புதன், 3 ஏப்ரல், 2013

நான் வாங்கிய “பல்பு“ - 2 (நகைச்சுவை நிகழ்வு)





 
நட்புறவுகளுக்கு வணக்கம்.
     ஒரு முறை என் தோழியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவளின் மகன் பத்து அல்லது பதினொன்று வயதிருக்கும். என்னிடம் அவ்வளவாக ஒட்ட மாட்டான் என்றாலும் பார்த்த மாத்திரத்தில் ஹாய்என்று ஒரு புன்முறுவலுடன் சென்றுவிடுவான். மற்ற பிள்ளைகள் என்னிடம் அன்பாக பேசி விளையாடுவார்கள்.
    இவன் மட்டும் என்னிடம் ஒட்டாமல் இருப்பது குறித்து எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். நானே என் தோழியிடம் கேட்ட பொழுது “நானும் என் கணவரும் உன் கவிதை, கதைகளைப் பற்றி பேசும் பொழுதெல்லாம் அவனும் பல முறை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறான். நீ ஒரு எழுத்தாளர் என்ற மரியாதைக்குத் தான் அவன் தள்ளியே இருக்கிறான் என்று நினைக்கிறேன். மற்றபடி ஒன்றுமிருக்காது“  என்றாள்.
   சே... நாம எழுதுகிறோம் என்ற ஒரு காரணத்திற்காக ஒரு குழந்தை நமக்கு மரியாதை கொடுத்துத் தள்ளி இருப்பதா....என்று எனக்குள் யோசித்து இது சரியில்லையே என்று நானே அவனின் அறைக்குள் சென்றேன்.
    அப்பொழுது அவன் தன் தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தான். நான் போய் அவனருகில் அமர்ந்து “வினித்... என்னையும் உன் வியாட்டில் சேர்த்துக் கொள்வாயா...? எனக்கும் இந்த விளையாட்டு பிடிக்கும்“ என்றேன்.
    அவன் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு “உங்களை இந்த விளையாட்டில் சேர்க்க முடியாது“ என்றான் கறாராக. நானும் விடாமல், “வினீத்... என் கூட விளையாட உன்னை மாதிரி சின்ன பிள்ளைங்க இல்லையடா... உங்க அம்மா கூட ஏதோ டிபன் பண்ண போயிட்டா... ப்லீஸ்ஸ்ஸ்டா....“ என்று அவன் அளவிற்கு இறங்கி கேட்டேன்.
    அவனும் கொஞ்சம் யோசித்துவிட்டு, “சரி உங்களைச் சேர்த்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் சரியான பதில் சொன்னால் விளையாட்டில் உங்களைச் சேர்த்துக் கொள்கிறேன்.“  என்றான்.
    நானும் உடனே “சரி“ என்றேன்.
    அவனும்,  “ஆண்ட்டி... நான் கேள்வியை ஒரேயொரு முறை தான் சொல்வேன். நீங்கள் சட்டென்று ஒரே ஒரு பதிலை மட்டும் தான் சொல்ல வேண்டும். நேரமெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தப்பான பதிலை நீங்கள் சொல்லிவிட்டால் உங்களை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டோம்“  என்றான்.
    நானும் மனத்திற்குள் இந்த சின்ன பையன் என்ன பெரிசா கேட்டுவிடப் போகிறான்... என்று நினைத்துக்கொண்டே “சரி கேளுடா“ என்றேன்.
    அவனும் (ஆக் ஷனுடன்) சொல்லத் துவங்கினான்.
    “ராத்திரி நேரம். லைட்டுலேயும் ரொம்ப வெளிச்சம் இல்லை. அங்கே.... நான்கு பெரிய ரோடுகள் சந்திக்கிற ஒரு பெரிய இடம். (ஜங்சன்). பெரிய ஊர்களுக்குப் போகும் ரோடுகள் என்பதால் எல்லா வண்டியுமே பாஸ்ட்டா தான் போவுமில்லையா...? அந்த நேரத்தில் ஒரு ரோட்டில் இரண்டு பைக்கில் ரெண்டு ரெண்டு காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் பயங்கர வேகத்துல தலையில ஹெல்மெட் இல்லாமல் பயங்கர ஸ்பீடா வர்றாங்க. அந்த ரோட்டுக்கு எதிரில ஒரு தண்ணீலாரி பயங்கர ஸ்பீடா வருது.
    அதுக்கு இந்தப்பக்கம் இருக்கிற ரோட்டுல ஒரு மாட்டு வண்டியும், அதன் பின்னால ஒரு நார்த் இந்தியன் டூரிஸ் பஸ்சும் பாஸ்ட்டா வருது. அதுக்கு எதிர இருக்கிற ரோட்டுல ஒரு மீன் ஏத்திக்கினு போற வண்டி ஐஸ்தண்ணீ கரைஞ்சி ஊத்த... ஊத்த... ஐஸ் கரையிரதுக்குள்ள ஊர் போய் சேரனும்ன்னு முன்னாடி வேகமா போய்கொண்டிருக்கிற பஸ்சையும் ஓவர்டேக் செஞ்சி ஸ்பீடா வருது. எல்லாமே கிட்டத்தட்ட அந்த ஜங்கன் கிட்ட வந்துடுச்சி. ஓ. கே... வா..? என்றான்.
    அவன் சொல்ல சொல்ல நானும் எல்லாவற்றையும் உங்களைப் போலவே கண்முன் கொண்டுவந்து வைத்துவிட்டதால் “ஓ.கே“ என்று தலையாட்டினேன்.
    “நல்லா கேட்டுக்கோங்க.... உடனே பதில் சொல்லனும்...ம்ம்ம்...“ என்று சொல்லிவிட்டு கேள்வியைக் கேட்டான். “இப்போ அந்த நேரத்தில் அங்கே என்ன நடக்கும்?  இது தான் கேள்வி.“ என்றான்.
     நானும் கொஞ்சம் யோசித்துவிட்டு இது போய் இதை இடிக்கும்... அது போய் அதை இடிக்கும் என்று விவரித்தால்... பதில் பெரியதாகிவிடுமே என்று நினைத்து ஒரே வார்த்தையில் “அங்கே ஒரு ஆக்ஸிடென்ட் நடக்கும்“ என்றேன் நான் கண்டுபிடித்ததை!!
     அவன் உடனே சொன்னான். “உங்களை எங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள முடியாது. நீங்கள் போகலாம்“ என்று
    எனக்கோ அதிர்ச்சி!!!
    சரி அப்போதும் அங்கே எதுவும் விபத்து நடக்கவில்லையோ.... என்று சந்தேகம் எனக்கு வர... “வினீத்.... இன்னும் ஒரே ஒரு சான்ஸ் குடுடா...“  என்று கெஞ்சலாகக் கேட்டேன்.
    அவனும் என்னைப் பாவமாகப் பார்த்துவிட்டு “சரி ஒரே ஒரு சான்ஸ் தான். அதுக்கு மேல கொடுக்க மாட்டேன். சொல்லுங்கள்“ என்றான்.
    நானும் உடனே... அங்கே எதுவுமே நடக்கவில்லை. சாதாரணமாகவே இருந்தது“ என்றேன்.
    அவனும் ஒரு மாதிரி முகத்தை அலட்சியமாக வைத்துக் கொண்டு “இதுவும் இல்லை. நீங்கள் போகலாம்“ என்றான்.
    நான் குழம்பிப் போய்விட்டேன். அங்கேயே உட்கார்ந்து பதிலை யோசித்தேன்.... யோசித்தேன்.... யோசித்தேன்.....
    
    நண்பர்களே உங்கள் யாருக்காவது உடனே பதில் தெரிந்திருந்தால் நீங்கள் “நீங்கள் புத்திசாளிகள் தான்.!!“
    என்னைப் போல் என் கோணத்திலேயே யோசிப்பவர்களுக்குக் கொஞ்சம் நேரம் தருகிறேன்.
    பதில் தெரியவில்லை என்றால், என்னைப்போல் உண்மையை ஒத்துக்கொண்டு கீழே சென்று பதிலைப் படியுங்கள்..

-

-

-


-


--


--

-

-
-

--

    நான் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவனே சொன்னான். “அம்மா அப்பா சொல்லுவாங்க... நீங்கள் நல்லா எழுதுவீங்கன்னு. நிறைய பேருக்கு உங்க எழுத்துப் பிடிக்கும்ன்னு... உங்களுக்கு எல்லாமே தெரியும்ன்னு சொன்னாங்க. ஆனால் இந்தச் சின்ன கேள்விக்குப் பதில் சொல்ல தெரியலையே...“  என்றான்.
    எனக்கு மனத்தில் கொஞ்சம் வருத்தம் தான். வெளியில் காட்டிக்கொள்ளாமல்.... “சரி வினீத்... எனக்குப் பதில் தெரியவில்லை தான். நீயே சொல்லு. அதன் பதில் தான் என்ன?“ என்றேன்.
    அவன் சொன்னான்.... “அங்கே அந்த இடத்தில் அந்த நேரத்தில் மாடு நடக்கும்“  என்று.
    அதற்கு மேல் எனக்குப் பேச எதுவும் இல்லாத்தால் மண்டையில் இருந்த பல்பும் மங்கி போக எழுந்து வந்துவிட்டேன். (வேற வழி???)

அருணா செல்வம்.

36 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும்
      அட்டகாசமான அசட்டுச் சிரிப்பிற்கும்
      மிக்க நன்றி நிஜாம் ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. உங்களின் இரசிப்பை நான்
      வார்த்தையின் காண்கிறேன் பிரேம்.

      நன்றி.

      நீக்கு
  3. மாடு எங்கருந்து நடக்குமாம்? மாட்டு வண்டியும் ஸ்பீடா வர்றதால்ல பயல் கதை வுட்டான்? ஆக, மாடும் ஓடும், எதுவும் நடக்காதுன்றதே சரி... இப்படிச் சொல்லி மடக்கத் தெரியாததால நீங்க வாங்கினது பல்புங்கறதும் சரிதான் அருணா... ஹி... ஹி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் பால கணேஷ் ஐயா.

      வினீத்... சரியாகத்தான் சொன்னான். அதாவது இந்தப்பக்க இருக்கிற ரோட்டுல ஒரு மாட்டு வண்டியை ஒரு டூரிஸ் பஸ் ஓவர் டேக் செய்து போனது என்று.
      நான் தான் தவறுதலாக எழுதி விட்டிருக்கிறேன்.
      (தவிர இரவு நேரத்தில் வண்டியோட்டி துர்ங்கிக்கொண்டு இருக்க... மாடு அதுபாட்டுக்கு மெதுவாக ரோட்டில் போகும். பார்த்திருக்கிறேன்)
      இருந்தாலும் அவன் சொன்ன மாட்டைப்பற்றிக் கொஞ்சமும் நான் சிந்திக்கவில்லை.
      அவனிடம் நான் வாங்கியது “பல்பு“ தான் என்பதை
      ஒத்துக்கொள்கிறேன்.

      நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு
  4. ஹி ஹி என்னைவிட புத்திசாலியாக இருக்கானே வினீத்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க ஸ்கூல் பையன்.
      உங்களை மாதிரியெல்லாம் எனக்கு
      யோசிக்கத் தெரியவில்லை.

      நன்றி.

      நீக்கு
  5. ஹா... ஹா...

    பாலகணேஷ் ஐயா சொன்னது தான் சரி...

    இந்தக் கால குழந்தைகள் கிட்டே கொஞ்சம் ...ம்ஹீம்... அதிகமாகவே கவனமாகத்தான் இருக்கணும்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதாங்க தனபாலன் ஐயா.

      நான் இது மாதிரி கவனக்குறைவால் சின்னப் பிள்ளைகளிடம் போய் நிறைய “பல்பு“ வாங்கியிருக்கிறேன்.

      நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  6. எல்லோருக்குமே உங்களைபோன்ற அனுபவம் உண்டு.சரியான காமடி அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா...?
      நீங்கள் பட்ட அனுபவங்களை எங்களுடன்
      பகிர்ந்தால் நாங்களும் இரசித்து ஜாக்கிரதையாக இருப்போம்...

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  7. இனிமேல் சின்னப் பசங்களுடன் ஜாக்கிருதையாய் இருக்க வேணும்
    அம்புட்டுத்தான் தோழி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிமேல் நீங்கள் சொன்னது போல்
      ஜாக்கிரதையாக நடந்துக்கிறேன் தோழி.

      வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நல்ல பல்புதான்
    பதிவு செய்த விதம் அருமை
    தொடர்ந்த பல்பு வாங்கவும் அதை
    எங்களுக்கு பதிவாக்கித் தரவும் வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னங்க இரமணி ஐயா இது...
      தொடர்ந்து நான் இன்னும் “பல்பு“ வாங்கனுமா...?

      (வாங்கிய “பல்பு“களே இன்னும் நிறைய இருக்கிறது.)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்(?) வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  9. நான் நினச்ச பல்புதான். சில நேரங்களில் தெரிஞ்சுது கூட மறந்து போயிடும்.பசங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.நம்மை ஈசிய முட்டாளாக்கிடுவாங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ஏப்ரல் மாதம் இல்லையா...?

      ஆனைக்கே அடி சறுக்கும் எனும் போது
      அருணாவிற்கு அடி சறுக்காதா...?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  10. அது என்ன இப்படி சொல்லிடீங்க பெரிவங்கள் ஆன பின்பு அந்த ரீதியில்தான் பதில் சொல்ல முடியும் சின்னவங்க புத்திசாலியாக இருந்தாலும் அவங்க பதிலில் அவங்க சாயல் தெரியும்
    அவன் சொன்னவிதமும் ஸ்பீட் தானே விடுங்க பாத்துகலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.... இப்படித்தான் மனத்தைத் தேத்திக்கொள்ள வேண்டியுள்ளது மலர்பாலன்.
      ஆனால் பாருங்கள்... சின்னப்பிள்ளைகளிடம் நாமும்
      சின்னப்பிள்ளைத் தனமாகத் தான் யோசிக்க வேண்டும்... என்பதை புரிந்துக் கொண்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  11. நீங்கள் வாங்கியது 'பல்பு 'அல்ல !டியுப் லைட் தான் !அதுதான் எரிவதற்கு நேரம் எடுத்துக் கொள்ளும் !இருந்தாலும் அதிக வெளிச்சம் தருவதால் எல்லோருக்கும் பிடிக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வாங்கிய “பல்பை“ சமாளிக்க
      இப்படி ஒரு விளக்கமா...?

      எப்படியோ... நான் வாங்கிய “பல்பு“
      அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தால் சரி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  12. நல்ல பல்பு தான்! :

    சுவையான பகிர்வுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிச்சம் நிறைய வந்தது தான்.
      அதனால் நீங்கள் சொன்னது போல
      “நல்ல பல்பு“ தான் வாங்கியிருக்கிறேன்.

      வாழ்த்திற்கு மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      நன்றி சுடர்விழி தோழி.

      நீக்கு
  14. இது மாதிரி நிறைய நம்ம கைவசம் இருக்கு...ஒன்னு இப்போ...!

    ரயில் வரும் பொழுது, ரயில்வே கேட் ஏன் மூடியிருக்கு?

    ஒரே பதில்: கேட்டை மூடா விட்டால், ரயில் ரோடுக்கு வந்துவிடும்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நம்பள்கி.

      நான் படித்ததை எல்லாம் இங்கே எழுத வரவில்லை.
      அதற்கு வலைக்குள் நிறையப் பேர்கள் இருக்கிறார்கள்.

      இது என் அனுபவத்தை (வாங்கிய “பல்பை“) மட்டும் எழுதினேன்.

      நன்றி நம்பள்கி.

      நீக்கு
  15. அருணா! அந்த பொடியனுக்கு நீங்கள் பல்பு கொடுக்க மற்றுமொன்று!

    ஒரு கோழியும் அதன் மூன்று குஞ்சுகளும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து சென்றபோது, அம்மா கோழியிடம் முதல் கோழிக் குஞ்சு சொல்லியது, "எனக்கு பின்னால் இரண்டு கோழிக் குஞ்சுகளும் பத்திரமாக வருகின்றது" என்று.

    இரண்டாவது கோழிக் குஞ்சு சொல்லியது, "எனக்கு பின்னால் ஒரு கோழிக் குஞ்சு பத்திரமாக வருகிறது" என்று.

    கடைசியில் வந்த குஞ்சும் சொல்லியது, "எனக்கு பின்னாலும் ஒரு கோழிக் குஞ்சு பத்திரமாக வருகிறது" என்று.

    அது தான் கடைசி கோழிக் குஞ்சாச்சே? அப்புறம் அதுக்கு பின்னாடி உன்னொரு கோழிக் குஞ்சு எப்படி? இந்த கணக்கு சரியா? கடைசி குஞ்சு அப்படி சொல்ல என்ன காரணம்?

    பதில் கீழே...
    \
    \
    \
    \
    \
    \
    \
    \
    \
    \
    \
    \
    \
    கடைசி கோழிக் குஞ்சு பொய் சொல்லிடுச்சு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்பள்கி.... என்னை விட நீங்கள் தான்
      அதிகம் “பல்ப்“ வாங்கி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்....

      “வாங்கியதை“ நிறைய நிறைவாய் எழுதுங்கள்.
      நாங்களும் இரசித்து மகிழ்கிறோம்.

      நீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிப்பு . சிறு பிள்ளைகள் எவ்வளவு நுணுக்கமாய் , நகைச்சுவையாய் யோசிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு.

    சில கேள்விகளின் பதில் மிகவும் எளிதாய் இருக்கும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      கருத்திற்கும் மிக்க நன்றி சுகுமார் ஐயா.

      நீக்கு
  18. பல்பு வாங்கினாலும் பதிவு சுகமாக இருக்கு!

    பதிலளிநீக்கு
  19. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி புலவர் ஐயா.

    பதிலளிநீக்கு