திங்கள், 11 மார்ச், 2013

என்னடி செய்தாய் என்னை?

என்னடி செய்தாய் என்னை?
என்னேரமும் உன் நினைவே!
எண்ணிரு முறைதான் பார்த்தாலும்
என்னுள் வந்து கலந்தாயோ!

தன்னை மறந்த உலகம் என்பது
துன்பம் மறந்து உறங்குவதாம்!
என்னை மறந்து உறங்குகிறேன்!
எண்ணம் உன்னை மறக்கவில்லை!

எழுத அமர்ந்த போதும் நீ
எழுத்தில் தெரிந்து சிரிக்கின்றாய்!
எழுந்து போக நினைத்தாலோ
ஏக்கமாய் என்னைப் பார்க்கின்றாய்!

எண்ணச் சிறகை விரித்து நானோ
விண்ணில் பறக்கும் பொழுதெல்லாம்
கண்ணில் தெரியும் கற்பனைகள்
வண்ணத் தமிழின் வடிவாகும்!

இன்று அந்த நிலையில்லை!
என்ன நினைத்த அமர்ந்தாலும்
என்னில் தெரியும் காட்சியெல்லாம்
இன்பம் பொங்கும் உன்னுருவே!

தமிழைத் தொழுது எழுதிய கை
உமிழ்ந்த சொற்கள் அமிர்தமடி!
நிமிர்ந்து உன்னைக் கண்டதாலோ
தமிழில் மரபும் நழுவுதடி!

பண்ணடி பாக்கள் புனைந்தேன்! உன்
கண்ணடி பட்டதால் எனைமறந்தேன்!
என்னடித் தமிழில் பின்னலிட
என்னடி செய்தாய் என்னை?

அருணா செல்வம்.
(பழசு...!!)

32 கருத்துகள்:

கும்மாச்சி சொன்னது…

// பண்ணடி பாக்கள் புனைந்தேன்! உன்
கண்ணடி பட்டதால் எனைமறந்தேன்!
என்னடித் தமிழில் பின்னலிட
என்னடி செய்தாய் என்னை?//

அருணாவின் அழகிய வரிகள் அழகு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதாங்க தெரிய மாட்டேங்குது... இப்படி புலம்ப வச்சிட்டாங்களே... ஹிஹி...

நல்ல வரிகள் சகோ...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தமிழைத் தொழுது எழுதிய கை
உமிழ்ந்த சொற்கள் அமிர்தமடி!
நிமிர்ந்து உன்னைக் கண்டதாலோ
தமிழில் மரபும் நழுவுதடி!

தமிழைப் பின்னிய கவிதைக்கு பாராட்டுக்கள்..

பூ விழி சொன்னது…

தமிழைத் தொழுது எழுதிய கை
உமிழ்ந்த சொற்கள் அமிர்தமடி!
நிமிர்ந்து உன்னைக் கண்டதாலோ
தமிழில் மரபும் நழுவுதடி!

அருமையான சொல்லாடல்

இளமதி சொன்னது…

அருமை. வெகு சிறப்பு. வாழ்த்துக்கள் தோழி!

சிந்தும் தமிழ்மொழியாற்றலினால்
சிதறிய சொல்லினிமை கொண்டு
பண்ணும் பாக்களினால் எங்கள்
எண்ணமதை கொள்ளை கொண்டாய்!

சசிகலா சொன்னது…

நீங்களே சொல்லிட்டீங்க அமிர்தம் என்று. இனி என்ன சொல்லி வியக்க.

கவியாழி சொன்னது…

என்னடி செய்தாய் இப்படி என்னை கவிப் பாட வைப்பதற்கு?

அம்பாளடியாள் சொன்னது…

புரிகிறது புரிகிறது சொல்வதற்கு வார்த்தை இன்றி
மனம் தவிக்கும் போது இப்படித்தான் கவிதை மழை
வந்து கொட்டும் .அப்படியே இன்ப மழை தொடர்ந்து
கொட்ட வாழ்த்துக்கள் !

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை.

பெயரில்லா சொன்னது…

''..தமிழைத் தொழுது எழுதிய கை
உமிழ்ந்த சொற்கள் அமிர்தமடி!
நிமிர்ந்து உன்னைக் கண்டதாலோ
தமிழில் மரபும் நழுவுதடி!..''
நன்று நல்ல வரிகள்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

புசுசா...? இப்போ யாருங்க அது...?
(இருங்க அக்காவிடம் மாட்டிவிடுகிறேன்)

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மலர் பாலன்.

அருணா செல்வம் சொன்னது…

பண்கள் சிறந்திட பாராட்டே என்றாலும்
பெண்கள் எடுத்தெழுதும் பேறுகள் - மண்ணிலே
விண்ணையே தொட்டுவிடும் இன்பம்! இளமதியின்
வண்ணக் கவிதையின் வாழ்த்து!

நன்றி தோழி.

மகேந்திரன் சொன்னது…

///நிமிர்ந்து உன்னைக் கண்டதாலோ
தமிழில் மரபும் நழுவுதடி!////

உன் நிழல் கூட என்னில்
ஊடுருவி
என் அசைவுகளை சற்று
பொய்மையாக்கிப் போகின்றன...

அழகான கவி புனைந்தீர்கள் சகோதரி...
படிக்க படிக்க இனிப்பாக...

ஸ்ரீராம். சொன்னது…

கடைசி இரண்டு பாராக்களும் மிக அருமை. காதலின் பரவசம்!

// எண்ணச் சிறகை விரித்து நானோ
விண்ணில் பறக்கும் பொழுதெல்லாம்//

நானோ என்பது நான் என்றே வந்திருக்கலாமோ.. அல்லது நானாய்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கலக்கல். தமிழ் விளையாடுகிறது. வார்த்தைகள் உங்களுக்கு வசப்படுகின்றன. படிக்கும்போது இனிமை நிறைகிறது நெஞ்சில்

கவியாழி சொன்னது…

இதுதானே காதல் வயப்பட்ட எல்லோரும் கேட்கும் கேள்வி. அருமை உங்களின் கேள்வியும் கவிதையும்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சொல் விளையாடுகிறது உங்களிடம்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

ஹாரி R. சொன்னது…

நல்லா தான் இருக்கு

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சசிகலா.

(சசிகலா.... நீங்கள் சொன்னதால்...
நானே என்னைப் பாராட்டி முதுகில்
தட்டிக்கொண்டதால் என் கை சுளுக்கு
விழுந்துவிட்டது...
இப்பொழுது நான் என்ன செய்ய...?)

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் இப்படியான புலம்பலுக்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தோழி.... ரொம்ப இன்ப மழையில் நனைந்தால் ஜலதோசம்
பிடித்தக்கொள்ளும் இல்லையா...?

அப்புறம் விக்ஸ் அமிர்தான்ஞன் கேட்டு
பாட்டு எழுத வேண்டி வரும்.

கொஞ்சமாக நனைக்கின்றேன்... உங்களின் மனங்களை.

நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கோவைக்கவி.

அருணா செல்வம் சொன்னது…

“நானோ என்பது நான் என்றே வந்திருக்கலாமோ.. அல்லது நானாய்? “

நீங்கள் சொல்வதும் நன்றாகத் தான் இருக்கும்.
ஆனால்... “நான்“ வராது. சீர் குறையும்.
“நானாய்”.. ஏனோ அப்பொழுது எழுத வரவில்லை.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ராம்.

அருணா செல்வம் சொன்னது…


தங்களின் வருகைக்கும் அருமையான வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.

அருணா செல்வம் சொன்னது…

மகி அண்ணா...

உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை தானே....
அதிகமாகி விடப் போகிறது என்று தான் கேட்டேன்.

தங்களின் வருகைக்கும் அழகிய கவியுடன் கூடிய வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

எதற்காக இவ்வளவு சலிப்பு ஹாரி....?

(ரொம்ப நாளாய் இந்தப்பக்கம் வரவில்லை.
நிறைய படம் பார்க்கிறீர்களோ... விமர்சனத்திற்காக.)
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஹாரி.