செவ்வாய், 4 நவம்பர், 2014

அருணா அந்தாதி! (கவிஞர் கி. பாரதிதாசன்)


 http://bharathidasanfrance.blogspot.fr/2014/11/blog-post.html

அன்பும் அருளும் அமா்ந்தொளிரும்! எந்நாளும்
இன்பும் எழிலும் இணைந்தொளிரும்! - மின்னிடும்
நல்லறம் நாட்டிடும் நல்லருணா செல்வமே!
இல்லறம் காப்பாய் இனித்து!

இனிக்கின்ற செந்தமிழை ஏந்துமனம் கண்டேன்!
தனிக்கின்ற தண்புகழ் கண்டேன்! - குனிக்கின்ற
வில்லொளிரும் பெண்ணே! வியன்அருணா செல்வமே!
சொல்லொளிரும் பாக்களைச் சூடு!

சூடும் மலராகச் சொல்லும் கதைமணக்க!
பாடும் குயிலாகப் பண்ணிசைக்க! – ஆடுகின்ற
வண்ண மயில்பறக்க மாண்பருணா செல்வமே!
எண்ணம் இனிக்க எழுது!

எழுதும் எழுத்தெல்லாம் என்றும் நிலைக்க!
விழுதாய் வலிமை விளைக்க! - தொழுதேத்தி
அன்னைத் தமிழ்காக்கும் அன்பருணா செல்வமே!
முன்னைப் புகழ்காக்க முந்து!

முந்தும் செயலனைத்தும் கந்தம் கமழ்ந்தோங்க!
சொந்தம் அனைத்தும் சுடா்ந்தோங்க! - சந்தமுடன்
வாழ்வு வளா்ந்தோங்க வானருணா செல்வமே!
ஏழ்பிறப்பும் காண்க எழில்

எழிற்றமிழ் என்பேன்! இனியதமிழ் என்பேன்!
பொழிற்றமிழ் என்பேன்! புவியில் - தொழிற்றமிழ்
என்பேன்! இணையிலா இன்னருணா செல்வமே!
உன்றமிழ் ஓங்கும் உயா்ந்து!

உயா்ந்தொளிரும் வாழ்வும்! உழைப்பொளிரும் பேரும்
வியந்தொளிரும் வண்ணம் விளைக! - உயிரொளிரும்
செம்மைத் தமிழ்பாடும் சீா்அருணா செல்வமே!
அம்மை அருள்உன் அகம்!

அகத்துள் திருமால் அமர்ந்தாள! ஓங்கி
இகத்துள் அனைத்துமிருந் தாளப் - புகழேந்தி
வாழும் கவியரசி வல்லருணா செல்வமே!
சூழும் நலங்கள் சுரந்து!

சுரக்கின்ற பாக்கள் சுவைகொடுக்கும்! நெஞ்சுள்
சிரிக்கின்ற பூக்கள் செழிக்கும்! - தரிக்கின்ற
தண்டமிழ் மின்னும்! தவஅருணா செல்வமே!
கொண்டபணி மின்னும் கொழித்து!

கொழிக்கின்ற கற்பனைகள்! கொள்ளை யிடுமே   
செழிக்கின்ற சிந்தனைகள்! சீரைப் - பொழிகின்ற
இன்றேன் கவிப்பெண்ணே! பொன்னருணா செல்வமே!
என்றென்றும் வாழ்கஉன் அன்பு!

அன்புடன்

கவிஞர் கி. பாரதிதாசன்

நட்புறவுகளுக்கு வணக்கம்.
    இன்று என் பிறந்த நாளுக்காக என் ஆசிரியர் 
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள் என்னை வாழ்த்தி எழுதிய பதிற்றந்தாதியை உங்களுக்கும் பதிவாக வெளியிட்டு மகிழ்கிறேன்.

அன்புடன் 
அருணா செல்வம்.

32 கருத்துகள்:

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கு வாழ்த்தும் உங்கள் ஆசிரியருக்கு பாராட்டுக்களும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…


பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாடல் எங்கே?

அம்பாளடியாள் சொன்னது…

வணக்கம் !

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புத் தோழியே !

சசிகலா சொன்னது…

அசத்தலான வாழ்த்தக்களோடு எங்க வாழ்த்தும் உங்களுக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி.

இளமதி சொன்னது…

வணக்கம் அன்புத் தோழி!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

ஐயாவின் பதிற்றந்தாதி அற்புதம்!
ஐயாவுக்கும் வாழ்த்துக்கள்!

Iniya சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழி ...!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.!

G.M Balasubramaniam சொன்னது…

பிறந்த தின வாழ்த்துக்கள். வாழ்த்துப் பாடலும் பொருத்தமே.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

ஆசிரியரின் வாழ்த்துக்கள் பலிக்கட்டும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தோழி !

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 9

Yarlpavanan சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“

அருணா செல்வம் சொன்னது…

ஒரு சின்ன தவறு நேர்ந்து விட்டது. அதனால் அதை சரி செய்து வெளியிட்டேன்....

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

(இருந்தாலும் நீங்கள் இரண்டாவதாக வந்து படித்துக் கருத்திட்டதில் எழுத்தப்பிழை! நகைச்சுவையுடன் கூடி இருந்தாலும் அதை வெளியிடவில்லை. மன்னிக்கவும்)

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

தனிமரம் சொன்னது…

இனிய பா பாவேந்தரின் பாராட்டுக்கு வாழ்த்துக்கள். காலம் தாழ்த்திய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் சகோ.....

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி பாலசுப்ரமணியன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனிமரம்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.