புதன், 2 அக்டோபர், 2013

காந்திஜியின் தமிழ்ப் பற்று!





1934 –ஆம் ஆண்டு!
   சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் காந்திஜியும், “தமிழ்த் தாத்தா“ என்று அழைக்கப்படும் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரும் பேசினர்.
   பேசி முடித்த பின் காந்திஜி சாமிநாத ஐயரிடம், “நான் உங்களுடைய மாணவனாக இருந்து தமிழைக் கற்றுக் கொள்ளக்கூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை!“ என்று வருத்தமுடன் கூறினார்.
   அதற்கு டாக்டர் உ.வே. சா., “தில்லையாடியைச் சேர்ந்த கன்னியப்பச் செட்டியார் தங்களுக்கு அருமையாகத் தமிழைக் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்பதை நான் நன்கு அறிவேன். தங்களின் தமிழ்ப்பற்றும் பேச்சும் அபாரமானது!“ என்றார்.
   உடனே காந்திஜி புன்முறுவலுடன், “இருக்கலாம்! ஆனால் நான் கற்ற தமிழ் கைம்மண் அளவுதானே. கல்லாத தமிழ் உலகளவு உள்ளதே!“ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
   தமிழ் மீது காந்திஜி வைத்திருந்த பற்றை எண்ணி, டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் மனம் நெகிழ்ந்தார்.

படித்தை இன்று பதிவதில் மகிழும்
அருணா செல்வம்.
  

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. நல்ல பகிர்வு.
    பகிர்வுக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  3. வணக்கம்!

    அண்ணல் அளித்த அருந்தமிழ்ச் சொற்களை
    எண்ணிட ஏறும் இனிப்பு
    !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் அழகிய கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  4. வணக்கம்
    காலத்துக்கு தகுந்த மாதிரி பதிவு அமைந்துள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  5. நல்ல பகிர்வு அருணா. காந்தியைப் பற்றித்தான் எவ்வளவு தகவல்கள்.
    புரியாத சிலர் அவரை ஆதாரங்களின்றி தூற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனங்களே
      நல்ல விளம்பரங்களாகும்!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  6. நல்லது
    தமிழ் மீது நேசமென்று சொல்லிக் கொண்டு, காந்திஜீ மீது அப்பட்டமான பதிவுகள் கொண்டு சேறு பூச நினைப்பவர்களுக்கு இது அடியாக இருக்கட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆத்மா.

      நீக்கு
  7. பெரியவங்ககிட்ட தன்னடக்கம் இருக்க தானே செய்யும். நல்ல தகவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தேவி.

      நீக்கு
  8. அவர் மறைந்தாலும் அவர் புகழ் என்றும் அழியாது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. சுருக்கமாக இருப்பினும்
    காந்தி ஜெயந்தி சிறப்புப்பதிவு
    வெகு சிறப்பு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. அருணா நலமா!
    காந்தி ஒரு நல்ல மனிதன்; தான் கொண்ட கொள்கையில் பிடிப்பு கொண்டவர். மற்றபடி, ஆதாரமில்லாமல் அவருக்கு தமிழ் தெரியும், பிரெஞ்சு தெரியும் எல்லாம் கப்சா; தவறு கந்தை மீது இல்லை காந்தியை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் செய்த வேலை. எல்லாம் இடைசெருகல்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      காந்தி ஒரு நல்ல மனிதர் தான்.
      தான் எழுதிய சுயசரிதையில், தான் பெருமைபடும் விசயங்களைப் பற்றி எதையுமே அவர் எழுதவில்லை.
      ஆனால் அவரைச் சந்தித்தவர்கள்,
      அவரிடம் இருந்து தான் அறிந்த நல்ல பண்புகளை தங்களின் நினைவலைகளாக மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளார்கள்.
      அவருக்கு தமிழோ மற்ற மொழிகளோ தெரியும் என்பதை
      நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை.
      பார்த்தவர்கள் எழுதி வைத்துச் சென்றதைப் பகிர்ந்தேன்.

      தவிர அவருக்குத் தமிழ் தெரியும் என்ற செய்தி உண்மை தான்.
      அவர் பாரதியாருக்கு எழுதிய தமிழ் கடிதம் இன்றும்
      லண்டன் மியுசியத்தில் உள்ளதாகப் படித்திருக்கிறேன்.

      பொய்யான விசயங்களாக இருந்தால் என்றோ
      இவைகள் மறைக்கப்பட்டிரும்.

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  11. பொய்யை உண்மையாக்குவதை ஊடங்கங்கள் நன்றாகவே செய்யும். ஒன்றல்ல இரண்டல்ல ஏகப்பட்ட இடைசெருகல்கள்...அவைகளை நாம் எடுத்து சொன்னாலும் அவர்கள் சொல்லும் பொய்யை சொல்லிக்கொண்டு தான் இருப்பார்கள். தஞ்சை கோவில் நிழல் ஒரு நல்ல உதாரணம்; மற்றும் ராமர் பாலம்.

    பதிலளிநீக்கு