நட்புறவுகளுக்கு
வணக்கம்.
பொதுவாகவே
நிறைய பேருக்கு சினிமா உலகில் நுழைய வேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. பணத்திற்காக
புகழுக்காக என்ற காரணம் மட்டும் அல்லாமல் அதில் ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்துக் கொண்டு அனைவரையும்
அது தன்பால் இழுக்கத்தான் செய்கிறது.
ஒரு சமயம், இதில் நம் திறமைகளை வெளிகாட்டினால்
அது பல்லாயிரக் கணக்கான மக்களிடம் சென்றடையும் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். எந்தத்திறமையானாலும்
அதை மற்றவர்கள் கண்டு களித்துப் பாராட்டினால் தானே அந்தத் திறமைக்காண அங்கிகாரம் கிடைத்ததாக
ஆகும்.
ஏனோ கொஞ்ச நாட்களாக எனக்கும் இந்த ஆசை துளிர்விட
ஆரம்பித்து விட்டது. இது சரியா தவறா என்று யோசிப்பதற்கு முன்பே என் எண்ணங்களுக்குச்
சிறகு முளைத்து விட்டது. என்ன செய்வது ? நானும் சராசரி மனுஷி தானே….. ஹி ஹி ஹி.....
சரி… சினிமாத்துறையில் நுழைந்து மின்னுவதற்கு என்ன
செய்யலாம் என்று யோசித்தேன். தவிர சினிமாத்துறையில் நுழைந்த அத்தனை பேருமே மின்னிவிடவில்லை.
ஏதோ சிலர்தான் பிரபலங்காளாக ஆகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள்.
அப்படி பிரபலங்களானவர்களை ஒரு வரிசைப்படுத்தினேன்.
என்ன ஓர் ஆச்சர்யம் !!!!!
நான் வரிசைப்படுத்திய
பல பிரபலங்களின் பெயரில் உள்ள எழுத்துக்களில் ஜ, ஜி, ஜோ, ஷ, ஹ, ஸ்ரீ போன்ற எழுத்துக்கள்
உள்ளவர்களே நிறைய பேர்களாக இருந்தார்கள்.
உதாரணமாக
சிவாஜி
எம்.
ஜி. ஆர்
பாலாஜி
எஸ் எஸ்
ராஜேந்திரன்
ஜெய்சங்கர்
ஏ எம்
ராஜன்
நாகேஷ்
சரோஜா
தேவி
டி.ஆர்
ராஜகுமாரி
எம் என்
ராஜம்
விஜய
குமாரி
கே ஆர்
விஜயா
ஜெயந்தி
வாணிஸ்ரீ
உஷா நந்தினி
ரஜினி
கமலஹசன்
ஸ்ரீதேவி
ஸ்ரீ
பிரியா
சுகாஷினி
விஜய்
அஜித்
தனுஷ்
ஜோதிகா
டி எம்
சௌந்தர்ராஜன்
ஜானகி
எல் ஆர்
ஈஸ்வரி
ஜிக்கி
ஸ்வர்ண
லதா
பாரதிராஜா
பாக்கியராஜ்
பாண்டியராஜன்
டி ராஜேந்தர்…..
இப்படி
பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேலே உள்ள நட்சத்திரங்கள் மின்னிட இப்படி ஜ, ஜா, ஜி,
ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்களைத் தன் பெயரில் வருவது போல் அமைத்துக்கொண்ட காரணமாகக்
கூட இருக்கலாம்.
உடனே நானும் என் பெயரை எப்படி எப்படியோ மாற்றி
எழுதிப் பார்த்தேன். ம்ம்ம்….. எதுவும் தேறவில்லை. ஆனால் உங்களில் யாருக்காவது சினிமாத்துறையில்
நுழைந்து மின்னிட ஆசை இருந்தால் உங்களின் பெயரை ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ எழுத்துக்கள்
சேர்ந்து வருமாறு அமைத்துப் புகழ்பெருங்கள்.
பின்குறிப்பு
இந்த ஜ, ஜா, ஜி, ஜோ, ஹ,ஷ, ஸ்ரீ என்ற எழுத்துக்கள்
அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் அல்ல. வடமொழி எழுத்துக்கள்.
அன்புடன்
அருணா
செல்வம்
20.10.2015