திங்கள், 21 அக்டோபர், 2013

அதிக மூளை யாருக்கு? (சிரிக்க-சிந்திக்க)



ஏழையின் மகன்!

   ராக்ஃபெல்லர் என்பவர் அமெரிக்கக் கோடீஸ்வரரர்களில் ஒருவர்.
   அவர் ஒரு சமயம் ஃபிரான்ஸ் நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றுக்குச் சென்ற அவர், ஹோட்டல் நிர்வாகியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
   பின்பு, “வசதிகள் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, மலிவான வாடகைக்கு ஒரு அறை வேண்டும்“ என்று கேட்டார்.
   ஹோட்டல் நிர்வாகி வியந்து, “ஐயா... தாங்கள் எங்கள் ஹோட்டலுக்கு வருகை புரிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தங்கள் பெயரைச் சொல்லி தங்கள மகன் அடிக்கடி இங்கு வந்து தங்குவார். அவர் எப்பொழுதும் அதிக வசதிகள் நிறைந்த அதிக வாடகையுள்ள ஆடம்பர அறையையே கேட்டு வாங்கித் தங்குவார். ஆனால் உலக மகா கோடீஸ்வரரான தாங்கள் மலிவு வாடகையில் அறையைக் கேட்கிறீர்களே. இது எனக்கு வியப்பாக உள்ளது.“ என்றார்.
   அதற்கு ராக்ஃபெல்லர் புன்சிரித்தார்.
   “இதில் வியக்க ஒன்றும் இல்லை. அவனது தந்தையாகிய நான் கோடீஸ்வரன். அதனால் அவன் ஆடம்பர வாழ்க்கை வாழுகிறான். ஆனால் நானோ ஓர் ஏழையின் மகன். ஏழையின் மகனான நான் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ முடியும்?“ என்றார் ராக்ஃபெல்லர்.
   அவரது தன்னடக்கத்தைக் கேட்டு அப்படியே மெய்சிலிர்த்துப் போனார் ஹோட்டர் நிர்வாகி.


அதிக மூளை யாருக்கு?

    அறிஞர் ஆல்ஸ்டன் மிகவும் குள்ளமாக இருப்பார்.
   ஒருநாள் ஒரு வழக்கறிஞர் அவரைப் பார்த்து, “உங்களை என் கோட் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளலாம் போலிருக்கிறதே!“ என்று கிண்டலாகப் பேசினார்.
   அதைக் கேட்ட ஆல்ம்ஸ்டன், “நீங்கள் அப்படிச் செய்தால் உங்கள் தலையில் இருப்பதைவிட, உங்கள் கோட் பாக்கெட்டில் அதிக மூளை இருக்கும்!“ என்றார் ஆல்ஸ்டன் சிரித்தபடி.
   வழக்கறிஞர் திடுக்கிட்டு உடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

34 கருத்துகள்:

  1. வணக்கம்

    நாம் பிறந்து வளர்ந்த வழியை ஒரு முறை பார்க்க வேண்டும் .......அதனால்தான் அவர் விலை குறைவான அறையை வடகைக்கு வேண்டினார்...சிந்திக்க வைக்கும் நகைச்சுவை அருமை வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. படித்ததில் எங்களுக்கும் பிடித்தது...
    முதல் கதையை மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸ் மற்றும் அவரின் மகனை வைத்துச் சொல்வார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா....?
      நான் இந்தக் கதையை ஒரு புத்தகத்தில் படித்தேன். பிடித்திருந்தது. பகிர்ந்தேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  3. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவைப் பகிர்வுக்கு
    வாழ்த்துக்கள் தோழி அருணா .

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  5. கடந்துவந்த பாதையையும்
    வளர்ந்துவந்த விதத்தையும்
    அறிந்தோரின் அனுபவ வார்த்தைகளும்...
    பேராற்றல் கொண்ட அறிஞர்களின்
    சொல்வளமும் மிகவும் நன்று..
    சிந்தையில் நிறுத்திக்கொள்ளவேண்டிய பதிவு.
    நன்றி சகோதரி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மகி அண்ணா.

      நீக்கு
  6. சிந்திக்கவும் வைத்தது
    சிரிக்கவும் வைத்தது
    தலைப்பைப் போலவே
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  8. சிறப்பான பதிவு. படித்ததில் பிடித்தது எங்களுக்கும் பிடித்தது.

    முதல் விஷயம் பில் கேட்ஸ் வைத்து மின்னஞ்சல் மூலம் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோடீஸ்வரர்கள் அப்படித்தான் இருப்பார்கள் போல...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றஜ நாகராஜ் ஜி.

      நீக்கு
  9. அறிஞர் ஆல்ஸ்டன் அவர்களின் பதில் வழக்கறிஞருக்கு சரியான அடி...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருக்கு அதிக மூளை. அதனால் தான் அப்படி பதிலடி கொடுத்திருக்கிறார்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  10. துன்பத்திற்கு மருந்து என்ன...? முந்தைய பகிர்வின் தொடர்ச்சியாக... குறளின் குரலாக... : நான் + துன்பம்

    பதிலளிநீக்கு
  11. முதல் கதையைப் போல நடிகர் திலகத்தையும் கலாய்க்க கேள்விபட்டுள்ளேன் !
    இரண்டாவது கதையில் வரும் அறிஞர்கள் போன்றவர்கள் மூக்கு அறுத்து விடுவார்கள் என்பதால் நான் சகவாசம் வைத்துக் கொள்வதில்லை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... நடிகர் திலகமுமா...! நிறையபேர் இப்படித்தான் இருக்கிறார்கள் போல...

      தவிர,
      அறிஞர்கள் மற்ற அறிவாளிகளின் மூக்கை அறுக்க மாட்டார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  12. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. முதலில் சிந்தித்தேன்! அடுத்து சிரித்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  14. இரண்டாவது துணுக்குதான் நச்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... அதனால் தான் அதை நான் இரண்டாவதாகப் போட்டேன்.

      நன்றி தோழி.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  16. இரண்டாவது தகவல் ரசிக்க வைத்தது. புத்திசாலிகள் புத்திசாலிகள்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முனைவர் ஐயா.

      நீக்கு
  18. படித்ததில் (உங்களுக்குப்) பிடித்ததை (நீங்கள்) பிடித்து எங்களுடன் பகிர்ந்ததற்கு நன்றி. அருமையாக உள்ளன

    பதிலளிநீக்கு