என்னுடைய “நினைக்க நினைக்க இனிக்கும் தமிழ்“ என்ற கவிதை நூலைத் தமிழக அரசு பொதுவுடமையாக அங்கீகரித்துள்ளது.
இதனால் இனி, அனைத்து அரசு பொது நூல் நிலையங்களிலும் எனது இந்தக் கவிதை நூல் இருக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
அருணா செல்வம்.
---------------------------------------------------------------
அங்கீகாரம்!! (நிகழ்வு)
---------------------------------------------------------------
அங்கீகாரம்!! (நிகழ்வு)
அது பகல்
நேரம்.
ஜார்ஜ்
கோதுமை வயல்கள் நிறைந்த ஒரு பகுதிக்கு வந்தார்.
ஒரு வயலில்
ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தாள்.
ஜார்ஜ்
ஆச்சர்யப்பட்டுக் கொண்டே அந்தப் பெண்ணிடம் வந்தார்.
“பெண்ணே..
நீ மட்டும் இங்கு தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறாயே. மற்றவர்கள் எல்லாம் எங்கே?“
என்று கேட்டார்.
“மன்னர்
பவனி வருகிறாராம். அதைப்பார்க்க எல்லோரும் சென்றிருக்கிறார்கள்“ என்றாள் அந்தப்
பெண்.
“நீ ஏன்
செல்லவில்லை?“ என்று கேட்டார் ஜார்ஜ்.
“நான்
வேடிக்கை பார்க்கச் சென்றால் எனக்குக் கூலி கிடைக்குமா? எனக்கு வேலைதான் முக்கியம்.
வேடிக்கை அல்ல.“ என்றாள் அந்தப்பெண்.
அவளது கடமை
உணர்வையும் உழைப்பையும் கண்டு மனம் மகிழ்ந்த ஜார்ஜ் மன்னர், சில தங்க நாணயங்களை
அவளிடம் கொடுத்தார்.
அந்தப்
பெண் திகைத்து அவரை நிமிர்ந்து பார்த்தாள்.
“மற்றவர்கள் இங்கு வந்தபின் அவர்களிடம் சொல்... நீங்கள் எல்லோரும் மன்னரைப்
பார்க்கப் போய் விட்டீர்கள். ஆனால் மன்னரோ இங்கு வந்து என்னைப் பார்த்துவிட்டுச்
சென்றார் என்று“
சொல்லிவிட்டு ஜார்ஜ் மன்னர் விரைந்து செல்ல...
இது
உண்மைதானா என்று நம்பமுடியாதபடி அந்தப் பெண்மணி, தன் கையிலிருந்த தங்க
நாணயங்களையும் வேகமாகச் சென்று கொண்டிருந்த ஜார்ஜ் மன்னரையும் மாறி மாறி
பார்த்தாள்.
உண்மை
தான். என்பதை அவள் கையிலிருந்த தங்க நாணயங்கள் உணர்த்தியது.
அவள்
வாய்ச்சொல்லை மற்றவர்கள் நம்பவில்லை என்றாலும் இந்த நாணயங்கள் அவர்களை
நம்பவைக்கும் என்பதை எண்ணி மகிழ்ந்தாள்.
(படித்ததில் பிடித்தது)
---------------------------------------------------

