டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் ஒரு
சமயம் பாட்னாவிலிருந்து தனது ஊருக்குச் செல்வதற்காக விசைப் படகில் ஏறி கங்கை
நதியில் பயணம் செய்தார்.
படகோட்டி படகைச் செலுத்திக்
கொண்டிருந்தார்.
இராஜேந்திரப் பிரசாத்திற்கு எதிரே
அமர்ந்திருந்த ஓர் இளைஞன் ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான்.
அவன் வெளியிட்ட புகையின் நெடி
இராஜேந்திரப் பிரசாத்தை மிகவும் வருத்தியது.
அதைப் பொறுக்க முடியாத அவர் அந்த
இளைஞனைப் பார்த்து, “தம்பி... அந்த சிகரெட் உன்னுடையது தானே...?“ என்று கேட்டார்.
“ஆமாம்“ என்றான் அந்த இளைஞன்.
“அப்படியென்றால் இந்த புகை
யாருடையது...?“
இளைஞன் சட்டென்று நிமிர்ந்து அவரைப்
பார்த்தான்.
“சிகரெட் உன்னுடையது என்றால் இந்தப்
புகையும் உன்னுடையதாகத் தானே இருக்க வேண்டும். அதை ஏன் வெளியே ஊதி என்
போன்றவர்களைக் கஷ்டப்படுத்துகிறாய்?“ என்று அமைதியாக கேட்டார் இராஜேந்திர பிரசாத்.
அவரது பேச்சிலிருந்த நியாயத்தை
உணர்ந்த அந்த இளைஞன், “ஐயா... என்னை மன்னித்து விடுங்கள்“ என்று கூறிவிட்டு
தன்னிடமிருந்த சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் நதிக்குள் வீசி எறிந்தான்.
இராஜேந்திர பிரசாத் மகிழ்ச்சியுடன்
தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.