வியாழன், 20 டிசம்பர், 2012

அவள் யாருக்குச் சொந்தம்? (நிமிடக்கதை) 
    இந்தக் கதையின் முடிவை நான் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கும் தெரியாது. உங்களில் யாருக்காவது முடிவு தெரிந்தால் எழுதுங்கள்.

   
    அன்று தான் திருமணம் நடந்த அந்த மணமக்களுக்கு அன்று இரவே முதலிரவு முடிந்தது. மறுநாள் இராணுவத்தின் உடனடி அழைப்பின் காரணமாக மணமகன் காலையிலேயே தன் கடமையைச் செய்ய கிளம்பி விடுகிறான்.
   ஆனால் அன்று அவன் போன இரயில் ஒருபாலத்தின் மேல் ஓடும்போது விபத்துக்கு உள்ளானது.  தண்ணீரில் மூழ்கிய அவனை ஏதோ ஒரு கிராமத்தார் காப்பாற்றி பிழைக்க வைத்தனர். அவன் மூன்று மாதம் வரை மனநிலை பாதிக்கப் பட்டவானாக இருந்து தெளிந்தான்.
   தெளிந்ததும் அந்தக் கிராமவாசிகளிடம் தன் ஊர் குடும்பம் தொழில் அனைத்தையும் எடுத்துச் சொல்லி அவர்களின் உதவியைப் பெற்று அவனின் சொந்த ஊருக்கு வந்தால் அவன் வீட்டின் முன்னால் பந்தல் எல்லாம் போடப்பட்டு விழாக் கோலமாக இருக்கிறது.
   யோசனையுடன் உள்நுழைந்தால்அவன் மனைவிக்கு திருமணம் முடிந்து அக்கினியைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அதிர்ச்சியுடன் அவன் நிற்கும் பொழுது அவனின் தந்தையும் அவன் மனைவியின் தந்தையும் இவனைக் கவனித்து விட்டார்கள்.
   அப்பொழுது இருவருமே அவன் உயிர் பிழைத்து வந்து விட்டானே என்று சந்தோசம் அடையாமல் அதிர்ச்சி தான் அடைகிறார்கள்!
   தந்தை சொன்னார். தம்பீ.. நடந்த விபத்தில் நிறைய பேர் தீயில் கருகி விட்டதால் நீயும் அதில் இறந்திருக்கலாம் என்றே நினைத்து விட்டோம். இந்த மூன்று மாதத்தில் நீ உயிருடன் இருப்பதற்கான தகவலும் கிடைக்கவில்லை. திருமணமாகி ஒரே நாளில் விதவையாகி நிற்கும் அந்தப் பெண்ணின் நிலைமை எங்களுக்குப் பார்க்கச் சகிக்காமல் அவளை உன் தம்பிக்கே கட்டி வைத்து விட்டோம். இனி என்ன செய்வது என்று புரியவில்லை என்றாராம்.

   இனி அவள் யாருக்குச் சொந்தம்?
   பதில் யாருக்காவது தெரிந்தால் எழுதுங்கள்.


அருணா செல்வம்.

19 கருத்துகள்:

 1. ரொம்பக் கஷ்டமான பிரச்சனைதான்...
  இப்போது திருமணம்தானே முடிந்திருக்கு...முதல் கணவன் உயிருடன் இருப்பதுவும் தெரியவந்து விட்டது தானே அப்போ முதல் கணாவனுக்குத்தான் அவள் சொந்தம்....

  பதிலளிநீக்கு
 2. தாலிதானே கட்டினான் முதலிரவும் நடத்திவிட்டவன் வந்து விட்டானே ....!

  பதிலளிநீக்கு
 3. ha ha ha
  vera yarukku ??
  enakku than sondham.....

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. மாறுங்களேன்... இதில் தவரென்ன இருக்கிறது சீனி ஐயா?

   நன்றி.

   நீக்கு
 5. இதில் பெண்ணின் முடிவுதான் முக்கியம்... வாழப் போவது அவள்தானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது எப்பொழுதோ படித்தக் கதை.
   நானும் உங்களை போல் தான் யோசித்தேன்.
   மற்றவர்களின் கருத்து எப்படி இருக்கும் என்று
   காணவே இந்தக் கதையைப் பகிர்ந்தேன்.

   தங்களின் பதிலுக்கு மிக்க நன்றி தோழி.

   நீக்கு
 6. ஆமா சகோ ஒரு நாள் வாழ்ந்தாலும் சரி ஓராயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் பெண்ணின் மனநிலையெ பதில் சொல்லும்.

  பதிலளிநீக்கு
 7. நல்லகதை! நல்ல கேள்வி! பெண்ணின் விருப்பம்தான் சரியான முடிவாக இருக்கும்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
   மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

   நீக்கு
 8. அவளின் முடிவுதான் சரியாக அமையும் சமூகம் விட்டால்.....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூகம் விட்டால்....

   ஹா ஹா ஹா...
   சமூகம் என்பதே நாம் தானே ஹேமா?

   நன்றி என் இனிய தோழி.

   நீக்கு