புதன், 27 நவம்பர், 2013

அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி!! (நகைச்சுவை)





    ரொனால்ட் ரீகன், அமெரிக்காவில் அதிபராக இருந்த போது, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் நிருபர் அவரைப் பேட்டி கண்டார்.
   “மிஸ்டர் பிரிசிடெண்ட், அமெரிக்காவில் பெண்கள் ஆட்சி ஏற்படுமா?“ என்று கேட்டார்.
   “நிச்சயம் ஏற்படாது“ உடனே பதில் அளித்தார் ரீகன்.
   “எப்படி அவ்வளவு திட்டவட்டமாகக் கூறுகிறீர்கள்?“ என்று கேட்டார் நிருபர்.
   ரீகன் புன்னகைத்தபடி, “அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட 35 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் எந்தப் பெண்ணாவது தனக்கு 35 வயது நிரம்பி விட்டதாகக் கூறுவார்களா?“ என்றார்.
   நிருபரும் “உண்மை தான்“ என்று சொல்லி ஆமோதித்து அவருடன் சிரித்தார்.


படித்ததில் சிரித்தது.

-------------------------------------------------------
சினிமா துறையில் முதல் பெண்மணிகள்!!

1.      தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவி, நடிகை அஞ்சலி தேவி. (1959)
2.      தமிழில் முதன் முதலில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.
3.      முதன் முதலில் சினிமாவில் கதை எழுதி இயக்கி தயாரிப்பாளராகவும் பணிபுரிந்த பெண் ஃபாத்திமா பேகம்.
4.      முதல் பெண் இசையமைப்பாளர்கள் நர்கீஸின் தாய் ஜடான் பாய் மற்றும் சரஸ்வதி தேதி.
5.      முதன் முதலில் திரையில் தோன்றி நடித்த நடிகைகள் துர்காபாயும், அவரது மகள் கமலாபாய் கோகலேயும். (படம் – 1913 இல் வெளிவந்த மோகின் பாஸ் மாசுர்)
6.      திரையில் தோன்றிய முதல் பெண் குழந்தை நட்சத்திரம் 1918 இல் வெளியான “கிருஷ்ணா ஜனம்“ படத்தில் நடித்த மந்தாகினி.

“அரிய அறிவுத்துளிகள்“ நூலிலிருந்து.

--------------------------------------------------------

30 கருத்துகள்:

  1. ஹா... ஹா...

    அரிய அறிவுத்துளிகள் தகவல்களுக்கு நன்றி சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. ஹா...ஹா... அங்கும் அப்படித்தானா? பிரபலங்கள் ஜோக் சூப்பர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ... நம்ம நாட்டுலேயும் அப்படியா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு

  3. வணக்கம்

    தமிழ்மணம் 4

    அரிய கருத்தை அருணா அளித்தார்
    பெரிய பெருமையைப் பெற்று!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  4. வணக்கம்
    அருமையான அறிவுத் துளிகள்.. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  5. உண்மை தான்!
    நம் பதிவுலகலத்திலேயே சிலர் அவர்கள் வயதை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது மாதிரி மறைக்கிறார்கள்! அப்புறம் என்ன வெங்காயம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி.... அவர்களின் வயதைத் தெரிந்து கொள்வதால் அதில் என்ன லாபத்தை அடைந்துவிடப் போகிறீர்கள்?

      தவிர வெங்காயத்தின் விலை அதிகமாகிவிட்டதாமே... அது உங்களுக்குத் தெரியுமா?
      வெங்காயம் சமையலுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா?
      அதை அவ்வளவு சாதாரணமாக சொல்லிவிட்டீர்கள்!

      உங்களுக்கு ஒன்று தெரியுமா?
      வெங்காயத்தை உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லைஎன்று பெரிரிரிரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதை உரிக்க உரிக்க காரம் தாங்காமல் கண்ணீர் கொட்டும்.

      ஆனாலும் அது கிடக்குது வெங்காயம் என்று விட்டுவிடுவோம்.
      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  6. நீங்க அமெரிக்காவில் பிறந்து நீங்கள் 35 வயது என்று 20 வருசத்திற்கு முன்பு ஒத்துக் கொண்டிருந்தால் நீங்கள் அமெரிக்கா அதிபராக இருந்து இருப்பீர்கள் tha.ma 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடடா... நான் அமெரிக்காவில் பிறக்கவில்லையே.
      பிறந்திருந்தால் நிச்சயம் இன்னும் ஐந்து வருடத்தில் நான் தான் அமெரிக்க அதிபர்.

      “உண்மைகள்“ அமெரிக்க நேஷனாலிட்டி எப்படி வாங்குவது...?

      தகவலுக்கு நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  7. என்னை அதிபரா தேர்ந்தெடுக்கறதா இருந்தா சொல்லுங்கப்பா...35 வயசு என்ன....70 வயசுன்னு கூட சொல்றேன்.... !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க வீட்டுல நீங்கதானே அதிபர் அங்க நீங்க ஆட்சி நல்லா பண்ணுனதா உங்க வூட்டுகாரரிடம் சர்ட்டிபிகேட் வாங்கி அதோட 5000 டாலர் மதிப்புக்கு ஒரு காசோலையை உடன் அனுப்பவும் அதன்பின் உங்கள் மனு பரிசில்லிக்கப்படும்

      நீக்கு
    2. உங்க வீட்டுல நீங்கதானே அதிபர் அங்க நீங்க ஆட்சி நல்லா பண்ணுனதா உங்க வூட்டுகாரரிடம் சர்ட்டிபிகேட் வாங்கி அதோட 5000 டாலர் மதிப்புக்கு ஒரு காசோலையை உடன் அனுப்பவும் அதன்பின் உங்கள் மனு பரிசில்லிக்கப்படும்

      நீக்கு
    3. //70 வயசுன்னு கூட சொல்றேன்.... !//

      இப்ப கூட 20 வயசை குறைச்சுதானே சொல்லுறீங்க

      நீக்கு
    4. உஷா... நீங்கள் அமெரிக்க அதிபராகி “காலில் விழும் நம் கலாச்சாரத்தை அவர்களக்கும் கற்றுக் கொடுத்து விடுங்கள்.

      முக்கியமாக... பெண்களின் வயதைக் கேட்கும் ஆண்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதாக சட்டம் போட்டுவிடுங்கள்.

      நன்றி உஷா.

      நீக்கு
  8. முதல் பெண்கள் பற்றிய சில தகவல்கள் புதுசு

    பதிலளிநீக்கு
  9. சிறந்த கருத்துப் பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜீவலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. சிரிக்கவும் மனம் சிலிர்க்கவும் வைத்த சிறப்பான பகிர்வுக்கு மிக்க
    நன்றி தோழி அருணா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காயத்ரி.

      நீக்கு
  12. எல்லா நாட்டு பெண்களும் இப்படித்தானா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நாட்டிலேயும் பெண்கள், பெண்களாக இருக்கம் வரை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் கலியபெருமாள் ஐயா.

      நீக்கு
  13. ஆஹா.....வலையுலகத்திலும் பெண்களின் ஆட்சிதானே நடக்குது

    பதிலளிநீக்கு