திங்கள், 7 அக்டோபர், 2013

பேரெழில் பார்வை!!



கடிகாரம் பார்க்காமல் எழுந்து விட்டுக்
   கண்ணுறங்கும் சேவலையும் சென்று பார்ப்பாள்!
விடிகாலைச் சூரியனைத் தேடித் தேடி
   விழியிரண்டும் மூடாமல் காத்தி ருப்பாள்!
படிவாசல் நீர்தெளித்துக் கோலம் போட்டுப்
   பலகாரம் சிலசமைத்துப், பள்ளி செல்லப்
பிடிவாதம் பிடிக்கின்ற என்னி டத்தில்
   பிரியாத காதலுடன் வந்து நிற்பாள்!

விழித்திருந்தும் உறங்குதல்போல் நடிக்கும் என்னை
   வீம்பின்றி எழுவென்றுதட்டி விட்டுச்
செழித்திருக்கும் வயல்ஓரம் உழவன் நின்று
   செறுக்காக தனையுணர்ந்து மகிழ்தல் போலே
மொழிமறந்து விழிமலர்ந்து பார்த்து நிற்பாள்!
   முறுவளிக்கக் குழிவிழுமென் கன்னம் கண்டு
வழித்தெடுத்துக் காண்ணாறு சுற்றி விட்டு
   வாஞ்சையுடன் முத்தமிட்டுத் தொட்ட ணைப்பாள்!

கண்மூடி மெல்லமெல்லத் திறந்து பார்ப்பேன்!
   கடமைதனைச் செய்வதுபோல் நகர்ந்து செல்வாள்!
மண்ணுர்டே புதைந்திருக்கும் வைரம் போல
   மறைத்திருக்கும் புன்னகையைக் காண நானோ
பண்ணோடப் பாசமுடன் அம்மாஎன்பேன்!
   பட்டென்று பார்க்கின்ற அவளின் பார்வை,
விண்மூடக் கிழித்தெழுவும் கதிரோன் போலே
   விழிமின்னும் பேரெழிலை அதனுள் காண்பேன்!

அருணா செல்வம்
07.10.2013

19 கருத்துகள்:

  1. விழிமின்னும் பேரெழிலை அதனுள் காண்பேன்
    >>
    எப்படியோ கண்டுக்கொண்டால் நல்லாதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  3. அந்தப் பேரெழில் பார்வை நாள் முழுக்க நம்மை இயக்கும்
    ஒரு பெரும் சக்தியன்றோ...

    அருமையான ஆத்மார்த்த உணர்வான கவிதை!
    உங்கள் ஒவ்வொரு வரியிலும் உணர்ந்து ஊறிப்போனேன்.

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஆத்மார்த்தமாக கவிதையைப் படித்து உணர்வுப் பூர்வமாக கருத்திட்டு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. வணக்கம்

    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  6. சூப்பர்... நல்லா இருந்துச்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தேவி.

      நீக்கு
  7. நீண்ட நாட்களுக்குப் பின் இதயம்தொடும் மரபுக்கவிதையைத் தந்திருக்கிறீர்கள். "முறுவளிக்கக் குழிவிழும் கன்னம் கண்டு" என்ற வரியில், 'குழிவிழும்' என்பதற்குப் பதில் 'குழிவிழுந்த' அல்லது 'குழிவிழுமோர்' என்று வந்தால் அசை முழுமை பெறும்.
    - கவிக்ரன் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் செல்லப்பா ஐயா.

      உங்களின் வாழ்த்தைக் கண்டு மகிழ்ந்தேன்.
      நீங்கள் சொன்னது போல் அசை முழுமை பெறும் விதத்தில் திருத்திவிட்டேன். முதலிலேயே கவனிக்காதது என் தவறு தான்.
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  8. அன்பின் உருவம் மட்டுமல்ல,அழகின் உருவமும் அம்மாதான் என்பதை அழகாகக் கவியாக்கியமைக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. அழகிய வரிகளில் அருமையான கவிதை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு