செவ்வாய், 31 ஜனவரி, 2012

இப்படியே இருந்திடலாம் (கவிதை)அழுது கொண்டே
இருந்திடாலாம்
அன்புச் சொற்கள்
கிடைக்குமெனில்!

விழுந்து கொண்டே
இருந்திடலாம்
விழுந்து மீண்டும்
முளைக்குமெனில்!

தொழுது கொண்டே
இருந்திடலாம்
தூய்மை நெஞ்சில்
நிலைக்குமெனில்!

எழுதிக் கொண்டே
இருந்திடலாம்
இனிய தமிழும்
பிறக்குமெனில்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக