திங்கள், 14 அக்டோபர், 2013

எது இழிவு?




இழிவென்று சொல்லிவிட்டு
   இளகாரம் பேசலாமா?!
கழிவென்ற நம்கழிவைக்
   கழிக்காமல் அடக்குவோமா?
தொழிலென்று செய்கின்றார்
   தொடர்ந்தேதான் செய்கின்றார்!
பழியொன்றும் இதிலில்லை!
   படைத்தவனின் செயலுமில்லை!

ஏனிந்தத் தொழிலென்றும்,
   எப்படித்தான் செய்கின்றார்?
கூன்மனத்தை நேராக்கி
   கொஞ்சமெனும் யோசித்தால்
மேன்மக்கள் என்போரே
   மேலிருந்து மிதித்திருக்க,
தானிருந்த நிலையினையே
   தலைநிமிரா வாழ்கின்றார்!

இல்லாமை என்றாலும்
   ஈனமெனச் சொன்னதில்லை!
கல்லாமை ஒன்றைத்தான்
   கற்றோர்கள் சாடிநிற்பர்!
நல்வாழ்வை வாழ்வதற்கு
   நல்லோர்கள் சொன்னவழி
“கல்வியெனும் ஒன்றேதான்
   கடவுளென வழிகாட்டும்!“

அருணா செல்வம்
14.10.2013





37 கருத்துகள்:

  1. உலகில் உழைத்து செய்யக் கூடிய எந்தத் தொழிலும் இழிவல்ல .
    கல்வி ஒன்றே மேன்மையைக் கொடுக்கும்.நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  2. சிறப்பாகச் சொன்னீர்கள் சகோதரி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  3. நன்றி அருணா! உங்கள் கவிதைக்கு; கீழே காணும் வரிகளுக்கு! உண்மையை உரக்கக் கூறியதற்கு! அந்த வரிகள்...

    [[ மேன்மக்கள் என்போரே
    மேலிருந்து மிதித்திருக்க,
    தானிருந்த நிலையினையே
    தலைநிமிரா வாழுகின்றார்!]]

    Plus 1 vote தமிழ் மனம். அதே சமயம் கீழே உள்ள வரிகளுக்கு நான் என்ன வோட்டு கொடுக்கிறது? தமிழ்மணம் ஒரு முறை தான் வோட்டு போட அனுமதிக்கிறது!

    _______________________
    அருணா! இந்த வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை!
    மேன்மக்கள் அமுக்குற அமுக்கில் வாழ வழியில்லாமல் அந்த தொழிலை செய்கிறார்கள்---""பழி"" என்று தெரிந்து இருந்தும்!
    உங்கள் கவிதையில் இருந்து...கீழே..

    [[தொழிலென்று செய்கின்றார்
    தொடர்ந்தேதான் செய்கின்றார்!
    பழியொன்றும் இதிலில்லை!]]

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      “தொழிலென்று செய்கின்றார்
      தொடர்ந்தேதான் செய்கின்றார்!“

      பரம்பரைத் தொழில் என்பது நம்நாட்டின் சாபக்கேடு. அது படிப்பறிவு இல்லாததால் இன்றும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

      “பழியொன்றும் இதிலில்லை!
      படைத்தவனின் செயலுமில்லை!“

      இந்தச் செயலுக்கான காரணத்தை யார் மீது பழி சுமத்துவீர்கள்.? தொழிலைச் செய்யச் சொல்பவனும் படிப்பறிவில்லாதவன். செய்பவனும் படிப்பறிவில்லாதவன்.
      அவர்களுக்கு அந்தத் தொழிலைவிட்டால் வேறு வழியும் இல்லை என்ற எண்ணத்திலே வாழும் பொழுது யாரைக் குற்றம் சொல்லவது?

      [[ மேன்மக்கள் என்போரே
      மேலிருந்து மிதித்திருக்க,
      தானிருந்த நிலையினையே
      தலைநிமிரா வாழுகின்றார்!]]

      இது தான் நிதர்சனம். இதிலிருந்து வெளிவர வேண்டுமானால் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது “கல்வி“ என்ற கடவுள் தான் என்று சொல்லி முடித்திருக்கிறேன்.

      (நம்பள்கி... உங்களுக்குக் கருத்து பிடிக்கவில்லை என்றால் மைனஸ் ஓட்டு கூட போடலாம். தமிழ்மணம் அதற்கும் வழி வைத்துள்ளது)
      நன்றி நம்பள்கி.






      நீக்கு
    2. மைனஸ் வோட்டு போடும் பழக்கம் இல்லை; வோட்டு போடாமல் சென்று விடுவேன். எல்லாவற்றையும் நம் நாட்டில் கடவுள் என்ற ஒன்றின் கோட்டில் கொண்டு வந்து அடிமையாக்கு கிறார்கள். படிப்புக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை.

      ஐந்து வயது சிறுவன் 60 வயது முத்யவ்ரை வாடா போடா என்று தன அழைக்கிறான் (ஜாதியினால்); அவன் அப்பன் எவ்வளவு படித்தாலும் அதைத்தான் மகனுக்கும் சொல்லித்தாரான்.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வதும் உண்மைதான் நம்பள்கி.
      கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  4. சமூகத்தைச் சாடும் அழகான கவிதை...

    அருமை.

    பதிலளிநீக்கு
  5. இழிவென்ன ஆனாலும்
    அதையும் துடைத்தெறியும்
    கல்வி எனும் பெருஞ்செல்வம்...
    அருமையான கவிதை சகோதரி...

    பதிலளிநீக்கு
  6. கல்வியே கடவுளென்ற
    கடைசிவரி சத்தியமாய்
    கற்றோரை ஆக்கிடுமே
    கண்ணுற்றால் இங்கேகி ...!

    ஆழமான கருத்துக்கள்
    அருமை வாழ்த்துக்கள்

    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீராளன்.

      நீக்கு
  7. வணக்கம்
    கவிதை அருமை சகோதரி வாழ்த்துக்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சகோ.

      நீக்கு
  8. நல்வாழ்வை வாழ்வதற்கு
    நல்லோர்கள் சொன்னவழி
    “கல்வியெனும் ஒன்றேதான்
    கடவுளென வழிகாட்டும்!

    “கல்வியின் சிறப்பைச் வலியுறுத்தும்
    கவிதை மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்ழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  9. ""நல்வாழ்வை வாழ்வதற்கு நல்லோர்கள் சொன்னவழி
    “கல்வியெனும் ஒன்றேதான் கடவுளென வழிகாட்டும்!“""
    மிக மிக எளிய வார்த்தைகளில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் கலவியின் சிறப்பை.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  10. கல்ல்­வி­யெ­னும் ­ஒன்­றே­தான் ­க­ட­வு­ளெ­ன ­வ­ழி­காட்­டும்! அ­ரு­மை­யா­ன ­க­ருத்­தை ­சி­றப்ப்­பா­ன ­வ­ரி­க­ளில் ­வி­ளக்க்­கி ­ம­ன­தில் ­ப­திந்­த­து ­க­வி­தை! சூப்­ப­ரு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  11. கல்விதான் கடவுள் என்பதே உண்மை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  12. கல்லாமை ஒன்றைத்தான்
    கற்றோர்கள் சாடிநிற்பர்!
    >>
    நிஜம்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  13. கல்வியெனும் ஒன்றே தான்
    கடவுள்... வெகு சிறப்பாய் சொன்னீர்கள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  14. '' இல்லாமை என்றாலும்
    ஈனமெனச் சொன்னதில்லை!
    கல்லாமை ஒன்றைத்தான்
    கற்றோர்கள் சாடிநிற்பர்!
    நல்வாழ்வை வாழ்வதற்கு
    நல்லோர்கள் சொன்னவழி
    “கல்வியெனும் ஒன்றேதான்
    கடவுளென வழிகாட்டும்!“

    உண்மை. நல்ல கவிதை பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  15. கல்விக்கு நிகர் ஏது? சரஸ்வதி பூஜை நேரத்தில்
    தகுந்த நல்ல கவிதையும் பகிர்வும்!..

    மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  16. என்ன சொல்றதுன்னு தெரியல, நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் எதைச் சொன்னாலும் கேட்க வேண்டியவர்கள்
      கேட்கப் போவது இல்லை.
      நமக்கு நாமே எதையும் சொல்லி நம் மனத்தைச் சாமாதானம் செய்துக்கொள்வோம்.

      நன்றி தோழி.

      நீக்கு
  17. Good poem with good message. Congrats. But who will send her to school? If parents are also beggars?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிச்சைக்காரர்கள் பிச்சை எடுத்தாவது
      தன் வாரிசுகளைப் படிக்க வைக்கலாம்.

      நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பனிமலர்.

      நீக்கு