(சைவம் மட்டும் உண்பவர்கள் தயவுசெய்து படத்தைப் பார்க்காமல் பதிவை மட்டும் சுவையுங்கள். நன்றி)
நட்புறவுகளுக்கு வணக்கம்.
என்
ஆசிரியர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் ஒருநாள் எண்சீர் விருத்தத்தின் இலக்கணத்தைத்
தொலைபேசியில் சொல்லிக் கொடுத்துவிட்டு, “இந்த இலக்கணப்படி நாளை ஒரு பாடலை எழுதி (கணிணியில்)
அனுப்பிவிடு“ என்றார்.
ஆனால் நான்
எழுத மறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. அவரே என்னைத் தொலைபேசியில்
அழைத்துப் “பாட்டை எழுதிவிட்டாயா...?“ என்று கேட்டார்.
நான், “ஐயோ... மறந்துவிட்டேன்.
இன்றிரவுக்குள் எழுதி அனுப்பி விடுகிறேன்“ என்று சொல்லிவிட்டு
சமைக்கச் சென்றேன்.
அன்று, என்ன கருத்தில் கவிதை எழுதுவது? என்று சிந்தித்தபடி கோழி வறுவல்
சமைத்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது தான் இந்த ஞாபகம்.
இந்த கோழி
வறுவலையே ஒரு பாடலாக எழுதினால் என்ன என்று தோன்றியது.
சமைத்து
முடித்துவிட்டு இந்தப்பாடலைக் கடகடவென்று கணிணியில் அடித்து அனுப்பிவிட்டேன்.
பிறகு தான்
யோசித்தேன். “நாம்
செய்தது தவறோ“ என்று.
உடனே “கவிஞர் அவர்களுக்கு... நீங்கள்
கேட்டதும் அவசரத்தில் இப்படி ஒரு பாடலை எழுதிவிட்டேன். தவறு என்றால் மன்னிக்கவும்.
இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தாலும் பரவாயில்லை. ஆனால் தயவு செய்து இதை
யாரிடமும் சொல்லி விடாதீர்கள்“ என்று இன்னொரு மின்அஞ்சலை உடனே அனுப்பினேன்.
காத்திருந்தேன். அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை. மறுநாள் என்
படைப்பைப் பாராட்டி பதில் அனுப்பினார். ஆனால் இதை என்னைத் தெரிந்த அனைவரிடமும்
சொல்லிவிட்டார். எனக்கு அப்பொழுது மிகவும் வெட்கமாக இருந்தது.
பிறகு
அவர், “அருணா... பழைய சமையல் குறிப்புகள் அனைத்தும் கவிதைகளில் தான் எழுதப்பட்டு
உள்ளது. தற்பொழுது அப்படி யாரும் எழுதுவதில்லை. நீயே யாரும் சொல்லாமல் எழுதி
இருக்கிறாய். உண்மையில் உண்னை பாராட்டுகிறேன்“ என்று சொன்ன பிறகு தான் என் மனம்
ஆறுதல் அடைந்தது.
நான் எழுதிய முதல் எண்சீர் விருத்தம் இதுதான்.
கோழி வறுவல்!
தொட்டவுடன் சுடுமளவில் எண்ணெய் வைத்துத்
தோலெடுத்த
கோழியினை வதக்கி விட்டுப்
பட்டையையும் கிராம்பையும் பதமாய்த் தட்டிப்
பட்டுப்போல் அரைத்துவைத்த இஞ்சி பூண்டும்
வெட்டிவைத்த வெங்காயம் மிளகாய் போட்டு
வேண்டுகின்ற மசாலாத்தூள் உப்பும் சேர்த்துச்
சொட்டுத்தண்ணீர் இல்லாமல் வறுத்து வைத்தால்
சோறுவேண்டாம் என்றவனும் திரும்பிப் பார்ப்பான்!
(காய் – காய் – மா – தேமா - காய் – காய் – மா – தேமா’
என்ற இலக்கணத்தில் எழுதினேன்.)
அருணா செல்வம்.
super kavithai..thx
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி.
படத்தை முதலில் போட்டு விட்டு பார்க்கக்கூடாது என்றால் எப்படி?
பதிலளிநீக்கு+1
நானும் என் சீர் விருத்தம் எழுதப் போகிறேன்--உங்கள் கவிதைய ஒரு மாடலாக வைத்துக்கொண்டு...வந்து ரசிக்கவும்.
எழுதுங்கள் நம்பள்கி. நிச்சயமாக வந்து ரசிப்பேன்.
நீக்குமிக்க நன்றி நம்பள்கி.
கோழி வறுப்பதற்கு எண்சீர் விருத்தமா? பலே அருணா நடத்துங்கள்.
பதிலளிநீக்குஅப்படியே பாடிக்கொண்டே சமைத்துவிட்டேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.
நீங்க பாடிக்கிட்டே சமைச்சிட்டீங்க சரி... அத சாப்பிட்ட வயிற்றின் ' பாட்டை' த்தான் விசாரிக்கோனும்...... ஹா... ஹா...! ஹப்பா... நான் மாட்டலை...!
நீக்குசுவையாய் இருக்கிறது - கவிதையைச் சொன்னேன். :)))
பதிலளிநீக்குஇங்கே கவிதையை மட்டும் தான் சுவைக்க முடியும்.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம்.
எண்சீர் என்ற உங்க பதிவை பார்த்ததும் நீங்க என்னமோ எங்க வீட்டிற்கு சீர்தான் எடுத்து கொண்டு வருகிறீர்களோ என்று நினைத்தேன்,,,,கடைசியில இப்படி ஒரு பதிவை போட்டு ஏமாத்திட்டீங்க...
பதிலளிநீக்குஉங்களுக்கு எண்பது வயதாகும் பொழுது சொல்லுங்கள். நான் எண்சீரை என்சீராகக் கொண்டுவந்து சிறப்பு செய்கிறேன்.
நீக்குஎண் சீர் கவிதை எழுதியது வேண்டுமானால் நீங்களாக இருக்கலாம் ஆனால் அந்த சிக்கன் பண்ணியது நீங்களாக இருக்க முடியாது..
பதிலளிநீக்குநான் தான் செய்தேன் என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்...?
நீக்குஅதனால் நீங்கள் சொன்னது போலவே இருந்துவிட்டு போகட்டும்.
நானுந்தான் உங்களைப் போல தமிழ் இலக்கணம் படித்தேன் அதில் என்ன கூத்துனா நான் ப்ள்ஸ் டூவில் அட்வான்ஸ் தமிழ் எடுத்து படித்தேன் ஆனா இப்ப ஒண்ணூமே ஞாபம் இல்லை.. ஹீஹீஹீ
பதிலளிநீக்குநானும் ப்ளஸ் டூவில் அட்வான்ஸ் தமிழ் எடுத்திருந்தால் உங்களைப் போல் மறந்துவிட்டு தான் இருப்பேன்.
நீக்குஆமாம் உங்களு வயசு ஆயிடுத்து அதனாலதான் உங்களுக்கு மறந்து போயிருக்குமுன்னு நீங்க சொல்ல வரது காதில் விழுது... ஆனா உங்களுக்கு வயசு ஆனாலும் மறக்கவில்லை பாருங்க அதுதான் ஆச்சிரியமா இருக்கு.
பதிலளிநீக்குஒரு வேளை பூரிக்கட்டையால் அடிக்கடி அடி வாங்கியதால் எனக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்குமோ?????
எனக்கு உங்க வயசு வந்தால் நானும் மறந்துவிடுவேனோ என்னவோ...
நீக்குதங்களின் வருகைக்கும் சிரிக்க வைக்கும் பின்னொட்டங்களுக்கும் மிக்க நன்றி “உண்மைகள்“
வறுத்திட்ட கோழி விருத்தப்பா வாக
பதிலளிநீக்குபொறுப்பொடு தேர்ந்த படைப்பு!
காய் காய் மா தேமா எண்சீர் விருத்தத்தில் சமையல் குறிப்பும் தரலாம் என்று உங்கள் கவித்துவத்தைக் கண்டு வியந்தேன் தோழி!
என்ன லாவகமாக உங்களிடம் சீர்கள் வரிசையாக வந்து விழுகின்றன...
வித்தகிதான் வேறிலை உரைப்பதற்கு...
வாழ்த்துக்கள் தோழி!
தங்களின் வருகைக்கும் ஊக்கம் தரும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
அசைவக்கவிதை,
பதிலளிநீக்குசைவக்காரர்கள் படித்திருந்தால்....
நீக்குநன்றி விமலன் ஐயா.
கவிதை கவிதை!
பதிலளிநீக்குருசித்தேன் கவிதையை!
படம் பார்க்கவே இல்லை!
நீங்களுமா....?
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
arumai..!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சீனி ஐயா.
கோழிக்கு எண்சீர் விருத்தமா?
பதிலளிநீக்குஅது சரி.
கவிதை நல்லாயிருக்கு.
கோழிக்குக் கிடையாதுங்க.
நீக்குகோழி வறுவலுக்குத்தான் எண்சீர் விருத்தம்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி குமார்.
அசத்தல்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
முதல் வகுப்பில் படிக்கும்போது ஆசிரியர் ஒரு பாடல் சொல்லிக்கொடுத்தது இன்றும் நினைவிலிருக்கிறது.
பதிலளிநீக்குபரங்கிக்காயைப் பறித்து பட்டையெல்லாம் சீவி
பொடிப்பொடியாய் நறுக்கி உப்பு காரம் போட்டு
எண்ணெய் விட்டுத் தாளித்து இன்பமாகத் தின்போம்.
இன்னும் கொஞ்சம் கேட்போம் தந்தால் தின்போம்
தராவிட்டால் அழுவோம்.
எதையும் பாடல் வடிவில் சொல்லித்தரும்போது மனத்தில் விரைவாகப் பதியும். இங்கு விருத்தப்பாவை சமையல் முறையாய் சொல்லி மனம் பதியவைத்தமை சிறப்பு. பாராட்டுகள் அருணா செல்வம்.
மிக மிக அருமை
பதிலளிநீக்குகோழி வறுவலைப் போலவே
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
நான் படத்தை பார்க்கலைப்பா.... ருசித்ததில்லைனாலும் கோழி வறுவலை சீரா வறுத்திருக்கீங்கன்னு ரசித்து பார்க்கும்(படிக்கும்) போது தெரியுது... எனக்கு வெஜ் கவிதைதான் வேணும்... உப்புமா, தோசை ன்னு எனக்காக நாலு வரி எடுத்து விடுங்கப்பா....
பதிலளிநீக்குசைவம் என்றாலும் அசைவம் பற்றிய கவிதையை ரசித்தேன்
பதிலளிநீக்கு[[[நம்பள்கி
பதிலளிநீக்குபடத்தை முதலில் போட்டு விட்டு பார்க்கக்கூடாது என்றால் எப்படி?
+1
நானும் என் சீர் விருத்தம் எழுதப் போகிறேன்--உங்கள் கவிதைய ஒரு மாடலாக வைத்துக்கொண்டு...வந்து ரசிக்கவும்.
அருணா செல்வம்13 December 2013 15:22
எழுதுங்கள் நம்பள்கி. நிச்சயமாக வந்து ரசிப்பேன்.
மிக்க நன்றி நம்பள்கி.]]
நன்றி அருணா!
நான் என் பதிவைப் போட்டபிறகு தான் நீங்கள் "எழுதுங்கள் நிச்சயமாக வந்து ரசிப்பேன்" என்று சபோட்ட இந்த பின்னூட்டத்தைப் பார்த்தேன்.
மறுபடியும் நன்றி!
கவிதையை மட்டுமே சுவைக்க முடியும் (அப்) பாவி நான் அருணா!
பதிலளிநீக்குஅருமை....
பதிலளிநீக்குகவிதை அருமை..படங்கள் நாக்கில் எச்சில் ஊற வைக்கிறது..
பதிலளிநீக்குrevmuthal.com
என்னமா வெளுத்துவாங்குறீங்க!!!!!!
பதிலளிநீக்குதமிழ் மீது நீங்கள் கொண்டுள்ள பற்று என்னையும் பெருமை, மகிழ்வும் கொண்டிட செய்கிறது...