருந்த உணர்வுகளை
    எடுத்தெங்கே சென்றுவிட்டாய்?

நிலவில்லா வானமாக
    நீரில்லாப் பயிராக!
மலரில்லாச் சோலையாக!
    மதுவில்லா விருந்தாக!
விலங்கில்லாக் காடாக!
    விளைச்சலில்லா நிலமாக
கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!

அருணா செல்வம்.

21 கருத்துகள்:

  1. அருணா!
    [[கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில்லா உன்நினைவால்!]]

    "காதலில்லா உன்நினைவால்!" சரியா அல்லது
    "காதலில்" உன்நினைவால்! சரியா?

    கலங்குகிறேன்! வாடுகிறேன்!
    காதலில் உன்நினைவால்!
    ---இப்படி எழுதினால்.. இந்த கவிதைக்கு பொருத்தமா இருக்குமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      அவனுக்கு என் மேல் காதலில்லை... ஆனால் அவனை நினைத்து நான் வாடுகிறேன் என்ற பொருளில் எழுதினேன் நம்பள்கி.

      தவிர இது கலிவிருத்தம். வரிக்கு நான்கு “காய்“ சீர் வரவேண்டும் என்பது இலக்கணம். நீங்கள் சொல்வது போல் எழுதினால் பொருந்தாது.

      தங்களின் வருகைக்கும் இப்படி எழுதினால் நன்றாக இருந்திருக்குமே என்ற ஆதங்கத்தில் கேட்ட கேள்விக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

      தவிர இது பழைய பாடல். நேரமின்மையால் பழையதை எடுத்து மீள்பதிவிட்டேன்.

      நீக்கு
  2. விருந்து என்பது இப்படி ஆகி விட்டதே...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அண்ணா.... எந்த சூழ்நிலையில் நாம் இரக்கிறோமோ... அதை வைத்து எழுதுவது அந்நேரத்தில் கவிதைக்குப் பொருந்தும்.

      இங்கே பெரும்பாலும் மது இல்லாத விருந்தே கிடையாது. ஆனால் நம்மூர் போல மொடாக்குடியர்களாக குடித்து சண்டை போட்டு கீழே விழ மாட்டார்கள்.

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வணக்கம் கில்லர்ஜி.

      நீங்கள் என் வலைப்பக்கம் வந்து படித்துச் சென்ற அடையாளமே எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் என்னால் தான் பலரின் பதிவுகளைப் படிக்க முடியாமல் இருக்கிறேன்.

      நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  4. அருமையான பா வரிகள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  5. இப்படி எல்லாம் கவிதையாக எழுதிக் கொண்டு(று) இருந்தால் இப்படிதான் சொல்லாமல் கொள்லாமல் ஒடிவிடுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....?

      அப்போ.... திரும்பி வர என்ன செய்வது தமிழரே...?

      நீக்கு
  6. //எங்கே சென்றாய்? ///

    என்று கேட்டு கவிதை எழுதுவதற்கு பதிலாக டாஸ்மாக் பக்கம் போய் தேடி இருக்கலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்.... நானும் கொஞ்சம் ஊற்றிக்கொள்ளவா?

      பெண்களுக்கு இப்படி அட்வைஸ் பண்ணாதிங்க தமிழரே.
      நன்றி.

      நீக்கு
  7. காதல் சோகம் இப்படித்தான்.அருமை அருணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பித்தன் ஐயா.

      நீக்கு
  8. காதலித்த பெண்ணவளைக் கடுகளவும் மதியாமல்
    வாடுகிற அவள்மனதை வாட்டமுறச் செய்துவிட்டுப்
    பேடியாய் ஓடியவன் பின்னர் மனம்திருந்தி
    நாடுவான் உன்னை நம்பிக்கை தளராதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சோ..... “இல்லாத“ காதலனை நீங்கள் இப்படியெல்லாம் திட்டுவதைக் கூட மனம் ஏற்க மாட்டேங்கிறது பரமசிவம் ஐயா.

      வரும்போது வரட்டும். நான் பாடுவதைத் தொடர்கிறேன்.
      நன்றி பரமசிவம் ஐயா.

      நீக்கு
  9. வணக்கம்
    சகோதரி

    கவிதை மிக அருமையாக உள்ளது இரசித்தேன்.
    தங்களின் வலைப்பக்கம் வந்தால் மவுஸ் அசையாது.. எழுதவும் முடியாமல் பலபதிவுகளை விட்டு விட்டேன் என்ன பிரச்சினை என்று தெரியாது... தயவு செய்து வலைப்பூவை பாருங்கள் அதனால்தான் என் கருத்துக்கள் இல்லாமல் உள்ளது

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா....?
      ஆனால் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை ரூபன்.
      தனபாலன் அண்ணா தான் உதவ வேண்டும்.
      வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
    2. ரூபன் தம்பி சொல்லியிருப்பது போல் கில்லர்ஜியும் சொல்லிக் கொண்டிருந்தார். ஹெல்ப் லைன் டிடி!!!!! அருணா சகோதரிக்கு ஹெல்ப் ப்ளீஸ்.....

      நீக்கு
    3. வணக்கம்
      என்ன செய்யவேண்டும் என்றால் உங்களின் கணணியை முதலில்
      1.வைரஸ் இஸ்கேன் செய்யுங்கள்
      2.Popular Posts இதையும் எடுத்துவிடுங்கள்
      3. தமிழ் மணம் .இன்ட்லி இவைகள் இருக்க மற்ற திரட்டிகளை இல்லாமல் செய்யுங்கள்.
      இதற்கு கருத்து போடும் போதும் முன்பு சொல்லிய நிலைதான்.

      google chrome இதில் திறக்கிறது... எழுதவும் முடிகிறது.
      internet Explorer இதில் திறக்கமுடியாது..எழுதவும் முடியாது.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
  10. அருமையான வரிகள். இறுதி வரி படித்தவுடன் எங்களுக்கும் தோன்றியது நம்பள்கி சொல்லியிருப்பதுதான். உங்கள் விளக்கம் வாசித்ததும் ஆஹா போட வைத்தது. ...ஆனால் காதலில்லா...கொஞ்சம் மனதை அசைத்தது....சகோதரி!

    பதிலளிநீக்கு