வியாழன், 20 செப்டம்பர், 2012

காதல் கொண்ட காளையர்கள்... (கவிதை)மலரினும் மெல்லியது – 2

காதல் கொண்ட காளையர்கள்
   கண்ணால் பேசும் பேச்சினிலே
மாதர் மனத்தை மாற்றிடுவர்!
   மங்கை மனமும் மாறிவிடும்!
பேதம் இல்லா மனத்துடனே
   பெருமை பேசி மகிழ்ந்திடுவாள்!
சேதம் கொண்ட மனத்தினையும்
   செம்மை யாகக் காத்திடுவாள்!

அன்பு கொண்ட அவள்மனதில்
   ஆசை வார்த்தை காட்டிவிட்டுப்
பண்பு மறந்து பாவையுடன்
   பள்ளி கொண்டு பின்மறந்து
துன்பம் மட்டும் துணையாகத்
   தூக்கிக் கொடுத்துச் சென்றாலும்
இன்பம் என்ப(து) அவனென்றே
   இனிக்க அவனை நினைத்திடுவாள்!

காதல் காமம் மட்டும்தான்
   காளை நெஞ்சில் தெரிகிறது!
மீதம் உள்ள நல்லவைகள்
   மிருக மனத்தில் மறைந்தனவே!
வேதம் சொன்ன வார்த்தையெல்லாம்
   விரும்பி அலசி ஆராய்ந்தால்
காதல் காமம் என்பதெல்லாம்
   கடைசி வரையில் வந்திடுமோ!

மலரினும் மெல்லியது காமம் சிலர்அதன்
செல்வி தலைப்படு வார்.   (குறள் – 1289)

(சுவிஸ் கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை! - தொடரும்)
அருணா செல்வம்.

24 கருத்துகள்:

Unknown சொன்னது…

// காதல் கொண்ட காளையர்கள்
கண்ணால் பேசும் பேச்சினிலே
மாதர் மனத்தை மாற்றிடுவர்!
மங்கை மனமும் மாறிவிடும்!
பேதம் இல்லா மனத்துடனே
பெருமை பேசி மகிழ்ந்திடுவாள்!
சேதம் கொண்ட மனத்தினையும்
செம்மை யாகக் காத்திடுவாள்//

மலரினும் மெல்லியது காமம் எனக் கூறிய வள்ளுவன் வாக்கிற்கேற்ப கவிதையின் ஆக்கமும் அமைந்துள்ளது

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அழகான அறிவுரைகளுடன் கூடிய கவிதை மிகச் சிறப்பாக சிந்திக்க வைப்பதாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

ஆத்மா சொன்னது…

அழகான வரிகளில் அழகான கவிதை...
தொடருங்கள் நாங்களும் சலிக்க மாட்டோம்

MARI The Great சொன்னது…

அருமை அருமை...வார்த்தைகள் உபயோகம் ரசிக்க வைக்கிறது!

>>>அன்பு கொண்ட அவள்மனதில்
ஆசை வார்த்தை காட்டிவிட்டுப்
பண்பு மறந்து பாவையுடன்
பள்ளி கொண்டு பின்மறந்து<<<

பெண்கள் எப்போதுமே ரொம்ப சுலபமா ஏமாந்துவிடுகிறார்கள்..குறிப்பா ஏமாற்றும் குணம் கொண்டவர்களிடம்!

Seeni சொன்னது…

thodarungal.....

Yaathoramani.blogspot.com சொன்னது…

திருக்குறளுக்கு அழகிய தெளிவான
விளக்கமாக அமைந்த கவிதை அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...

அருணா செல்வம் சொன்னது…

புலவர் ஐயா.... திருக்குறளைத் தவிர்த்து
வாழ்க்கை தத்துவங்களை நம்மால் சொல்லிவிட
முடியுமா..?
எங்கே சுற்றி எங்கே தொட்டாலும் அதில்
திருவள்ளுவனின் கருத்து பொதிந்திருக்கும் என்பது
நீங்கள் அறியாததா...?
(ஆனால் எனக்கு முன்னால் திருவள்ளுவர் பிறந்து
நான் நினைப்பதை எல்லாம் சொல்லிவிட்டாரே என்று
ஆதங்கமாகத் தான் இருக்கிறது)
நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

ஐயா... தங்களின் வருகைக்கும் அழகிய பாராட்டிற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

சிட்டுக்குருவி... உங்களுக்கு என் பாடல்களில்
சலிப்புத் தெரியும் பொழுது சொல்லிவிடுங்கள்...
மாற்றி விடுகிறேன்... உங்களை!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சிட்டு.

அருணா செல்வம் சொன்னது…

அதை ஏங்க சொல்லுறீங்க வசு...
பாவம் அவர்கள்!!

வாழ்த்துக்கும் நல்ல கருத்திற்கும்
மிக்க நன்றி வசு.

அருணா செல்வம் சொன்னது…

நீங்களும் தொடருங்கள் நண்பரே.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

இரண்டு ஓட்டா....? (எப்படி...!!)
நன்றி.
நன்றி ரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

குட்டன்ஜி சொன்னது…

குறளுக்கேற்ற கவிதை.அருமை

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குட்டன் அவர்களே.

ஹேமா சொன்னது…

எனக்கு வியப்பு மட்டுமே.ரசித்துப் போகிறேன் எப்போதும் !

அருணா செல்வம் சொன்னது…

கலைஞர்களுக்குக்
கைதட்டல் தானே
முக்கியம்....

நன்றி என் இனிய தோழி ஹேமா.

MARI The Great சொன்னது…

முதன் முதலாக தங்களின் இந்த பதிவு தமிழ்மணத்தில் ஏழு வாக்குகள் பெற்று வாசகர் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கிறது!!! வாழ்த்துக்கள்! :)

அருணா செல்வம் சொன்னது…

அப்படிங்களா வசு...?
நீங்கள் பார்த்தீர்களா...? நல்லது.

ஆனால் நான் பார்ப்பதற்குள் ஓடிவிட்டது. சரி இன்னொரு பதிவு பிரபளம் ஆகாமலா போய்விடும்... அப்பொழுது கண்குளிர பார்க்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி வசு.

Unknown சொன்னது…

மிக அருமையான பதிவு .வாழ்க வளமுடன்
அன்புகருப்பசாமி