செவ்வாய், 21 ஜனவரி, 2014

அழகிய குட்டிகளின் படங்கள்!!


    உலகிலுள்ள எல்லா நாட்டுக்குட்டிகளுமே அழகுகள் தான்!! பார்த்தவுடனே கையில் துர்க்கிவைத்துக் கொஞ்ச வேண்டும் போல்தான் இருக்கிறது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.


நாய்க் குட்டிகள்

பன்றிக் குட்டி

மான் குட்டி

சிங்கக் குட்டி



சிறுத்தைக் குட்டிகள்

யானைக் குட்டி

முயல் குட்டி

குரங்குக் குட்டி

குதிரைக் குட்டி

மனித குரங்குக் குட்டி



முள்ளம் பன்றிக் குட்டிகள்



எலிக் குட்டிகள்

புனைக் குட்டி

நீர் யானைக் குட்டி

ஒட்டகக் குட்டி

ஒட்டச்சிவிங்கிக் குட்டி

பச்சோந்திக் குட்டி

பாண்டா குட்டி

வரிகுதிரைக் குட்டி

பனி கரடிக் குட்டி


    பார்த்தீர்களா குட்டிகள் எல்லாம் எவ்வளவு அழகு என்று... எல்லாவற்றையும் இணையத்திலிருந்து துர்க்கிக் கொண்டு வந்துவிட்டேன்.

பார்த்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

வெள்ளி, 17 ஜனவரி, 2014

இது யாருடையது?



   
  டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் ஒரு சமயம் பாட்னாவிலிருந்து தனது ஊருக்குச் செல்வதற்காக விசைப் படகில் ஏறி கங்கை நதியில் பயணம் செய்தார்.
   படகோட்டி படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
   இராஜேந்திரப் பிரசாத்திற்கு எதிரே அமர்ந்திருந்த ஓர் இளைஞன் ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான்.
   அவன் வெளியிட்ட புகையின் நெடி இராஜேந்திரப் பிரசாத்தை மிகவும் வருத்தியது.
   அதைப் பொறுக்க முடியாத அவர் அந்த இளைஞனைப் பார்த்து, “தம்பி... அந்த சிகரெட் உன்னுடையது தானே...?“ என்று கேட்டார்.
   “ஆமாம்“ என்றான் அந்த இளைஞன்.
   “அப்படியென்றால் இந்த புகை யாருடையது...?“
   இளைஞன் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.
   “சிகரெட் உன்னுடையது என்றால் இந்தப் புகையும் உன்னுடையதாகத் தானே இருக்க வேண்டும். அதை ஏன் வெளியே ஊதி என் போன்றவர்களைக் கஷ்டப்படுத்துகிறாய்?“ என்று அமைதியாக கேட்டார் இராஜேந்திர பிரசாத்.
   அவரது பேச்சிலிருந்த நியாயத்தை உணர்ந்த அந்த இளைஞன், “ஐயா... என்னை மன்னித்து விடுங்கள்“ என்று கூறிவிட்டு தன்னிடமிருந்த சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் நதிக்குள் வீசி எறிந்தான்.
   இராஜேந்திர பிரசாத் மகிழ்ச்சியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

புதன், 15 ஜனவரி, 2014

பொங்கல் திருநாள் வாழ்த்து



பொங்க வேண்டும்!!


தங்கத் தமிழைத் தலைசூடித்
    தழைக்கும் வாழ்வைப் பெற்றிடலாம்!
சிங்கத் தமிழர் நாமென்றே
   சிலிர்க்கும் உள்ளம் உற்றிடலாம்!
வங்கக் கடலின் வளத்தைப்போல்
   வற்றா இன்பம் ஏற்றிடலாம்!
பொங்கும் இந்த நன்னாளில்
   புதுமைப் பொங்கல் பொங்கிடலாம்!

கட்டுக் கடங்கா ஆசைகளைக்
   காலுக் கடியில் தாம்போட்டுச்
சிட்டுக் குருவி போல்நாமும்
   சிறகு விரித்துப் பறந்திடலாம்!
விட்டுக் கொடுத்து வாழ்வதைநாம்
   விரும்பி மனத்தில் ஏற்பதனால்
முட்டும் துன்பம் ஏதுமின்றி
   முத்தாய்ப் பொங்கல் பொங்கிடலாம்!

நல்லோர் மொழியை நம்மொழியில்
   நன்றே அழகாய் மாற்றிடலாம்!
பல்லோர் கருத்தைப் பண்புடனே
   பசுமைத் தமிழில் அறிந்திடலாம்!
வல்லோர் என்போர் வாழ்வுயர்ந்து
   வளரும் வழியைக் காட்டிடுவார்!
இல்லார் என்போர் யாருமின்றி
   இனிய பொங்கல் பொங்கிடலாம்!

திறமை பொங்க வேண்டும்!நல்
   தெளிவு பொங்க வேண்டும்!சீர்
பெருமை பொங்க வேண்டும்!நற்
   பேரும் பொங்க வேண்டும்!உள்
கருமை களைய வேண்டும்!பல்
   கலைகள் வளர வேண்டும்!நற்
பொறுமை காக்க வேண்டும்! தைப்
   பொங்க வேண்டும் புகழுடனே!



தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 

 

அருணா செல்வம்.