புதன், 16 அக்டோபர், 2013

உங்கள் மனைவி போல! (சிரிக்க-சிந்திக்க)
டாக்சியின் மீட்டர்! (நகைச்சுவை)

   ஓர் ஜப்பானியர் இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்திருந்த போது ஒரு டாக்சியில் பயணம் செய்தார்.
   டாக்சியை மெதுவாக ஓட்டிச் சென்றார் டிரைவர். அதைக் கண்ட ஜப்பானியர், “என்ன டிரைவர் டாக்சி இவ்வளவு மெதுவாகச் செல்கிறது? எங்கள் ஜப்பானில் எல்லாம் எவ்வளவு வேகமாகச் செல்லும் தெரியுமா? பறக்கும்!“ என்றார்.
   டாக்சி டிரைவர் எதுவும் பேசாமல் கரை ஓட்டினார்.
   பயணம் முடிந்து டாக்சியை விட்டு இறங்கிய ஜப்பானியப் பயணி அதிர்ந்தார்.
   மீட்டர் 1000 ரூபாய் காட்டியது.
   “என்ன டிரைவர் இது? மீட்டர் 1000 ரூபாய் காட்டுகிறதே!“ என்று ஆச்சர்யமாகக் கேட்டார் ஜப்பானியர்.
   “இந்த மீட்டர் உங்கள் ஜப்பானில் செய்தது சார்!“ என்று அமைதியுடன் பதிலளித்தார் டாக்சி டிரைவர்.

-----------------------------------------------------------
உங்கள் மனைவி போல!  (நகைச்சுவை)


   ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்கு முன், ஒரு நாள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
   பெட்டியில் அவருக்கு அடுத்து ஓர் இளம்பெண் அமர்ந்திருந்தாள்.
   ஆப்ரஹாம் லிங்களுக்குப் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆகவே அவர் புகைப்பிடிக்க எண்ணினார்.
   அவர் அந்த இளம் பெண்ணைப் பார்த்து, “பெண்ணே... நான் புகைபிடிக்க விரும்புகிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே?“ என்று மரியாதையுடன் கேட்டார்.
   அதற்கு அந்த இளம் பெண், “வீட்டில் உங்கள் மனைவியின் முன்பு எவ்வளவு அடக்கமாகப் புகைப்பிடிப்பீர்களோ அந்த மாதிரி புகை பிடியுங்கள்!“ என்று கூறினாள்.
   “என் மனைவியின் முன்னால் நான் புகை பிடிப்பதில்லை!“ என்றார் ஆப்ரஹாம் லிங்கன்.
   “அப்படியா...! தயவு செய்து ரெயிலை விட்டு இறங்கும் வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்!“ என்றாள் அவள்.
   புகைபிடிக்க வேண்டாம் என்பதை அவள் இவ்வளவு நாசூக்காகச் சொல்லுவாள் என்று எதிர்ப்பார்க்காத ஆப்ரஹாம் லிங்கன், புகைப்பிடிக்காமல் பயண இறுதிவரை நாகரீகமாகவே நடந்து கொண்டார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

32 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான நகைச்சுவைத் துணுக்கு
லிங்கன் அவர்கள் குறித்த தகவல்
இதுவரை அறியாதது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 2

கும்மாச்சி சொன்னது…

இரண்டு துணுக்குகளும் சூப்பர், பகிர்விற்கு நன்றி அருணா.

நம்பள்கி சொன்னது…

[[“அப்படியா...! தயவு செய்து ரெயிலை விட்டு இறங்கும் வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்!“ என்றாள் அவள்.]]

வெள்ளைக்காரிகள் நம்ம அரசியல்வியாதிகள் கிட்டே இப்படி சொன்னால்..!?

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான துணுக்குகள்...
பகிர்வுக்கு நன்றி சகோதரி.

Unknown சொன்னது…

நம்மள பார்த்து இப்படி ஒரு figure என்னைய மனைவியா நினச்சுகங்கன்னு சொல்ல மாட்டேங்குதே ... லிங்கனுக்கு மச்சம் ..

Unknown சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
Seeni சொன்னது…

mmm...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

நகைச்சுவை மனசுக்கு விருந்தாக அமைந்தள்ளது பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... கலக்கல் நகைச்சுவைகள்... நன்றி...

Unknown சொன்னது…

அருமையான பதிவுகள். பகிர்வுக்கு நன்றி

ராஜி சொன்னது…

ஜப்பான் தயாரிப்பு செம! லிங்கன் பற்றிய துணுக்கும் நச்!

Unknown சொன்னது…

சிரிக்கவும் செய்தேன்! சிந்திக்கவும் செய்தேன்!

கவியாழி சொன்னது…

நகைச்சுவை அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சுவையான துணுக்குகள்! நன்றி!

Jayadev Das சொன்னது…

\\“அப்படியா...! தயவு செய்து ரெயிலை விட்டு இறங்கும் வரை என்னை உங்கள் மனைவியாக நினைத்துக் கொள்ளுங்கள்!“ என்றாள் அவள்.\\ இதுக்கு பேரு நாசூக்கா சொல்வதா? ஆங்கிலத்தில் நாசூக்க இருக்கலாம் தமிழில் விவகாரமா அர்த்தம் பண்ணிக்குவாங்க. It is often difficult to translate and also keep the essence intact!!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

ஆப்ரஹான் லிங்கனும் இன்றைய நம் அரசியல் வாதிகளும் ஒன்னா?

இப்படியெல்லாம் சொல்லி காமெடி பண்ணாதீங்க நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சகோ.

அருணா செல்வம் சொன்னது…

ஆப்ரஹாம் லிங்கனுக்கு மச்சம் தான்....

அதனால் தான் இன்று வரை நாம் அவரைப் பேசுகிறோம்.
நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

அருணா செல்வம் சொன்னது…

உண்மை தாங்க.
ஆனால் இது அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி.

நம் ஆளுங்களுக்குச் சரியாகவே சொன்னால் கூட
தப்பாகத்தான் புரிந்து கொள்வார்கள் என்பது நமக்குத் தெரிந்தது தானே.

நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை காட்டத்தான்
“சிரிக்க - சிந்திக்க“ என்று தலைப்பிலேயே சொல்லி விட்டேன்.

நன்றி ஜெயதேவ் ஐயா.

மகேந்திரன் சொன்னது…

சுவையான துணுக்குகள் சகோதரி...
சுவையுடன் சிந்தையையும் தூண்டுகிறது...