நட்புறவுகளுக்கு வணக்கம்.
இந்தப்பாடலில் கடைசில் நான் புள்ளி
வைத்த இடத்தை நிரப்பினால் தான் பாடல்
முழுமை பெறும். (நான் யாரைத் தழுவிட அழைத்தேன் என்பது தெரியும்)
விருப்பப்பட்டவர்கள் அந்த மூன்றெழுத்துச்
சொல்லை நிரப்பலாம். தெரியவில்லை என்றால்.... தெரியவில்லை என்றாவது கருத்திடுங்கள்.
பத்துக்கு மேல் கருத்துக்கள் வந்ததும் வெளியிடுகிறேன்.
நன்றி
ஓடி வந்து தழுவி விடு!
பல்லவி
ஓடி வந்து தழுவி விடு! – என்னைக்
கூடி உடன் களித்து விடு!
அநுபல்லவி
தேடி உன்னை அழைக்கின்றேன்! – தேவி
தேகம் புகுந்து உலகை மறக்கவிடு!
சரணங்கள்
உறவில் ஆயிரம் தொல்லையம்மா! – வரும்
வரவும் சேர்வ தில்லையம்மா!
நிரந்தர வேலை இல்லையம்மா! – நிதம்
இரவினில் நீவர வில்லையம்மா! (ஓடி)
ஏழைகள் இடத்தில் இருக்கின்றாய்! – வெறும்
கோழைகள் இடத்திலும் இருக்கின்றாய்!
காரணம் இன்றியே என்னிடத்தில் –வந்து
கட்டித் தழுவாமல் இருக்கின்றாய்! (ஓடி)
தேக்கங்கள் பற்பல இருந்திடட்டும்! – நெஞ்சில்
ஏக்கங்கள் ஆயிரம் இருந்திடட்டும்!
தாக்கங்கள் உள்ளத்தில் இருந்தாலும் - நல்ல
ஊக்கத்தைத் தந்திட வந்திடம்மா! (ஓடி)
துன்பங்கள் வந்தே போனாலும் – வளர்
இன்பத்தில் மனமோ திளைத்தாலும்
தின்றிடும் உணர்வு கரைந்தாலும் – ---------
தேவியே நீவர வாழ்வேனம்மா! – (ஓடி)
அருணா செல்வம்
10.07.2014
