வெள்ளி, 25 ஜனவரி, 2013

“சாமி படம்“ எது..? (நகைச்சுவை நிகழ்வு)





நட்புறவுகளுக்கு வணக்கம்.
     இங்கே பிரான்ஸில் வாழும் ஒரு சில நம் தமிழ்க் குடும்பத்தில் கூட பிறந்த பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் தெய்வ நம்பிக்கையை வளர்ப்பதில்லை.
     அதற்கு மாறாக தன்னம்பிக்கையை அதிகமாக வளர்க்கிறார்கள்.
     உதாரணத்திற்கு பெற்றோர்கள் இருவரும் வேலைக்குக் சென்று விடுவதால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆபத்து என்று வந்தால் எப்படி சமாளிக்க வேண்டும்... யார் யாருக்குப் போன் செய்து அழைக்க வேண்டும். அந்த இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்து கொள்வது என்று அறிவுரைகள் சொல்லி வளர்க்கிறார்கள்.
     இது உண்மையில் ஆரோக்கியமான செயல் தான்.
அதற்காக ஒரு சில குடும்பங்களில் “சாமி“ என்பதென்றால் என்ன என்று அறியாமலே வளர்ந்து விட்டப் பிள்ளைகளும் உள்ளார்கள்... என்றால் நீங்கள் நம்புவீர்களா...?
   என் வீட்டில் நடந்த ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.

    என் கணவர் தெய்வபக்தி நிறைந்தவர். வெள்ளிக் கிழமைகளில் நான் பூஜைக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்தால் அவர் வேலை முடித்து வந்ததும் கற்புரம் ஏற்றி சாமி கும்பிடுவார்.
    ஒரு வெள்ளிக்கிழமை அன்று எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் குடும்பம் என் வீட்டிற்கு வந்திருந்தார்கள். நான் அவர்களுடன் பேசிய படியே எல்லா வேலையையும் முடித்துவிட்டேன். என்னவர் வரும் நேரம் என்பதால் தோட்டத்தில் பூத்திருந்த ஒரு ரோஜாவைப் பறித்து (அந்த மாதம் நவம்பர் என்பதால் ஒரே ஒரு ரோஜாதான் செடியில் இருந்தது.) இருந்த அந்த ஒரே ஒரு ரோஜாவைப் பறித்து விளையாடிக் கொண்டிருந்த  தோழியின் பத்து வயதாகும் மகன் சதிஷிடம் கொடுத்து “இதைச் சாமி படத்தில் வைத்திடு“ என்று சொல்லி கொடுத்தனுப்பி விட்டு வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
    அவனும் “பூவை வைத்து விட்டேன் ஆண்ட்டி“ என்று என்னிடம் வந்து சொல்லிவிட்டு தொலைக்காட்சியில் படம் பார்க்க அமர்ந்து விட்டான்.
    என் கணவர் வந்ததும், வந்தவர்கள் அவருடன் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு கிளம்பினார்கள். சதிஷ் ஏதோ திரைப்படம் பார்த்துக்கொண்டு இருந்ததால் “நான் பிறகு வருகிறேன்“ என்று சொன்னான். அதனால் அவனை என்னிடம் விட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள். அதன் பிறகு என் கணவர் சாமி கும்பிட போனார். அங்கே சாமி படத்தில் ஒரு பூவும் இல்லாததைக் கண்டு... “இன்று ஒரு பூக்கூடவா பூக்கவில்லை“ என்று கேட்டார்.
    நானும் “ஒரே ஒரு பூதான் பூத்திருந்தது. அதைச் சதிஷ் தான் சாமி படத்தில் வைத்தான்“ என்று சொல்லிக் கொண்டே போய் பார்த்தால் அங்கே படத்தில் பூ இல்லை. ஒரு சமயம் படத்தின் பின்னால் விழுந்திருக்குமோ என்று நினைத்து அங்கிருந்த எல்லா படங்களையும் ஆராய்ந்து பார்த்தேன். பூவைக் காணோம்.
    அப்பொழுது தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டிருந்த சதிஷிடம் “சாமி படத்துக்கு பூ வைக்க சொன்னேனே வச்சியாடா...?“ என்று கேட்டேன். “ம் வச்சிட்டேன் ஆண்ட்டி“ என்றான். “அங்க இல்லையேடா...என்றதும் “நான் ஒழுங்காத்தான் வச்சேன் ஆண்ட்டி... முதலில் எனக்கு எட்டலை. மாமா ரூமுல இருந்த ஸ்டூலை இழுத்து போட்டு ஏறி வச்சேன்“ என்றான்.
    அப்பவே நான் யோசித்தேன். மாமா ரூம்பிலா... ஒரு சமயம் அவன் நாற்காலியை எடுக்கப்போய் பூ கீழே விழுந்து விட்டதா என்று எண்ணிய படி மாமா அறைக்கு சென்று பார்த்தால்....

    அவன் பூவை அழகாகத்தான் சாமி படத்திற்கு வைத்திருந்தான்.
எந்தச் சாமி படம் என்று கேட்கிறீர்களா...?

    “சாமி“ விக்ரம் பட போஸ்டருக்கு... !!!!

    அதைக் கண்டதும் எனக்கு சிரிப்பு தான் வந்தது. அவனிடம் “இதுவாட சாமி படம்? என்று கேட்டதற்கு “ஆமாம்... இது தான் சாமி படம்.. ஏன்.. உங்க வீட்டில் வேற சாமி படம் கூட இருக்குதா...?“ என்று வேறு கேட்டான்.
    அவனிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் நான் சிரித்துக் கொண்டே என் கணவரிடம் சொல்ல அவரும் என்னுடன் சேர்ந்து சிரித்தார்!

அருணா செல்வம்.

22 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி... நீங்கள் “சாமி“ என்ற வார்த்தையை மாமி என்று எழுதிவிட்டீர்களா...? ஏதோ தவறாக உள்ளதாம். அதனால் உங்களின் கருத்தை நீக்கி விட்டேன்.
      மன்னித்து விடுங்கள்.

      நீக்கு
    2. தாராளமாக நீங்கள் எதை வேண்டுமானலும் நீக்கலாம்; அதற்க்கு ஒரு விளக்கமும் யாருக்கும் நீங்கள் குடுக்கத் தேவையில்லை. Because you are the master of your domain.

      you don't have to listen to Tom, Dick, and Harry:
      எப்ப ஒரு மூன்றாவது மனிதன் சொல்லுக்கு அவர்கள் விருப்பு வெறுப்பிற்கு ஏற்ப நாம் ஆடுகிரமோ அப்பவெ நாம் அவர்களால் அடிமைப் படுத்துப்படுகிறோம்.

      நான் தவறாக எழுதவில்லை. மாமி என்று தெரிந்தே தான் எழுதினேன்! மாமி என்றால் பிராமணர்கள் என்று மட்டும் அர்த்தம் இல்லை; கல்யாண வயதை உடைய பயனையோ பெண்ணையோ வைத்திருக்கும் எல்லா அம்மாகளும் மாமிகளே; அப்பாக்கள் மாமாக்களே.

      அதைதான் நகைச்சுவையாக எதுகை மோனைக்காக "சாமிக்கு பதிலா மாமிக்கு' என்று எழுதினேன்.

      I hope you publish this.

      நீக்கு
  2. சினிமாக்கள் குழந்தைகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதை நகைச்சுவையாக சொன்ன விதம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. சாமி பட விகரம் அச்சிறுவனுக்கு சாமியாகத் தெரிந்தார் போல!

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன்.. “சாமி“ என்றால் அந்தப்பட கதாநாயகன் தான் என்று நினைத்திருந்தானாம்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. //“சாமி“ விக்ரம் பட போஸ்டருக்கு.//
    படத்தோட போஸ்டரையெல்லாம் வீட்ல வச்சிருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது போஸ்டர் இல்லைங்க. காலண்டர்.
      நான் தவறாக எழுதிவிட்டேன்
      (வர வர தமிழ் வார்த்தைகள் மறந்து விடுகிறது)

      தங்களின் வருகைக்கும் தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கும்
      மிக்க நன்றி சேக்காளி ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. குட்டன் ஐயா... சிரிப்பு வரவில்லையா...?
      என்க்கு இப்பொழுது அதை நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  8. சிறுவனின் செயல் சிரிக்கவைத்தது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  9. நல்ல நகைச்சுவை எனினும் சிந்திக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி சசிகலா.

    பதிலளிநீக்கு