வெள்ளி, 18 அக்டோபர், 2013

பார்வை!! (நிமிடக்கதை)     
   சிவநேசன் அருகில் அமர்ந்திருந்த மனைவியைச் சற்றும் சிந்திக்காமல், எதிரில் சென்று கொண்டிருந்த பைக்கின், பின்னால் அமர்ந்திருந்த பெண்ணையே பார்த்தபடி கரை ஓட்டிக் கொண்டிருந்தான்.
    அந்தப் பெண் வடநாட்டு பெண்ணைப் போல் இருந்தாள். வெள்ளையான உடம்பில் மெல்லிய கறுப்புநிற சேலை அவள் அழகை மேலும் தூக்கிக்காட்டியது.
    அதிலும் அவள் முந்தானையை ஒற்றையாக விட்டுப் புடைவையைக் கட்டியிருந்ததால் அவளின் வயிறு, இடுப்புப்பாகங்கள் நிலவின் மேல் மெல்லிய கருமேகம் மூடுவதைப்போல மிகவும் அழகாக தெரிந்தது.
    காற்றின் அசைவில் சரியத்துடிக்கும் முந்தானையைக் கூட அவள் கவனிக்காதவளாய் ஏதோ சிந்தனையில் இருந்தாள்.
    தோள்பட்டையின் நுனி வரையில் வந்து  இறங்கிவிட்ட  முந்தானை இன்னும் முழுவதுமாக தோள்பட்டையை விட்டு இறங்காதா என்று சிவநேசனின் கண்கள் ஏங்கியது.
   ஆனால் அதற்குள் அவர்கள் போக வேண்டிய வழி வரவே அதையும் மனைவி நினைவு படுத்த, பெருமூச்சியுடன் வண்டியைத் திருப்பினான்.
   “ஏங்க... எதிரில் போன பெண்ணைப் பார்த்தீங்களா...?“ மனைவி கேட்டாள்.
    நாம் பார்த்ததை இவள் பார்த்திருப்பாளோ... நிச்சயம் பார்த்திருப்பாள். மனத்திற்குள் எண்ணியவனாய் “ம்“ என்ற ஒற்றை எழுத்தில் ஒத்துக்கொண்டான்.
    “ஏங்க பார்த்தீங்க இல்லை...? அந்தப் பெண்ணுடைய முந்தானை இன்னும் கொஞ்சம் விட்டா வண்டி சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும். நீங்கள் கொஞ்சம் முன்னால போய் அந்தப் பெண்ணின் முந்தானையைச் சரி செய்யச் சொல்லி இருக்கலாம். நீங்கள் சொல்லுவீங்கன்னு நான் நெனச்சேன். பாவம் அவள். ஏதோ யோசனையில் செல்கிறாள். இந்த உதவியைக் கூட நம்மால செய்ய முடியாமல் போயிடுச்சி. ம்ம்ம்“.... என்றபடி பெருமூச்சு விட்டாள்.
   சிவநேசனுக்கு அப்பொழுது தான் மனத்தில் சுறுக்கென்றது. நம் சுய இன்பத்திற்காக மற்றவர்களின் அவசியத்தைக் கூட உணராமல் இருந்துவிட்டோமே.... தன் மனைவியின் பார்வைக்கும் தன் பார்வைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வருந்தினான்.
  
அருணா செல்வம்.
18.10.2013

உங்களின் பார்வைக்கு!!இந்தப்படம் உங்கள் கண்களுக்கு எப்படி தெரிகிறது?  

42 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

படத்தில் "ஆஆஆ" என்று சிவநேசனின் கண்கள் போல் தெரிகிறது...!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களின் கருத்துரைக்கு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Happiness.html

Yaathoramani.blogspot.com சொன்னது…

பார்வையின் வித்தியாசத்தை
வர்ணிப்பின் மூலமும் பின்
மனைவியின் வார்த்தையின் மூலம்
சொல்லிப்போனது மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 3

கும்மாச்சி சொன்னது…

ஒரு நிமிடக்கதை, நல்ல படிப்பினையூட்டும் கதை.

பாரிவையில் உள்ள வித்தயாசத்தை அழகாகவே சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

கதை நன்றாக அமைந்துள்ளது உதவி செய்யும் மனம் இருந்தும்உதவாமல் போனது... மனவேதனைதான்....
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

தன் கணவன் ஒரு ஜொள்ளன் என்பதை தெரிந்து கொள்ளாத மனைவியும் இவ்வையகத்தில் உண்டோ ?
த .ம 5

ஜீவா சொன்னது…

கதை நல்லா இருக்கு...

ம்ம்ம்ம் பாம்பு பக்கத்துல வரும் போது குருவி கண்டிப்பா பறந்துடும்னு தோணுது.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்.... ரசித்தேன்....

எனக்கு இரண்டு நிமிடம் பிடித்தது

இளமதி சொன்னது…

பார்வையின் வித்தியாசங்கள்.. பரிணமித்த கதை!.

நல்ல உணர்வுறுத்தல்!. அருமை!

வாழ்த்துக்கள் தோழி!

என் பார்வையில்...
பதம்பார்க்க எண்ணும் பாம்பை அறியாத அப்பிராணிக் குருவி... :(

உஷா அன்பரசு சொன்னது…

அந்த அப்பாவி மனைவிதான் பாவம். ஆத்துக்கார் சைட் அடிக்கிறது கூட தெரியாம ...! எப்படியோ அவங்க சொன்னது ஆத்துக்காருக்கு ஒரு அறை விட்டாப்பல இருக்கு..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

பார்வைகளின் வித்தியாசத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பின்னால் தன்னைத் தாக்க வரும் ஆபத்தை அறியாத அழகிய பறவை..

நம்பள்கி சொன்னது…

[[Bagawanjee தன் கணவன் ஒரு ஜொள்ளன் என்பதை தெரிந்து கொள்ளாத மனைவியும் இவ்வையகத்தில் உண்டோ ?]]

ஜொள் விடாதா ஆணே இல்லை என்பது தெரியாத பென்னுண்டோ!

கதை நன்னா இருந்தது!
நமது ஒட்டு பிளஸ் 1 போட்டு மகுடத்தில் ஏற்றுவோம்!

Seeni சொன்னது…

paarvai viththiyaasam arumai...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

நல்ல நெறியினை நல்கும் கதைபடைத்த
வல்ல அருணாவை வாழ்த்து!

மகேந்திரன் சொன்னது…

Perception makes personality ..


பார்வைகள் ஒருவருக்கொருவர் மாறுகின்றன...
பார்வைகளை சரியாக்கிக்கொண்டால்
மனம் அமைதியாகும்...

அருமையான கதை சகோதரி...

Unknown சொன்னது…

ஒவ்வொருவரின் பார்வையிலுள்ள வித்தியாசத்தை இக்கதை நன்கு எடுத்துக்காட்டுகிறது. அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கதை! நன்றி!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

பார்த்துவிட்டேன். நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

நன்றி இரமணி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ரூபன்.

அருணா செல்வம் சொன்னது…

“கதை“யில் சிவநேசனின் மனைவி இருக்கிறாளே.....!!!!!

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பகவான் ஜி.

அருணா செல்வம் சொன்னது…

எனக்கு குருவி பறந்து விட வேண்டும் என்ற ஆசை தான் அதிகமாக இருக்கிறது. ஆனால்....(

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

அவ்வளவு நேரம் யோசித்தீர்களா...?
நானும் அந்தப் படத்தைப் பார்த்து எவ்வளவு தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார்கள்.... என்று வியந்தேன்.

ஆனால் அந்தக் குருவியின் நிலையையும் எண்ணி கவலைப்பட்டேன்.
குருவி நிச்சயம் அந்தப் பாம்பு வயிற்றுக்குத் தான். அந்த மலைப்பாம்பின் வேகம் படத்தில் தெரிகிறது.

என்னுடையப் பார்வையில் படமும் அழகாக இருக்கிறது.
அதே சமயம் குருவியை நினைக்க பாவமாகவும் இருக்கிறது.
ஆனால் இது படம். நாம் எதுவும் செய்ய முடியாது. ஒரு சமயம் காயத்ரி தேவி சொன்னது போல் குருவி பறந்துவிட்டிருக்கும் என்று நினைத்து மனத்தைத் தேற்றிக் கொள்கிறேன்.

நன்றி கவிதை வீதி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி தோழி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி குமார்.

அருணா செல்வம் சொன்னது…

எல்லா ஆண்களுமே இப்படி தானா....? புரிந்து கொண்டேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நம்பள்கி.
ப்ளஸ் 1 ஓட்டிற்கும் நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றஜ சீனி ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் குறளுக்கும்
மிக்க நன்றி கவிஞர்.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சுரேஷ்.

Unknown சொன்னது…


[ சபல புத்தி ஆண்களுக்கு நல்ல சவுக்கடி!

பெயரில்லா சொன்னது…

இரண்டுநிமிடக்கதையாக இருந்தாலும் எல்லோரையும் இருநாட்களாவது யோசிக்கவைக்கும் கதை அருமை..பலரின் மன அழுக்குகளைக் கழுவ இதுபோன்ற கதைகள் அவசியமே...

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி புலவர் ஐயா.

அருணா செல்வம் சொன்னது…

இரண்டு நிமிடம் பிடித்ததா...? இன்னும் கதையைச் சுறுக்க முயற்சிக்கிறேன்.

தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கலியபெருமாள் ஐயா.

கே. பி. ஜனா... சொன்னது…

அருமையான சிறு கதை!

அருணா செல்வம் சொன்னது…

தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஐயா.