புதன், 15 ஆகஸ்ட், 2012

தேவதை போனது எங்கே? (கவிதை)




இருவிழி போடும் ஆட்டம்!
    இளமையை என்னுள் ஊட்டும்!
கருவிழி ஒளியின் பாய்ச்சல்
    கவியெனைக் கிழித்துப் போடும்!
திருவிழி அமுதம் உண்ணத்
    திரண்டிடும் ஆசை கோடி!
அரும்விழி வலையில் சிக்க
    ஆழ்ந்தவன் தேடு கின்றேன்!

பூவகை யாவும் தோற்கும்
    பொன்மலர் முகத்தின் முன்னே!
பாவகை முந்தி வந்து
   பாடவே என்னைத் தூண்டும்!
மூவகைக் கனியின் தேனை
    மொழிந்திடும் சொற்கள் ஊட்டும்!
தேவதை போன தெங்கே?
    தென்றலே! தேடிச் செல்வாய்!



கவிமனத்தில் “போகப் போகத் தெரியும்“ பாகம்- 21
தட்டுங்கள்  http://kavimanam.blogspot.fr/

அருணா செல்வம்

25 கருத்துகள்:

  1. பாவகை முந்தி வந்து
    பாடவே என்னைத் தூண்டும்!
    மூவகைக் கனியின் தேனை
    மொழிந்திடும் சொற்கள் ஊட்டும்!//

    முக்கனிச் சுவையைச் சுவைத்தேன்
    மனம் தொட்ட பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அழகான வரிகள்... பாராட்டுக்கள்...

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றிங்க தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தென்றல் கவிதையோடு துர்து சொல்லும் இல்லையா சசிகலா.
      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. அழகான கவிதை......
    தென்றலின் உரிமையாளரும் தென்றலை தொட்டுச் சென்றுள்ளார் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிங்க சிட்டுக்குருவி்

      உரிமையுள்ளவரைத் தான் சரியாக துர்து
      அனுப்பி இருக்கிறேன்.
      அவர்களே வந்து சொன்னப்பிறகு தான்
      எனக்குப் புரிந்தது.

      நீக்கு
  5. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    இன்று என் தளத்தில்
    பிரபு தேவாவின் புதுக்காதலியும் நயனின் சீண்டலும்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_16.html
    நான் ரசித்த சிரிப்புக்கள்! 17
    http://thalirssb.blogspot.in/2012/08/17.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றிங்க சுரேஷ் ஐயா.

      நீக்கு
  6. படங்கள் எல்லாம் எங்க புடிக்கீங்க பாஸ் கலக்கல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா படங்களையும் இணையத்திலிருந்து தான் சுட்டேன் பாஸ்.

      என்ன.. பாடலைச் சீக்கிரத்தில் எழுதிவிடுவேன். அதற்கான படத்தைப் புடிக்கத்தான் நேரம் எடுக்கவேண்டியுள்ளது....

      கோகுளில் போய் ”படங்கள்” என்ற தலைப்புலேயேத் தேடுங்கள்.
      (யார்யாரெல்லாம் என்னைத் திட்டுகிறார்களோ....! கூட எனக்கு நீங்களும் இருந்தால் பாதி திட்டு உங்களுக்கும் கிடைக்கும்... எனக்கும் கூட நம்ப பாஸ் துணைக்கு இருக்கிறார் என்ற தைரியமும் வந்துவிடும். தொடருங்கள் பாஸ்.)

      நீக்கு
  7. ''...திருவிழி அமுதம் உண்ணத்
    திரண்டிடும் ஆசை கோடி!
    அரும்விழி வலையில் சிக்க
    ஆழ்ந்தவன் தேடு கின்றேன்!....
    மூவகைக் கனியின் தேனை
    மொழிந்திடும் சொற்கள் ஊட்டும்!
    தேவதை போன தெங்கே?
    தென்றலே! தேடிச் செல்வாய்!...
    அருமையான வரிகள். ரசித்தேன்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க கோவைக்கவி அவர்களே!

      நீக்கு
  8. அருமையான வரிகள். அழகாய் எழுதியுள்ளீர்கள். படம் அருமையாக உள்ளது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றிங்க தோழி.

      நீக்கு
  9. தேவதையைத் தேடி தென்றல் தூதோ....ம்ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      ”வானம் வெளுத்த பின்னால்” மழைக்கூட வராது.
      அதனால் தான் தென்றலை அனுப்பினேன்.

      நன்றிங்க ஹேமா.

      நீக்கு
  10. வணக்கம்
    உங்கள் மின்வலையில் மரபு மணக்கிறது.
    நான் மரபு இலக்கணம் படித்ததோடு சரி
    பின் மழைக்குக் கூட மரபுச்சோலையில் ஒதுங்கியதில்லை!

    உங்கள் கவிதைகளைப் படித்தபின்
    மரபில் பாட ஆசைவருகிறது!

    தேவதை போன தேங்கே
    தேடியே புலவன் நெஞ்சம்
    போவதை கண்டேன்! கவியில்
    பொங்கிய அமுதை உண்டேன்!
    பாவதை என்றன் பாட்டில்
    பற்றிய இருப்பின் ஐயா
    நாவதை செய்ய வேண்டாம்!
    நன்றாக திருத்தம் செய்கவே!

    தமிழ்ச்செல்வன் பிரான்சு
    http://tamilselvane.blogspot.fr
    tamilselvane1990@gmail.com

    பதிலளிநீக்கு
  11. தங்களின் முதல் வருகைக்கும்
    வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க தமிழ்ச்செல்வன் ஐயா.

    (போவதைக் கண்டேன். மற்றும் கடைசி வரியைத் திருத்தம் செய்க.)

    பதிலளிநீக்கு