வெள்ளி, 11 அக்டோபர், 2013

சோலையின் ஏக்கம்!!

மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
   மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்,
   தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்
   வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
   மலர்ப்பாதம் தன்மீது படுமா என்றே!!

அருணா செல்வம்
11.10.2013

26 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்

கவிதையின் வரிகள் அற்புதம் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

என் வலைப்பக்கம் என் பதிவு....வாருங்கள்....வாருங்கள்
http://2008rupan.wordpress.com/2013/10/11/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0/

ராஜி சொன்னது…

இப்பலாம் அவளின் மலர்ப்பாதம் ஷாப்பிங்க் மால்லயும், சினிமா தியேட்டர்லயும்தான் படுது அருணா!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

வாழ்த்துக்கள்...

இளமதி சொன்னது…

மீனும் மானும் தேனும் வானும் போட்டியிட்டுப் பொறாமைகொள்ளும் அழகிதான் படத்தில்..:)

அருமை! அழகிய எண்சீர் விருத்தம்!

வாழ்த்துகள் தோழி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான கவிதை
படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 5

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அழகிய வரிகள்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான கவிதை. படமும் போட்டி போடுகிறது.....

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமை.
வாழ்த்துக்கள்.

Seeni சொன்னது…

வாசித்தேன்!
ஏனோ!
வாய் இனித்தது..!

அருமை...

நம்பள்கி சொன்னது…

படம் மற்றும் கவிதை பிரமாதம்!

Plus 1 வோட்டு போட்டுட்டேன்!

பெயரில்லா சொன்னது…

கவிவாணி என்று பட்டமளிக்கலாம் போல உங்களுக்கு..அருமை...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

//தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்,
தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!// ரசித்தேன்.
அருமையா கவிதை!
+1 செய்யாமல் இருக்க முடியுமா..

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

அதனாலதாங்க “சோலை ஏங்குகிறது“ என்று சொன்னேன்.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சௌந்தர்.

அருணா செல்வம் சொன்னது…

படத்தைப் பார்த்துவிட்டு தான் கவிதை எழுதினேன்.
ஆனால் படத்தில் அவள் எதையோ பார்த்து ஏங்குவது போல் இருந்தாலும் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று இப்படி மாற்றி எழுதினேன்.
நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

ஐ..... அப்படியா...?
இனிமேல் சர்க்கரை வியாதி உள்ளவர்களை என் கவிதையைப் படித்துக்கொண்டே சாப்பிட சொல்லாமா...?

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நம்பள்கி... எனக்கு ஓட்டு போட்டிங்களா....? சூப்பர்!

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

(கவிவாணி.அருணா செல்வம் - ஹா ஹா ஹா...

நீங்கள் பட்டம் கொடுப்பதற்கு முன்பே சொல்லிப் பார்த்தேன். நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் கொஞ்சம் அதிகப்படியாக இருப்பது போல் தெரிகிறது.)

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.