வியாழன், 31 அக்டோபர், 2013

தீமைகள் விலகும் நாள்!!


தொன்றுதொட்டு கொண்டாடுகிறோம்
தோய்வில்லாமல் தீபாவளியை!
என்றுவிட்டு யோசிப்போம்
எதனால் வந்தது இதுவென்று?

இறந்தவனுக்குத் திருநாள்
இருப்பவர் கொண்டாடுகிறார்!
பிறந்தவர் இறப்பது உலக நியதி
இருப்பினும் கொண்டாடுதல் என்ன நீதி?

அடுத்தவர்க்கு உதவாவிடினும்
கெடுக்காமல் இருப்பது மேலாம்!
கொடுப்பவர் மனத்தைக் குடைந்து
கெடுத்தே உயர்வது கீழாம்!

அதிகாரம் கிடைதாலோ
ஆணவம் வருதல் சரியோ?!
விதியென்று மக்கள்வாழ்ந்தும்
வீழ்த்துதல் என்ன முறையோ?

அசுரக்கொடுமை அன்றுமட்டுமா?
அரசுக்கொள்கை இன்று மட்டுமா?
அன்றோ இருந்தான் ஓர்அசுரன்!
இன்றோ இல்லை ஓர்தலைவன்!

ஒருநாள் அசுரன் அழிந்ததனால்
திருநாள் தீபாவளி வந்திடுதாம்!
வருநாள் எல்லாம் விழித்திருந்தால்
வசந்தம் வாழ்வில் வந்திடுமா?

திருப்பிப் போட்டு பார்க்க வேண்டாம்!
திருத்திக் கொள்ள வேண்டும் இன்று
தீமைகள் விலகும் நாளெல்லாம்
தீபாவளி திருநாள் என்று!

அருணா செல்வம்.

31.10.2013

20 கருத்துகள்:

  1. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் தோழி அருணா .நினைத்துப் பார்க்கும்
    அளவிற்கேனும் எம்மக்களுக்கும் நன்மைகள் அருளும் நாளாக மாற
    வேண்டும் இத்திருநாள் .

    பதிலளிநீக்கு
  2. // திருப்பிப் போட்டு பார்க்க வேண்டாம்!
    திருத்திக் கொள்ள வேண்டும் இன்று
    தீமைகள் விலகும் நாளெல்லாம்
    தீபாவளி திருநாள் என்று! //

    மாற்றுச் சிந்தனையோடு ஒரு கவிதை!
    எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    கவிதை வரிகள் அருமை ரசித்தேன் வாழ்த்துக்கள்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. தலைப்பும் கவிதை வரிகளும் அருமை சகோதரி...

    இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. அருமை சகோதரி. வாழ்த்துக்கள்.
    //திருப்பிப் போட்டு பார்க்க வேண்டாம்!
    திருத்திக் கொள்ள வேண்டும் இன்று
    தீமைகள் விலகும் நாளெல்லாம்
    தீபாவளி திருநாள் என்று!//
    சிந்திக்க வைக்கும் வரிகள். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..
    அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  7. தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  8. தீமைகள் நீங்கிடத் தீட்டிய பாவிலே
    ஊமையும் போரிடுமு ணர்ந்து!

    மிக அருமையான ஒரு மாற்றுச் சிந்தனைக் கவிதை!
    ஆழ்ந்த பொருள்! சிறப்பு அருணா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!.

    பதிலளிநீக்கு
  9. சத்தமில்லா சுத்தமான தீபாவளி கொண்டாடி மகிழுங்கள்..இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  10. கேள்விக்கணைகள் பாய்ந்து வருகின்றன...
    ஏனோ விடையற்ற வினாக்களாகவே என் நிலையில்...
    ஆயினும் இனியேனும் இதற்கான விடைகள் ஊற்றெடுக்கட்டும்...
    அருமையான ஆக்கம் சகோதரி...

    பதிலளிநீக்கு

  11. வணக்கம்!

    தமிழ்மணம் 8

    தீமை அழிகின்ற நாளெல்லாம் நற்றிருநாள்!
    ஆமை எனவடங்கி உள்ளாய்ந்தேன்! - ஊமையாய்
    வாழ்வதோ வாயிருந்தும்! நம்பகைவா் கால்களில்
    வீழ்வதோ நாளும் விரைந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  12. நல்ல கவி தந்துள்ளீர்கள் . தீமைகள் விலகிட வேண்டுவோம்.

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!.

    பதிலளிநீக்கு
  13. அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. நம்முள் இருக்கும் நரகாசுரன்களை அழிப்போம்.
    தீபாவளி வாழ்த்துகள் அருணா செல்வம்!

    பதிலளிநீக்கு
  15. உண்மைதான் அருணா...! இன்னும் அழிக்கப்பட வேண்டிய அசுரன்கள் நிறைய உள்ளனர்! ஒவ்வொரு அசுரன் அழியும் நாளும் தீபாவளிதான்! நண்பர் செ.பி. சொன்ன மாதிரி நம்முள் இருக்கும் தீய எண்ணங்களாகிய அசுரர்களை அழித்தால் அதுவும் தீபாவளியே! உலகம் கொண்டாடும் இந்த பொதுவான தீபாவளித் திருநாளில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  16. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  17. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அருணா!

    பதிலளிநீக்கு
  18. சிறந்த பதிவிது.
    தங்களுக்குத் தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகட்டும்!

    பதிலளிநீக்கு
  19. சிறப்புக் கவிதை வெகு வெகு சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு