புதன், 5 ஜூன், 2013

பழைய காதலி!! (சிறுகதை)  
    “என்ன.... எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டியா...? அவ வந்ததும் கட்லட்டைப் பொறிச்சா போதும். டீ கூட ஸ்ட்ராங்கா போட்டு தூக்கலா சக்கரை போடு. ஆத்திடாதே. அவ சுட சுடத்தான் டீ குடிப்பா. முதலிலேயே போட்டு வச்சிடாதே. டிஃபனைக் கொடுத்து அவ சாப்பிட்ட பின்னாடி சூடா போட்டு கொடு. என்ன... நான் சொல்லுறது புரியுதா....?“ என்று கத்தியக் கணவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் ஊர்மிளா.
    அவன் இவள் பார்வையை இலட்சியம் செய்யாமல் வாசலில் போய் நிற்பதும் திரும்பவும் வந்து ஊர்மிளாவிடம் ஏதாவது சொல்லிச் செல்வதும் என்று பரபரப்பாக இருந்தான்.
    இதெல்லாம் நேற்று மாலை “நாளைக்கு ஒரு வேலையாக உங்க ஊர் பக்கம் வருகிறேன். அப்படியே உங்களையும் சாய்ந்திரம் வந்து பார்க்கலாம் என்று இருக்கிறேன். எங்கேயும் போயிடாதீங்க“ என்று வீணா தொலைபேசியில் மோகனிடம் சொல்லியதிலிருந்து அவனிடம் தொற்றிக்கொண்ட பரபரப்பு இது!
    அவனுக்கோ குழந்தைக்கோ அல்லது ஊர்மிளாவிற்கோ உடல்நிலை சரியில்லை என்றால் கூட ஆபிசுக்கு லீவு போட மாட்டான். ஆனால் இன்று.... அவனின் பழைய காதலி வீணா சும்மா சாய்ந்திரம் வந்து பார்த்துவிட்டு போகிறேன் என்று தொலைபேசியில் சொன்னதற்கே லீவு போட்டு விட்டு வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டான்.
    வீட்டை அவனே துடைத்தான். சோபா நாற்காலி என்று அனைத்தையும் தூசிதட்டிச் சுத்தப்படுத்தினான். சுத்தமாக இருந்த பச்சை வண்ண திரைச்சீலைகளைக் கழற்றி நீல நிறத்தில் மாற்றினான்.
    கேட்டதற்கு, “வீணாவிற்கு பச்சை நிறம் பிடிக்காது“ என்றான். அவளுக்குப் பிடிக்குமென்று சோன்ப்ப்படியை அடையாறிலிருந்து வங்கி வந்து வைத்தான். ரோஸ்மில்க், பாதாம் கீர் என்று இரண்டையும் செய்யச் சொன்னான். “ஏதாவது ஒன்று போதுமே“ என்று அவள் சொன்னதற்கு “ரெண்டும் அவளுக்குப் பிடிக்கும்... ஒன்னு ருசியா இல்லைன்னா இன்னொன்னைக் குடிப்பாள்“ என்றான். இதனுடன் டீயும் சுடாகப் போட வேண்டும்.
   ஊர்மிளா தன் கணவன் மோகனை நினைத்தாள்.  
   கல்லூரியில் துவங்கிய காதல். படிப்பு முடிந்ததும் இவனுக்கு வேலை தேடுவதே வேலையாகி போன நேரம். அவளுக்கு நல்ல வரன் வந்துவிட இருவருமே எதிர்கலத்தைப் பேசி முடித்துக்கொண்ட தனித்தனி திருமணங்கள்....!! இன்றும் மனத்தில் உள்ளதை முழுவதுமாக மனைவியிடம் பகிர்ந்து பழையதை அசைபோடும் சுபாவமுள்ளவன்.
    ஊர்மிளா துவக்கத்தில் கொஞ்சம் கோபப்பட்டாலும் அவன் மனக்காயம் மனத்தினுள் வடுவாகவே பதிந்துவிட்டது என்று அவன் பேச்சிலிருந்து அறிந்து கொண்டபோது அவனுக்கு ஆறுதல் சொல்ல பழகிக் கொண்டாள்.
   ஒரு சமயம் அவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டிருந்தால் இவன் இன்னும் நன்றாக இருந்திருப்பானோ... என்று ஊர்மிளா நினைத்ததும் உண்டு. அந்த அளவிற்கு அவளைப்பற்றி சொல்லி புகழ்ந்திருக்கிறான். யோசனையுடன் நின்றிருந்தவளை...
   “ஊர்மிளா... உனக்கு எத்தனை முறை சொல்லுறது. இந்த பெரிய பொட்டை எடுத்திட்டு சின்னதா குட்டியா பொட்டு வச்சிக்கோ. இவ்வளவு பூ வைக்க வேண்டாம். ஒத்தை பூவைச் சைடுல வச்சிக்கோ. அவளுக்கு அப்படி இருந்தால் தான் பிடிக்கும். போ... போம்மா...“ என்று அவசரப்படுத்தி விரட்டினான்.

    மாலை ஆறு மணியளவில் பச்சைநிற சேலையுடன் தலைகொள்ளா மல்லிகையும் பெரிய பொட்டுமாக வீணா ஆட்டோவில் வந்து இறங்கினாள்.
    தான் வாங்கி வந்த பொம்மையையும் சாக்லெட் டப்பாவையும் மோகனின் குழந்தையிடம் கொடுத்தாள். மோகன் பெருமையாக தன் மனைவியைப் பார்த்தான்.
   “குழந்தைக்கு என்ன பேரு வச்ச..?“ கேட்டாள்.
   “உன் பேரு தான் வீணா“ அவன் சொல்லும் பொழுது முகமெல்லாம் பல்லாகத் தெரிந்தது.
   “ஐயே... வீணான்னா வச்ச? எனக்கே இந்த பேரு பிடிக்காது. ஏதோ வீணா போனதைச் சொல்லுற மாதிரி இருக்கும். அதனாலே என்னவர் என்னை மீனா... மீனான்னு மாத்தி தான் கூப்பிடுறார்“ என்றாள் சந்தோஷமாக.
   கொஞ்ச நேர பேச்சிலேயே மோகனின் முகம் சுறுங்கிவிட்டது. அவள் வார்த்தைக்கு ஒரு தரம் தன் கணவனைப் புகழ்ந்து கொண்டே இருந்தது தான் காரணம். நிலைமையைச் சமாளிக்க ஊர்மிளா “வீணா... நீங்க முதலில் கூலாக ரோஸ்மில்க் இல்லைன்னா பாதாம் கீர் சாப்பிடுங்க“ என்று சொல்லிக் கொண்டே டம்ளரில் ஊற்றி வைத்ததும் “ஐயையோ... நான் பால் பொருட்களே சாப்பிறதை விட்டுட்டேன்.“ என்றாள் அவசரமாக வீணா.
    “ஏன்...? நீங்க விரும்பி சாப்பிடுவீங்கன்னு இவர் சொல்லி இருக்கிறாரே...“ என்றாள் கணவனைப் பார்த்தபடி ஊர்மிளா.
    “ஆமாம்... முதலில் எல்லாம் சாப்பிட்டேன். கல்யாணத்திற்கு பிறகு அவருக்குப் பாலில் செய்த பண்டங்கள் சாப்பிட்டால் வயிறு உப்பசமாக ஆகிடும்ன்னு சொன்னார். அவர் சாப்பிடுறதில்லை என்றதும் நானும் விட்டுவிட்டேன்“ என்றாள் வீணா.
    அவர்கள் பேசிகொண்டு இருக்கும் பொழுதே ஊர்மிளா சுடச்சுட கட்லட்டும் அதனுடன் சோன்ப்ப்படியையும் கொண்டு வந்து வைத்தாள். வீணா தொடவே இல்லை. “இதெல்லாம் அவருக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சதும் நானும் சாப்பிறதை விட்டுட்டேன். கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க ஊர்மிளா...“ என்று சொல்லி தண்ணியை மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பினாள்.

   
    இரவு படுக்கையறையில் யோசனையுடன் படுத்திருந்த தன் கணவன் அருகில் வந்து படுத்தாள் ஊர்மிளா. அவனின் ஏமாற்றங்கள் புரிந்ததால் அவனுக்கு என்ன சொன்னால் ஆறுதல் கிடைக்கும் என்பது தெரியாததாலும் பேசாமலேயே இருந்தாள்.
    ஆனால் அவனே பேசினான். “ஊர்மிளா நான் கிடைக்காத ஒன்றை மட்டும் நினைச்சே வாழ்ந்து இருந்ததால கிடைச்ச உண்மையான சந்தோசங்களை அனுபவிக்காமலேயே இருந்திருக்கிறேன் என்பது எனக்கு இப்பொழுது தான் புரியுது.  இவ்வளவு நாளும் நான் எவ்வளவு பொய்யான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்னு நினைக்கும் பொழுது எனக்கே வெட்கமாக இருக்கிறது. வீணா நல்லவள். தன் கணவனுக்காக எப்படிவெல்லாம் தன் வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருக்கிறாள். ஆனால் நான்....? என்னை மன்னிச்சிடு ஊர்மிளா...“ என்றான் குரல் கம்ம.
    “ஐயோ... என்னங்க இது. வீணா, அவள் கணவனுக்காகத் தான் மாறினாள். நானும் உங்கள் மேல வச்ச உண்மையான அன்புக்காகத்தான் நீங்க எப்படியெல்லாம் சொன்னீங்களோ அப்படியெல்லாம் நடந்தேன். நீங்க பொய்யாய் வாழ்ந்தாலும் நான் உண்மையான அன்போட இருப்பதை நீங்க புரிஞ்சிட்டாலே போதுங்க எனக்கு....“ என்று சொன்னவளை உண்மையான அன்புடன் வாரி அணைத்தான் மோகன்.

அருணா செல்வம்.
06.06.2013
   
   

36 கருத்துகள்:

 1. ஆழமான கருத்துடன் கூடிய
  அருமையான கதை
  துவங்கியது தொடர்ந்தது முடித்தவிதம்
  மனம் கவர்ந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. எப்படியெல்லாம் சொன்னீங்களோ அப்படியெல்லாம் நடந்தேன். நீங்க பொய்யாய் வாழ்ந்தாலும் நான் உண்மையான அன்போட இருப்பதை நீங்க புரிஞ்சிட்டாலே போதுங்க...

  காலம் கடக்குமுன்பே உண்மையான அன்பு புரியவைத்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

   நீக்கு
 3. நல்ல கதை... முக்கியமாக புரிந்து புரிய வைத்த ஊர்மிளா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

   நீக்கு
 4. வீணா ஆட்டோவிலிருந்து இறங்கியதுமே கண்டுபிடித்து விட்டேன்... கதை இப்படித்தான் இருக்கும் என்று... நல்ல கருத்தான கதை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

   (நான் சொல்ல வருவதையெல்லாம் இப்படி முன்னாலேயே
   கண்டு பிடித்து வி்ட்டால் நான் எதை தான் எழுதுவது?.))

   நீக்கு
 5. நாம உண்மையா அன்பு செலுத்துனா திரும்பவும் நமக்கு கிடைக்கும் என்பதை உணர வைக்கும் கதை. பகிர்வுக்கு நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 6. // “ஊர்மிளா நான் கிடைக்காத ஒன்றை மட்டும் நினைச்சே வாழ்ந்து இருந்ததால கிடைச்ச உண்மையான சந்தோசங்களை அனுபவிக்காமலேயே இருந்திருக்கிறேன் என்பது எனக்கு இப்பொழுது தான் புரியுது. இவ்வளவு நாளும் நான் எவ்வளவு பொய்யான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்னு நினைக்கும் பொழுது எனக்கே வெட்கமாக இருக்கிறது.//

  பல ஆண்கள், இதுபோன்ற பொய்யான கற்பனை வாழ்க்கை வாழ்பவர்களே!

  கிடைத்ததை வைத்து சந்தோஷமாக வாழக் கொடுப்பிணை வேண்டும்.

  நல்லா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றி கோபாலகிருஷ்ணன் ஐயா.

   நீக்கு
 7. அழகிய படிப்பினைக்கதை. கிடைக்காததை நினைத்து உள்ளதையும் தொலைக்கக்கூடாது என்று அழகாக உணர்த்தியுள்ளீர்கள்.
  வாழ்த்துக்கள் தோழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 8. அருமை ! அருமை ! ஒவ்வொரு காதலரும் ஏதோ ஒரு சமயத்தில்
  இப்படி வாழும் சூழல் ஏற்பட்டால் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்
  என்பதை எவ்வளவு அழகாக சொன்னீர்கள் தோழி !இதைப் படிக்கும்
  போது ஓர் உண்மைச் சம்பவத்தை நேரில் காண்பது போல உணர்ந்தேன்
  வாழ்த்துக்கள் சிறப்பான கதை மேலும் தொடரட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “ஒவ்வொரு காதலரும் ஏதோ ஒரு சமயத்தில்
   இப்படி வாழும் சூழல் ஏற்பட்டால் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்“

   உங்களின் கருத்து அருமை.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 9. வீணா அப்புறம் ஊர்மிளாவுக்குத் தொலைபேசி, "இப்போ ஓகே தானே" என்று கேட்கவில்லையா! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் நீங்களே யோசித்துக்கொள்வீர்கள்
   என்று விட்டுவிட்டேன் ஸ்ரீராம் ஐயா.
   (தவிர அப்படி சொன்னால் வீணா நடித்தது போலாகிவிடும் அல்லவா?)

   தங்களின் வருகைக்கும் புரிதலுக்கும்
   மிக்க நன்றி.

   நீக்கு
 10. அருணா நல்ல கதை, நல்ல நடை. வாழ்த்துகள். த.ம. 7

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி குட்டன் ஐயா.

   நீக்கு
 13. இது புரியாம தானே ஆண்கள் இப்பவும் தாடியுடன் அலைகிறார்கள், கைகிளை ஆண்களுக்கு மட்டுமே என்று சும்மாவா இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதாவது புரிந்து கொண்டால் சரி.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி பனிமலர் ஐயா.

   நீக்கு
 14. அழகான புரிதல்! பழைய காதலி வேறு புதிய மனைவி வேறு என்று வாழ்ந்துகாட்டி உணர்த்தியவள். வீணாவின் வரவால் ஊர்மிளாவின் அருமையும் வீணாவின் பெருமையும் புரிந்ததே.. அருமையான கதை.. ஏற்ற படம். பாராட்டுகள் அருணா செல்வம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
   மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

   நீக்கு
 15. //கிடைக்காத ஒன்றை மட்டும் நினைச்சே வாழ்ந்து இருந்ததால கிடைச்ச உண்மையான சந்தோசங்களை அனுபவிக்காமலேயே இருந்திருக்கிறேன் என்பது எனக்கு இப்பொழுது தான் புரியுது. இவ்வளவு நாளும் நான் எவ்வளவு பொய்யான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்னு நினைக்கும் பொழுது எனக்கே வெட்கமாக இருக்கிறது.//- யதார்த்த வாழ்க்கையின் உண்மையை சொல்லிட்டிங்க! பொய்யா நம்மை ஏமாத்திக்கறதை விட இயல்பை ஏத்துக்கிடறதுக்கு மனப்பக்குவம் வந்துட்டா வாழ்க்கை மிக மிக அருமை!
  நல்ல கதை! சூப்பர்!
  tha.ma-10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. “பொய்யா நம்மை ஏமாத்திக்கறதை விட இயல்பை ஏத்துக்கிடறதுக்கு மனப்பக்குவம் வந்துட்டா வாழ்க்கை மிக மிக அருமை!“

   அழகாகச் சொன்னீர்கள்.
   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. ella topiclayum kalakkareenga.... அப்படியா...!!

   தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி கலியபெருமாள் தோழரே!

   நீக்கு
 17. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. கிடைக்காத ஒன்றை மட்டும் நினைச்சே வாழ்ந்து இருந்ததால கிடைச்ச உண்மையான சந்தோசங்களை அனுபவிக்காமலேயே இருந்திருக்கிறேன்.// பெரும்பாலான விஷயங்களில் நடப்பது இதுதான்.தவறவிட்ட ஒன்றை நினைத்து கொண்டே நிகழ்கால சந்தோஷங்களை தொலைக்கிறோம். நல்ல சிறப்பான சிறுகதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றி ராபட் ஐயா.

   நீக்கு
 19. அருமையான சிறுகதை.

  தனது காதலியின் நினைவிலேயே இருந்து கட்டிய மனைவியைப் புரிந்து கொள்ளாது இருந்து விட்டாரே இப்படி.......

  பதிலளிநீக்கு