வியாழன், 24 அக்டோபர், 2013

தீபாவளி வேண்டும்!!மேல் மட்ட மக்கள்!!

வருடம் முழுதும் செய்த பாவத்தை
ஒருநாள் வந்திடும் கங்கையில்
குளித்துக் கழுவிவிட்டு,
சூரியோதயம் காணாத கண்களால்
சூரிய நாராயணுக்காகப் படைத்துப்
பணம் இருக்கும் பகட்டைப்
பலகாரத்தில் காண்பித்து,
வயிறார உண்ண முடியாமல்
வந்திருக்கும் நோயிக்குப் பயந்து,
பிச்சையிட வேண்டுமானாலும்
பிறரைக் கூட்டிக் காண்பித்துப்,
பகவானைக் கண்டிட
பகட்டு நகையுடையுடன்
மிடுக்காய்ச் சென்றிடுவார்...
மிகையானவருக்குத் தீபாவளி!!

நடுத்தர மக்கள்!!

கௌரவம் பார்த்துக்
குடும்பம் நடத்திக்
கரன்சியைக் கடவுளாக்கிக்
காய்ந்த வயிற்றைத் தடவி
பக்கத்து வீட்டுக்காரனை விட
பகட்டாகக் காட்டிக்கொண்டு,
வருடத்தில் ஒருமுறை
வந்திடும் போனஸ் பணத்திற்கு
ஓராயிரம் பொருள் வாங்க
கற்பனை செய்து கொண்டு,
ஒன்றும் வாங்க முடியாத
விலைவாசி உயர்வைக் கண்டு,
ஆசையாக காத்திருக்கும்
பிள்ளைக்குக் கூட கொடுக்காமல்
அடுத்த வீட்டு பலகாரத்தைப்
பெருமையுடன் இன்னொரு வீட்டுக்குக்
கொடுத்தனுப்பி விட்டு,
“யார் கொளுத்தினாலும்
பட்டாசு கரியாகும்“ தானென்று
உயர்வான தத்துவத்துடன்
அடுத்தவர் வெடியைக் காண்பித்தே
ஆறுதல் அடைந்து,
அடுத்த தீபாவளியைச்
சிறப்பாகக் கொண்டாடலாம் என்ற
சிந்தனையுடன் போகும் தீபாவளி!!

கீழ் மட்ட மக்கள்!!

வருடத்தில் ஒருநாளாவது
புத்தாடை அணிந்து,
புதுப்படம் பார்த்துவிட
கையிருப்பைக் கரைத்து,
மேலும் கடன்வாங்கி
காய்ச்சியதைக் குடித்துவிட்டு,
கறிமீன் ருசிபார்த்து
“நரகாசுரனா...? யார் அவன்?
அவனை அழிக்க
அவதாரம் எதற்கு?
என்னெதிரில் வரச்சொல் அவனை
ரெண்டுல ஒன்னு பாக்குறேன்...“ என்றும்,
“இன்னா தைரியம் இருந்தா
மக்கள கொடும படுத்தினான்....
.......! ஏய்... நரகாசுரா...
என் எதுருல வாடா...“
கட்டியிருந்த புது வேட்டி
கழண்டு விழுவதையும்
இலட்சியப் படுத்தாமல்.....

இவனுக்காகவே
“தீபாவளி“ என்று ஒருநாள்
திருநாளாய் வரவே வேண்டும்!!

அருணா செல்வம்
07.11.2010


(“தீபாவளி திருநாள் அவசியம் தானா?“ என்று ஒரு நண்பர் கேட்டதற்கு, பதிலாக நான் எழுதிய புதுக்கவிதை இது. நன்றி)

34 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்... "அவசியம் தானா...?" வினவிய நண்பருக்கு நன்றி...

வாழ்த்துக்கள் சகோதரி...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மூன்று கோணங்களில் தீபாவளி - ரசித்தேன்....

த.ம. 2

ஜீவா சொன்னது…

ம்ம்ம்ம் நாட்டு நடப்ப புட்டு புட்டு வச்சுட்டீங்க

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

மூன்றுநிலையினரின் தீபாவளியை விவரித்தது அருமை.

நம்பள்கி சொன்னது…

வேண்டும்...வேண்டும்...
வேண்டும்...உங்கள் கவிதை!

பால கணேஷ் சொன்னது…

மூன்று நிலை மக்களின் தீபாவளிகளையும் வசீகரமான வரிகளில் அழகாய்ச் சொல்லி விட்டீர்கள்! கவிதையில் நிதர்சனம்!

இளமதி சொன்னது…

எத்தனை இயல்பாய் அத்தனை அழகாய்
ஒரு ஓவியமாய்க் கவிக் காவியமாய்த்
தீபாவளியைக் கொண்டாடும் விதம் ஒவ்வொருவரும்
கொண்டாடும் வகை பிரித்துப் பாடினீர்கள்!..

உண்மையை மிக அழகாக சிறப்பித்துச் சொன்னீர்கள்!
மிகவும் ரசித்தேன்! வாழ்த்துக்கள் தோழி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

தீபாவளியை பல்வேறு நிலைகளில்
உள்ளவர்களில் நிலையில் நின்று
எழுதிய கவிதை அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 8

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
3வகையான தீபாளி கொண்டாடிய நினைவு ...பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

'பரிவை' சே.குமார் சொன்னது…

அவசியம்தானா அவசியம் படிக்க வேண்டிய கவிதை...

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ
http://blogintamil.blogspot.com/2013/10/blog-post_26.html?showComment=1382753575979#c6458204213020626390

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Unknown சொன்னது…

"வருடத்தில் ஒருநாளாவது புத்தாடை அணிந்து,
புதுப்படம் பார்த்துவிட கையிருப்பைக் கரைத்து,
மேலும் கடன்வாங்கி"

நடுத்தர மக்களுக்குமே இப்படித்தான் தீபாவளி வந்து செல்கிறது.
மிக அருமையாக 3 வித தீபாவளி கொண்டாட்டத்தை படம் பித்துக் காண்பித்துவிட்டீர்கள்.

பெயரில்லா சொன்னது…

ஒரு காரணம் இருந்தால்தானே ஒரு காரியம் பிறக்கும்...தீபாவளி எதற்கு என்று கேள்வி கேட்ட நண்பருக்கு நன்றி..அதனால்தானே எங்களுக்கு ஒரு அழகான கவிதை கிடைத்தது...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

கொள்ளி நெருப்பாய்க் கொளுத்தும் கொடுமையினை
அள்ளி உரைத்தாய் அறைந்து!

கவியாழி சொன்னது…

ஏழைகளும் இன்பமாய் இருக்க தீபாவளி வேண்டும்

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி காயத்ரி தேவி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

அட... நீங்கள் கூட கவிதையை ரசிக்க ஆரம்பித்து விட்டீர்களா?

தமிழ் எப்படியெல்லாம் மனிதர்களை ஈர்க்கிறது பாருங்கள்!!!

தங்களின் வருகைக்கும் ரசிப்பிற்கும்
மிக்க நன்றி நம்பள்கி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

பார்த்துவிட்டேன்.
நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

பார்த்து விட்டேன்.
தகவலுக்கு நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

“காரணம் இருந்தால் தான் காரியம் பிறக்கும்“
உண்மை தான் ஐயா.
இல்லையென்றால் இப்படி ஒரு கவிதையை எழுதும் எண்ணமே எனக்கு வந்திருக்காது.

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

வணக்கம் கவிஞர்.

அள்ளி உரைத்த அருங்கவிக்கு நன்றியினைத்
துள்ளி உரைப்பேன் தொடர்ந்து!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.