வியாழன், 27 செப்டம்பர், 2012

நன்றி உணர்வு !! (கவிதை)





தேவையான நேரத்தில் தானே வந்து
   தேடியதைத் தந்திடுவார் கடவுள் போல!
சேவையாக அவருக்குத் திருப்பி நாமோ
   சேர்த்துவைத்த பொருள்தந்தும் பயனே இல்லை!
தேவையென்று நாம்நினைத்த பொருளை விட்டுத்
   தேடிவந்து கொடுத்தவரை நெஞ்சில் நிறுத்தத்
தீவைத்துக் கொளுத்தினாலும் மறைந்து போகாத்
   தீவிரமாய்ப் பற்றிவரும் உணர்வே நன்றி!


அருணா செல்வம்.
  

23 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நன்றி சௌந்தர்.

      (எப்பொழுது தான் உங்கள் இடுகைகளை எங்களுக்குக் காட்டுவீர்கள்?)

      நீக்கு
  2. @ செய்தாலி

    அண்ணே நீங்க என்னை விட ஸ்பீடுன்னே... :)

    by the way.. nice poem aruna selvam

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி பார்த்தாலும் தம்பி நீங்க 10 நிமிஷம் லேட்

      நீக்கு
    2. எப்படிப் பார்த்தாலும் என் இடுகைக்கு நீங்கலெல்லாம் இவ்வளவு ஸ்பீடாக வந்து கருத்திட்டு ஓட்டு போட்டது எனக்கு சந்தோஷமா இருக்கிறது நண்பர்களே.

      நன்றி வசு
      நன்றி ஹாரி பாட்டர்.

      நீக்கு
  3. கலக்கல் அக்கா முதல் வரியா பார்த்ததும் தபால்காரர் பற்றிய கவிதையோ என்று நினைதேன்.. முடிவில் டாப்.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாரி... நீங்கள் சொன்னப்பிறகு தான் நானும் அந்தக் கோணத்தில் பார்த்தேன். உண்மை தான்.

      வாழ்த்திற்கு நன்றி நண்பா.
      (அக்காவா....? எழுத்துல வயசு கூட தெரிகிறதா?)

      நீக்கு
  4. பதில்கள்
    1. நன்றல்லதைத் தான் நிறைய நினைவில் வைத்துக் கொள்கிறார்கள் புலவர் ஐயா.
      நன்றி ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  6. நன்றியுணர்வென்பது மனதில் ஒரு பக்தியோடு இருந்தால் மட்டுமே திரும்பக் கிடைக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்தியோடு இருக்க வேண்டுமா...?
      உண்மையாக இருந்தால் போதாதா...?

      நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  7. அழகு.....இங்கயும் ராஜாக்கள் நிழற்படமோ...:)))

    பதிலளிநீக்கு
  8. நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தாம்.அதுமட்டுமன்று நாயிடமும் கடவுள் கண்ட மகான்கள் உண்டு .மிக அண்மையில் அமெரிக்காவில் ,ரயில் தண்டவாளத்தில் தற்கொலைக்கு முயன்ற ஓர் அன்பரை காப்பாற்றி தான் இறந்த நாயை பற்றி செய்தி படித்தோம்.
    அன்புடன் கருப்பசாமி.

    பதிலளிநீக்கு